x
x
x
cart-added The item has been added to your cart.

2018 August Month’s Rasi Palan for Meenam

மீனம் ராசி – பொதுப்பலன்கள்

இந்த மாதத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில், நற்பெயரை இழக்க வாய்ப்பு உள்ளது. தடைகள் காரணமாக பின்தங்கிய நிலையில் இருப்பதைத் தவிர்க்கவும். உங்கள் ஏமாற்ற மனப்பான்மை காரணமாக, நீங்கள் சரியான முடிவுகளை எடுக்க முடியாது. உங்களைச் சுற்றியுள்ளவர்களை நீங்கள் தவறாக புரிந்துகொள்வீர்கள். உங்கள் சமூக வட்டத்தில் சர்ச்சைக்குரிய வாதங்களைத் தவிர்க்கவும். நிதி நெருக்கடி உங்கள் மனதில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். தேவையற்ற பயணங்கள் மற்றும் வீணான செலவுகளை தவிர்க்கவும். அமைதியான வாழ்க்கை வாழ உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். ஆரோக்கிய பிரச்சினைகளிலிருந்து விடுபட மருத்துவ சோதனை போன்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு எச்சரிக்கையுடன் இருங்கள்.

2018-august-months-rasi-palan-for-meenam

மீனம் ராசி – காதல் / திருமணம்

நேர்மறை எண்ணங்கள் மற்றும் ஆற்றல்கள் மூலம் நீங்கள் திருப்தி அடைவீர்கள். சிறிய தாமத்திற்கு பின் உங்களுடைய உறவு பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். உங்கள் துணையை நன்கு புரிந்து கொள்ள நேர்மறை உக்தியை தொடருங்கள். குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகளை நீங்கள் தீர்ப்பீர்கள். உங்களுடைய புதிய யோசனைகளின் மூலம் திருமண சச்சரவுகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சந்திரன் பூஜை

மீனம் ராசி – நிதி நிலைமை

இந்த மாதம் நிதிநிலைமையை கவனமாக சமநிலையில் வைத்திருக்க வேண்டும். நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணங்கள் அல்லது கடன்கள் ஏதேனும் இருப்பின் அவற்றைச் செலுத்த முன்னுரிமை கொடுங்கள். உங்களுடைய வீட்டு வசதிகளுக்காக வீட்டுப்பொருட்களை வாங்குவதற்கு அதிகம் செலவாகலாம். உங்களுடைய தேவைகளை மறு பரிசீலனை செய்து செலவினங்களை தள்ளிப்போட முயற்சி செய்யுங்கள்.

நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: குரு பூஜை

மீனம் ராசி – வேலை

இந்த மாதம் வேலையில் சாதாரணமான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணிகளை முடிக்கக்கூடிய சாத்தியம் உள்ளதா என்று அறியாமல் அந்தப் பணிகளை மேற்கொள்வதை தவிர்க்கவும். பணிகளை நிறைவு செய்வதற்கு நீங்கள் அதிக நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். உங்கள் கீழே பணிபுரிபவர்களிடம் நட்புறவோடு இருங்கள். உங்கள் பணிகள் எளிதாக முடிவதற்கு அது ஆதரவாக இருக்கும்.

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: செவ்வாய் பூஜை

மீனம் ராசி – தொழில்

வியாபாரிகளுக்கு இந்த மாதம் சாதாரணமாக இருக்கும். உங்கள் முயற்சிகளைத் தொடர வேண்டும். சில பணிகள் செய்யும் போது அர்ப்பணிப்பு உணர்வோடு வேலை செய்யும் கூட்டாளிகளை நம்புங்கள். சரியாக வேலையை முடிக்க அவர்களுக்கு போதுமான நேரத்தைக் கொடுங்கள். வரவிருக்கும் பணிகளுக்கு புதிய வேலை ஆட்கள் நியமிக்கும் சூழல் ஏற்படலாம்.

மீனம் ராசி – தொழில் வல்லுநர்

உங்கள் தொழிலில் நீங்கள் பொது மக்களோடு அதிக தொடர்போடு இருக்க நேரிடும். அவர்கள் உங்களுடைய நிலையை தங்களுக்கு சாதகமாக நல்லவற்றிற்கோ அல்லது தீய செயல்களுக்கோ பயன்படுத்திக் கொள்வார்கள். தகவல்களை பரிமாறிக் கொள்ளும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிலுவையிலுள்ள வேலைகளை முடிப்பதற்கு உங்கள் நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும். விரும்பத்தக்கத் திறமைகள் இருப்பினும், அதை நீங்கள் பயன்படுத்த முடியாது.

மீனம் ராசி – ஆரோக்கியம்

இந்த மாதம் சராசரி ஆரோக்கியம் காணப்படும். நீங்கள் உங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சிறிய பிரச்சினைகளைக் கூடப் புறக்கணிக்காமல் உங்கள் மருத்துவரின் முறையான ஆலோசனையைப் பெறுங்கள். உடலில் கொழுப்பின் அளவு சற்றே அதிகரிக்கும். கிருமி சம்பந்தப்பட்ட வியாதிகளால் பாதிக்கப்படலாம். உணவு கட்டுப்பாட்டை பராமரிப்பதன் மூலம் உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கச் செய்யலாம்.

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை

மீனம் ராசி – மாணவர்கள்

இது மாதத்தில் மாணவர்களுக்கு மனரீதியிலான மாற்றங்களும் ஏற்ற இறக்கங்களும் காணப்படும். உங்களின் பெரும்பாலான முடிவுகள் தவறாகும். எனவே உங்கள் முடிவுகளை சரிபார்க்க இரண்டாவது ஆலோசனை பெறுங்கள். பாடத்தை நன்றாகப் புரிந்து கொள்வதற்குப் படிக்கும் நேரத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள். கேளிக்கை விழாவிலும், பயணங்களிலும் உங்களுடைய ஆர்வத்தைக் காண்பிப்பீர்கள். அது உங்களுடைய பாடங்களை திட்டமிட்டபடி படித்து முடிப்பதற்கு இடையூறாக இருக்கும்.

கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்

சுப தினங்கள்: 2, 3, 7, 13, 14, 15, 16, 21, 22, 24, 25, 29 மற்றும் 30
அசுப தினங்கள்: 5 , 7, 17, 18, 19, 26, 27 மற்றும் 28 வது

Leave a Reply