• பொருட்கள் 0 US $ 0
    பதிவு செய்யவும்
  • x
    x
    சுமங்கலி பூஜை

    சுமங்கலி பூஜை

    திருமணமாகி கணவனுடன் வாழும் பெண்களை சுமங்கலி என்று கூறுவார்கள். இறைவனடி சேர்ந்த குடும்பத்தின் பெண் மூதாதையரின் ஆசீர்வாதங்களைப் பெற இந்த பூஜை செய்யப்படுகிறது. இந்தப் பூஜை செய்வதன் மூலம் நிறைவேறாத அவர்களின் விருப்பங்களில் திருப்தியடைவதால் அவர்களின் வாழ்த்து கிடைக்கும்.
    {{variation.Name}}:
    {{variationdetail.VariationName}}
    {{oldPrice}} You Save {{Save}}
    {{Price}}
    இலவச ஷிப்பிங்
    அளவு:
    {{requiredQty}}
    {{prdvariation.ParentName}}:
    {{variation.Name}}
    {{childname.ChildVariationTypeName}}:
    {{childDetails.VariationName}}

    சுமங்கலி பூஜை

    சுமங்கலிப் பூஜையின் சிறப்பம்சங்கள்

    Sumangali Pooja

    திருமணமாகி கணவனுடன் வாழும் பெண்களை சுமங்கலி என்று கூறுவார்கள். இறைவனடி சேர்ந்த குடும்பத்தின் பெண் மூதாதையரின் ஆசீர்வாதங்களைப் பெற இந்த பூஜை செய்யப்படுகிறது. இந்தப் பூஜை செய்வதன் மூலம் நிறைவேறாத அவர்களின் விருப்பங்களில் திருப்தியடைவதால் அவர்களின் வாழ்த்து கிடைக்கும். பெண்ணின் திருமணம், மருமகள் வீட்டிற்கு திருமணமாகி வரும் நேரம் போன்ற சமயங்களில் இந்த வைபம் நடத்தப்படுகின்றது இந்த வைபவத்தில் ஆண்கள் பங்கு கொள்ள இயலாது மற்றும் செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளில் இதனை நடத்தக் கூடாது. இந்தப் பூஜையின் புனிதம் கருதி வீட்டில் இருக்கும் மூத்த பெண்மணிகள் இதற்கான ஏற்பாடுகளை முறையாகச் செய்ய வேண்டும். கணவனின் நீண்ட ஆயுள் மற்றும் நல்ல ஆரோக்கியம் மற்றும் நிறைவான வாழ்வு வேண்டி இறைவனடி சேர்ந்த குடும்பத்தின் பெண் மூதாதையரின் ஆசீர்வாதங்களைப் பெற இந்த பூஜை நடத்தப்படுகின்றது.

    சுமங்கலிப் பூஜையின் மகத்துவம்

    சுமங்கலிப் பூஜை, சில மரபு முறைகளைப் பின்பற்றி நடத்தப்படும் முக்கியமான மற்றும் புனிதமான விழாவாகும். இந்தப் பூஜையை நடத்துவதற்கு குடும்ப சம்பிரதாயத்தை பின்பற்றி நடத்த வேண்டும். 3,5, 7, மற்றும் 9 என்ற எண்ணிக்கையில் அவரவர் வசதிக்கேற்ப சுமங்கலிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். சுமங்கலிகளுக்கு நல்லெணெய் மற்றும் சீக்காய் அளிக்க வேண்டும். பங்கு கொள்ளும் அனைத்து சுமங்கலிகளும் தலைக்கு எண்ணெய் வைத்து சீக்காய் தேய்த்து குளித்து 9 முழ புடவையை கட்டி பூஜைக்கு அமர வேண்டும். பூஜையைத் தொடங்கும் முன்பு குத்துவிளக்கின் 5 முகங்களையும் ஏற்றி வைக்க வேண்டும். பூஜை முடிந்த பிறகு குடும்ப அங்கத்தினர்கள் இறைவனடி சேர்ந்த பெண் மூதாதையரை பிரார்தித்து வழி பட வேண்டும். இந்த வைபவம் தாய்க்கு நன்றி செலுத்தும் வைபவமாகவும் கூட்டுப் பிரார்த்தனையாகவும் கருதப்படுகின்றது.

    விளக்கம் மற்றும் புரோகிதர் சேவைகள்:

    சுமங்கலிப் பூஜையானது செய்முறை நன்கு அறிந்த புரோகிதர்களைக் கொண்டு நடத்தப்படுகின்றது. அவர்கள் கிரமமாக விதி முறையை அனுசரித்து அதன்படி பூஜை நடத்துவார்கள். இந்தப் பூஜையை உங்கள் வீட்டிலும் செய்யலாம் அல்லது ஆலயத்திலும் செய்யலாம். எங்கள் புரோகிதர்கள் சக்தி வாய்ந்த மந்திரங்களை ஓதி இந்த வைபவத்தை மூதாதையர் திருப்திப்படும் வகையில் நடத்தித் தருவார்கள்.

    Benefits

    சுமங்கலி பூஜையின் பலன்கள் :

    சுமங்கலிப் பூஜை செய்வதன் மூலம் :

    • பெண் மூதாதையர்களின் ஆசி பெற இயலும்

    • குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்

    • எந்தவிதமான விழாவிற்கு முன்னும் இதனை செய்யலாம்

    • கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும்

    • சந்தோஷமான மண வாழ்க்கை அமையும்

    Sumangali Pooja Ceremonies

    வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்பட்ட சேவைகள்

    வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

    ஆஸ்ட்ரோவேதின் இந்த சேவை குறித்த உங்கள் அனுபவத்தை எழுதும் முதல் நபராக நீங்கள் இருங்கள். Click here