Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
சிம்ம ராசி பலன் 2025 | Leo Horoscope 2025 in Tamil | AstroVed Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
leo

சிம்மம் வருட ராசி பலன் 2025

இந்த வருடம் தனம் சம்மதப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபத்தை ஏற்படுத்தி கொடுக்கும் வருடமாக அமையப்போகிறது. பொதுவாக உயர் அதிகாரிகளாக வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடம் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். அரசாங்க உத்தியோகத்தில் மேலாளராக பதவியில் இருப்பவர்களுக்கு உயர்பதவி கிடைப்பதுடன் வருமானத்திலும் ஏற்றம் உண்டாகும். பின்னலாடை ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு அதிக வாடிக்கையாளர்களை பெற்றுத் தந்து தன லாபத்தையும் அதிகரித்து கொடுக்கும். காதல் உறவில் உள்ளவர்களுக்கு இடையே அன்யோன்யம் கூடும். திருமணமான தம்பதிகளுக்கிடையேயான தாம்பத்திய உறவில் நெருக்கம் அதிகரிக்கும். இந்த வருடம் வயதான ஆண்களுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. சாப்பிடும் உணவில் கவனம் தேவை. குறித்த நேரத்தில் ஆரோக்கிய உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகமாகாமல் தடுக்க முடியும். நடுத்தர வயதை உடைய பெண்களுக்கு கண் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். உடல் சார்ந்த பிரச்சனைகள் தெரிய ஆரம்பித்த உடனேயே மருத்துவ ஆலோசனை பெறுவது நன்மை பயக்கும். அரசாங்கத் துறையில் வேலையில் உள்ளவர்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

வருட ராசி பலன் 2025

சிம்மம்: குணாதிசயங்கள்

சிம்ம ராசியினர் உன்னதமானவர்கள். பரந்த இதயம் படைத்தவர்கள். பெருந்தன்மை வாய்ந்தவர்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் உயர் பதவியை அடைய வேண்டும் என்ற ஆவலுடன் இருப்பார்கள். இந்த ராசியினர் அதிகாரம், கண்ணியம், ஆற்றல், உற்சாகம், புகழ் ஆகியவற்றை பெற்றிருப்பார்கள். நிர்வாகம், சட்டம் மற்றும் அரசியல் விஞ்ஞானம் இவர்களுக்கு பிடித்தமான பாடங்கள் ஆகும்.

பரிகாரங்கள்:

  • ஞாயிற்று கிழமைகளில் சிவன் பூஜை செய்வது தொழிலில் முன்னேற்றத்தை கொடுக்கும்.
  • ஆதித்ய ஹிருதயத்தை ஞாயிற்று கிழமைகளில் பாராயணம் செய்து வர அனைத்திலும் வெற்றியை ஏற்படுத்தி கொடுக்கும்.
  • வயது முதிர்ந்தவர்களுக்கு ஆடை தானம் செய்வதினால் வாழ்வில் ஏற்றம் உண்டாகும்.
  • பிரதோஷ நாள் அன்று சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகத்திற்கு பால் தானமாக கொடுப்பதால் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்

சகல சௌபாக்கியங்களும் கிடைக்க முருகன் பூஜை

சாதகமான மாதங்கள் : ஜனவரி, மார்ச், மே, ஜூன், ஜூலை,செப்டம்பர், அக்டோபர்.

சாதகமற்ற மாதங்கள் : பிப்ரவரி, ஏப்ரல், ஆகஸ்ட், நவம்பர், டிசம்பர்.

-->

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள
இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC