Navaratri - Experience 333 sacred Navaratri ceremonies invoking Goddess power for success & protection Join Now
மகர ராசி பலன் 2025 | Capricorn Horoscope 2025 in Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
capricorn

மகரம் வருட ராசி பலன் 2025

இந்த வருடம் உங்கள் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும். உங்கள் குடும்பத்தில் திருமணம் தாமதப்பட்டவர்களுக்கு திருமணம் நடக்கும் வாய்ப்புகள் உள்ளது. புத்திர பாக்கியத்தை எதிர் நோக்கி உள்ளவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். காதலர்களுக்கு இடையே உள்ள பந்தம் வலுப்படும். அரசு உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. மேலாளர் பதவியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தகவல் தொடர்புத் துறையில் உள்ளவர்களுக்கு பணியிடச் சூழல் அனுகூலமாக இருக்கும். தகவல் தொழில்நுட்பத்துறை சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு புதிய முதலீட்டாளர்கள் மூலம் தொழிலை விரிவு படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கட்டுமானத்துறையில் பொறியாளர்களாக தொழில் செய்பவர்கள் அதிக லாபத்தை ஈட்டும் வகையில் இந்த வருடம் அமையப்போகிறது. அந்நிய செலாவணி வர்த்தக நிறுவனம் சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்களின் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தனியார் உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் மேல் அதிகாரியின் மூலம் உத்தியோகத்தில் ஆதாயங்களைப் பெறுவீர்கள்.

வருட ராசி பலன் 2025

மகரம்: குணாதிசயங்கள்

மகர ராசியினர் தன்னம்பிக்கை மிக்கவர்கள். சிறப்பு நிகழ்சிகளை அமைக்கும் திறம் பெற்றவர்கள். சகிப்புத்தன்மை, பொறுமை, ஸ்திரத்தன்மை மற்றும் நம்பிக்கை கொண்டவர்கள். சவாலான செயல்களை மேற்கொண்டு கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் அவற்றை முடிப்பதை அவர்கள் முக்கியமாகக் கருதுவார்கள்.

பரிகாரங்கள்:

  • வாராஹி அம்மன் படத்தை வீட்டில் உள்ள பூஜை அறையில் வைத்து மாதம் தோறும் வளர்பிறை பஞ்சமி திதியன்று தீப தூப ஆராதனைகள் காட்டி வழிபட்டுவர வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்.
  • சனிக்கிழமைகளில் கருப்பண்ண சாமிக்கு பசுநெய் தீபமேற்றி வழிபட தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
  • சனிக்கிழமைகளில் கருப்பு நிற ஆடைகளை உடுத்தி வர உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படும்.
  • உங்கள் வீட்டு வாசல் கதவின் மேல் ஓடி தேய்ந்த குதிரை லாடத்தை மாட்டி வைக்கவேண்டும்.

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்

அனைத்து ஐஸ்வர்யங்களும் பெருக சிவன் பூஜை

சாதகமான மாதங்கள் : பிப்ரவரி, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், அக்டோபர், ஜனவரி, மார்ச், ஏப்ரல், மே, செப்டம்பர், நவம்பர்,

சாதகமற்ற மாதங்கள் : டிசம்பர்.

-->

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள
இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC