Navaratri - Experience 333 sacred Navaratri ceremonies invoking Goddess power for success & protection Join Now
ரிஷப ராசி பலன் 2025 | Taurus Horoscope 2025 in Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
taurus

ரிஷபம் வருட ராசி பலன் 2025

சுயமாக தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் அதிக லாபத்தை ஏற்படுத்தி கொடுத்து, தன நிலையில் உயர்வையும் நல்ல ஐஸ்வர்யங்களையும் ஏற்படுத்தி கொடுக்கும் ஆண்டாக இந்த வருடம் அமையப்போகிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டு உத்தியோகத்திற்காக காத்திருந்தவர்களுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். தொழில் சம்மந்தப்பட்ட பண முதலீடு சம்மந்தப்பட்ட விஷயங்களில் பங்குதாரர் உடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வாக்குவாதத்தை தவிர்ப்பதன் மூலம் கூட்டாக தொழில் செய்பவருடன் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உணவு ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு அதிக வாடிக்கையாளர்கள் கிடைப்பதுடன் தன லாபமும் அதிகரித்து காணப்படும். சமூக ஊடக துறையில் இருப்பவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். சமூக வலைதளங்கள் மூலம் தனம் ஈட்ட காத்திருப்பவர்களுக்கு இந்தவருடம் மிக உன்னதமான வருடமாக அமையும். பல வருடங்களாக காதலித்து வருபவர்களுக்கு திருமண யோகம் கைகூடி வரும். திருமணம் ஆகி குழந்தை பிறப்பிற்காக காத்து இருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கப்பெறும். உடன் பிறந்தவர்களுடன் பிரச்சனையை சந்தித்து வந்தவர்களுக்கு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்து நல்லிணக்கம் ஏற்படும். அரசு உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உத்தியோக ரீதியில் மிகவும் சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம். தங்களின் சாதனைகளுக்காக உயர் அதிகாரிகளின் பாராட்டுதலை பெறுவீர்கள்.

வருட ராசி பலன் 2025

ரிஷபம்: குணாதிசயங்கள்

ரிஷப ராசியினர் கலை சார்ந்த துறையில் அதிக நாட்டம் கொண்டிருப்பார்கள். மற்ற ராசியினரைவிட அதிக செல்வம் பெற்றிருப்பார்கள். உடல் வலிமை, மன வலிமை இரண்டையும் பெற்றிருப்பார்கள். ரிஷப ராசியினர் கடினமாக உழைப்பார்கள். நன்றாக சாப்பிட்டு வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். இவர்கள் பல்வேறு சூழ்நிலைகளை அனுசரித்து சமாளித்தாலும் பிடிவாதமான அணுகுமுறையை தவிர்ப்பதன் மூலம் நல்ல பெயரைப் பெறுவார்கள். பொறுமை அவர்களின் மிகப் பெரிய பலமாகும். பிடிவாதம், பேராசை மற்றும் கோபம் இவர்களின் பலவீனங்களாகும்.

பரிகாரங்கள்:

  • ஐஸ்வர்யங்கள் பெருக வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வரவும்.
  • படிப்பில் முன்னேற புதன்கிழமை தோறும் மஹா விஷ்ணு பகவானுக்கு பசு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வரவும்.
  • உத்தியோகத்தில் ஏற்றம் கிடைக்க சனிக்கிழமை தோறும் கால பைரவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வரவும்.

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்

தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி பெற கணபதி பூஜை

சாதகமான மாதங்கள் : ஜனவரி, மார்ச், ஜூன், ஜூலை, ஆகஸ்ட், அக்டோபர், நவம்பர்.

சாதகமற்ற மாதங்கள் : பிப்ரவரி, ஏப்ரல், மே, செப்டம்பர், டிசம்பர்.

-->

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள
இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC