மகர ராசி – பொதுப்பலன்கள்
இந்த மாதம் உங்கள் நிலை சாதாரணமாக இருக்கும். அதிக எதிர்பார்ப்புகளைத் தவிர்க்கவும், அனைத்து விஷயங்களிலும் உங்கள் அணுகுமுறையைச் சமநிலையில் வைத்துக்கொள்ளவும். நீங்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அதன் மூலம் பாதி வாய்ப்புகளையாவது உங்களுக்கு சாதகமான வாய்ப்புகளாக மாற்றி அமைக்க முடியும். அபாயகரமான நடவடிக்கைகளைத் தவிர்க்க நடுநிலையுடன் வாய்ப்புகளை தேர்ந்தெடுக்கவும். தேவையற்ற மோதல்களை தவிர்க்க மற்றவர்களுடன் சாதுர்யாமாகப் பழகவும். மற்றவர்களின் நோக்கங்களை புரிந்து கொள்ள அவர்களுடைய கண்ணோட்டத்தில் விஷயங்களைப் பார்க்க முயற்சி செய்யுங்கள். இந்த மாதத்தில் உணர்ச்சிப்பூர்வமான தகவல்களை யாருடனும் விவாதிக்காதீர்கள். உங்கள் அன்பானவர்களுடன் விடுமுறைக்குத் திட்டமிடுவதற்கான சிறந்த நேரம் இது. உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்புக் கவனம் தேவை.
மகர ராசி – காதல் / திருமணம்
உங்களுடைய துணை உணர்ச்சிப்பூர்வ ஆதரவை உங்களுக்கு வழங்குவார். இது உறவுப் பிரச்சினைகளை சமாளிக்க உங்களுக்கு நல்ல பலத்தை தரும். தம்பதிகள் தங்களின் பெரும்பாலான பிரச்சினைகளை மனிதாபிமான அடிப்படையில் தீர்த்துக் கொள்வார்கள். நீங்கள் திருமணத்திற்கான வரனை தீவிரமாகத் தேடுவீர்கள்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சுக்கிரன் பூஜைமகர ராசி – நிதி நிலைமை
இந்த மாதம் நிதி மற்றும் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் உங்கள் எண்ணங்களை ஆக்கிரமிக்கும். நிதி விஷயத்தில் விவேகத்துடன் செயல்படுங்கள். நிலுவையில் உள்ள பழைய தீர்க்கப்படாத பிரச்சினைகள் உங்களை துன்பப்படுத்தும் வகையில் திரும்பி வரும். வருமானத்தை மீறிய செலவுகள் ஏற்படும் உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாத்து கொள்ளச் சேமிப்பு முதலீடுகளில் கவனம் செலுத்துங்கள்.
நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: குரு பூஜைமகர ராசி – வேலை
இந்த மாதம் உங்கள் திறமையை நிரூபிக்கச் சரியான நேரம். பணியிடத்தில் புதிய பணிகள் உங்களுக்கு வழங்கப்படலாம். உங்கள் மேலதிகாரிகளுடன் மோதல்களைத் தவிர்க்கவும். உங்கள் பணியிடத்தில் பொறுமையாக இருங்கள். உங்கள் கடந்த கால முயற்சிகளால் வெற்றி உங்களை வந்தடையும். புதிய வேலைகளை எடுத்துக்கொள்ளும் பொழுது கண்ணியமாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: செவ்வாய் பூஜைமகர ராசி – தொழில்
இந்த மாதம் வணிகர்களுக்கு ஒரு சாதாரண காலமாகும். இந்த மாதத்தில் புதிய முயற்சிகளை ஆரம்பிக்கவோ அல்லது முக்கிய திட்டங்களைத் தொடங்கவோ வேண்டாம். இலக்குகளை விரைவாக அடைய குறுக்கு வழயில் செல்லாமல் நேர் வழியில் தொடர்ந்து செல்லவும். உங்களுடைய கூட்டாளிகளுக்கு உங்கள் ஆதரவை அளியுங்கள். அது உங்களுடைய திட்டங்கள் விரிவடைய உதவிகாரமாக இருக்கும்.
மகர ராசி – தொழில் வல்லுநர்
இந்த மாதம், உங்களுடைய முயற்சிகளுக்கு நீங்கள் விரும்பும் பலன்கள் கிடைக்காது. இது உங்களை எரிச்சல் அடையச் செய்யும். இந்த மாதத்தில் அதிக கடின உழைப்பு தேவை. உங்கள் வேலையில் அசௌகரியங்களையும் துன்பங்களையும் காண நேரிடும். நீங்கள் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும். உங்கள் சக ஊழியர்களுடன் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் சந்திக்கும் மக்களுடன் நல்ல உறவைப் பராமரிக்க முயற்சிக்கவும்.
மகர ராசி – ஆரோக்கியம்
பொதுவாக உங்களது ஆரோக்கிய நிலை சீராக இருக்கும். மன அழுத்தத்தைத் தவிருங்கள். அது உங்களுடைய ஆரோக்கியத்தைக் கெடுக்கும். நல்ல ஆரோக்கியத்தைப் பெற தினமும் தியானப் பயிற்சி செய்யுங்கள். செரிமானப் பிரச்சினைகள் ஏற்படும். காரமான உணவைத் தவிர்க்கவும். உலர் வகைப் பழங்களை சாப்பிடவும்.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜைமகர ராசி – மாணவர்கள்
தற்போதைய காலம் உங்கள் திறமைகளை அதிகரிக்க நன்மை தரக்கூடிய காலமாகும். இது உங்களுக்குச் சிறந்த முடிவுகளைக் கொடுக்கும். உங்கள் நட்புடன் பழகும் தன்மை மற்றும் தன்னிச்சையான செயல்பாடுகளால் கல்வியில் தொடருவதற்கான நல்ல முடிவகளைத் தரும். பெற்றோர்கள் உங்கள் செயல்திறனைக் கண்டு மகிழ்வார்கள்.
கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்சுப தினங்கள் : 3 , 4 , 8 , 10 , 17 , 18 , 24 , 29 மற்றும் 30
அசுப தினங்கள்: 9, 15, 19, 22, 25 மற்றும் 31.
Tags: 2018 Makara Rasi Palan August August Month Makara Palan 2018 Matha Rasi Palan 2018 Makara Rasi Palangal 2018 August Makara August Month Makara Palan 2018 2018 Makara Rasi Palan August Matha Rasi Palan 2018 Makara Rasi Palangal 2018 August Makara மகர மாத ராசி பலன் 2018
Leave a Reply