• பொருட்கள் 0 US $ 0
    பதிவு செய்யவும்
    Signin
  • x
    x
    பகவதி சேவா பூஜை

    பகவதி சேவா பூஜை

    பகவதி சேவா பூஜை என்பது புராதனமான சக்தி வாய்ந்த பூஜை. இது வாழ்வில் செழுமை, தூய்மை, கருவுறுதல் மற்றும் நிறைவு வேண்டி ராஜராஜேஸ்வரி தேவியை குறித்து செய்யப்படும் பூஜை ஆகும். நம்மைச் சுற்றியுள்ள எதிர்மறைகள் யாவும் அகலவும், கிரகங்களின் தோஷங்களை போக்கவும், அதன் மூலம் வாழ்வில் அமைதி மற்றும் நல்லிணக்கம் பெறுவதற்கும் இந்த பூஜை செய்யப்படுகின்றது.
    {{variation.Name}}:
    {{variationdetail.VariationName}}
    {{oldPrice}} You Save {{Save}}
    {{Price}}
    இலவச ஷிப்பிங்
    அளவு:
    {{requiredQty}}
    {{prdvariation.ParentName}}:
    {{variation.Name}}
    {{childname.ChildVariationTypeName}}:
    {{childDetails.VariationName}}

    பகவதி சேவா பூஜை (கருவுறுதலுக்கான பூஜை)

    எதிரிகள் மற்றும் பயங்களை சமாளிப்பதற்கு எளிய வழி பூஜை

    Gayatri Homa

    பகவதி சேவா பூஜை என்பது புராதனமான சக்தி வாய்ந்த பூஜை. இது வாழ்வில் செழுமை, தூய்மை, கருவுறுதல் மற்றும் நிறைவு வேண்டி ராஜராஜேஸ்வரி தேவியை குறித்து செய்யப்படும் பூஜை ஆகும். நம்மைச் சுற்றியுள்ள எதிர்மறைகள் யாவும் அகலவும், கிரகங்களின் தோஷங்களை போக்கவும், அதன் மூலம் வாழ்வில் அமைதி மற்றும் நல்லிணக்கம் பெறுவதற்கும் இந்த பூஜை செய்யப்படுகின்றது. தென்னிந்திய மாநிலமான கேரளாவில் இந்தப் பூஜை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. நமது விருப்பங்கள் நிறைவேறவும், துயரங்கள் நீங்கவும் உலகில் சமநிலை உருவாக்கவும் இந்த பூஜை மேற்கொள்ளப்படுகின்றது. இந்த பூஜையில் முக்கியமாக மாலை வேளையில் பார்வதி, துர்கை அல்லது காளி வழிபாடு நடைபெறுகின்றது. இந்தப் பூஜை செய்வதன் மூலம் தேவியின் கிருபையால் நமக்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சி கிட்டுகின்றது.

    பகவதி சேவா பூஜையின் சிறப்பம்சங்கள் :

    இந்தப் பூஜையில் பிரபஞ்சத்தைக் குறிக்கும் வகையில் ஒரு பெரிய தாமரையைக் கையால் வரைந்து அதன் மீது பெரிய விளக்கை ஏற்றி அதில் தேவியை ஆவாஹனம் செய்து பூஜை நடத்துவார்கள். குருவிடம் சிறப்பு பயிற்சி பெற்ற நம்பூதிரிகளைக் கொண்டுதான் இந்தப் பூஜை நடத்தப்படும். குறைந்த அளவிலான பொருட்களைக் கொண்டு சிரத்தையுடனும் பயபக்தியுடனும் தேவியிடம் தனது அர்ப்பணிப்பை உணர்த்தும் வகையில் இந்தப் பூஜையை நம்பூதிரிகள் நடத்துவார்கள்.

    பகவதி சேவா பூஜை செய்வதற்கான நிபந்தனைகள்

    பூஜை செய்யும் நம்பூதிரி தன்னை நியமத்தோடு சுத்தம் செய்து கொண்டு தூய்மையான புதிய ஆடையை உடுத்திக் கொள்ள வேண்டும். பூஜையை வீட்டிலோ அல்லது ஆலயத்திலோ செய்யலாம். மந்திரங்களை உச்சரிக்கும் போது பக்தியுடன் உச்சரிக்க வேண்டும். மந்திர உச்சரிப்புகள் கேரளா பாணியில் காணப்படும். பூஜையில் பங்கேற்பவர்கள் பூஜையின் போது வேறு எந்த இடையூறுகளும் வெளியிலிருந்து வராத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். பக்தி ரசம் சொட்டச் சொட்ட தேவியை நாம் வழிபட்டால் அவள் கருணைக் கடலாய் நமக்கு அனுக்கிரகம் புரிவாள்.

    Benefits

    பகவதி சேவா பூஜையினால் கிடைக்கும் நன்மைகள்

    புனித நூல்களின்படி பகவதி சேவா பூஜை கிரகங்களின் தோஷங்களை போக்க வல்லது. நம்மைச் சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்களை நீக்கி நன்மை அளிக்க வல்லது. இந்தப் பூஜை உங்களை இன்னல்கள் மற்றும் துயரங்களிலிருந்து காப்பாற்றும். உங்கள் தினசரி வாழ்க்கையில் தடைகளை சமாளிக்க உதவும். இந்தப் பூஜை லௌகீக மற்றும் ஆன்மீக பலன்களை அள்ளித் தரும். உங்கள் விருப்பங்களை நிறைவேற்ற உதவும். பயம், தீயவினைகள், எதிர்களின் தொல்லைகள் போன்றவற்றை நீக்கி வாழ்வில் செழிப்பை உருவாக்கிக்கொள்ள இந்தப் பூஜை மிகவும் சிறந்தது.

    Bhagavathi Seva Ceremonies

    வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்பட்ட சேவைகள்

    வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

    ஆஸ்ட்ரோவேதின் இந்த சேவை குறித்த உங்கள் அனுபவத்தை எழுதும் முதல் நபராக நீங்கள் இருங்கள். Click here