வாராஹி மந்திரம் | Varahi mantra in Tamil

வாராஹி திருமாலின் வராக அம்சம் ஆவாள். இவள் வராகமெனும் பன்றி முகமும், எட்டு கரங்களையும் உடையவள். பின் இரு கரங்களில் தண்டத்தினையும், கலப்பையையும் கொண்டவளாக காட்சி தருபவள். இவள் கருப்பு நிற ஆடையுடுத்தி எருமை மீது அமர்ந்திருப்பவள். மார்கண்டேயபுராணத்தின் தேவி மகாத்மியத்தின்படி வாராஹி லலிதா திரிபுர சுந்தரியின் படைத் தலைவியாக விளங்குபவள். சப்த மாதர்களில் ஒருவராக விளங்குபவள்.
பக்தர்கள் அழைத்தவுடன் வந்து அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அருள் புரியும் வாராஹி அம்மனை வழிபடுவதன் மூலம் நம்முடைய உள் மற்றும் வெளிப்புற எதிரிகளை அழிக்க முடியும். காமம், குரோதம். மோகம், மதம், லோபம், பொறாமை, ஆசை, கோபம், வஞ்சனை போன்ற பல்வேறு தீய குணங்கள் நம்மையும் அறியாமல் நம் மனதில் வந்து விடுகிறது. இவை யாவும் நம்மை அழிக்கும் எதிரிகள் ஆகும். புறத்தில் நம்மை பிடிக்காத எதிரிகளும் இருக்க வாய்ப்புண்டு. இவை அனைத்தையும் அழிக்கும் அரும் பெரும் தெய்வமாக அன்னை வாராஹி விளங்குகிறாள்.
தன்மானத்தை காக்கும் தெய்வமாக விளங்குபவள் வாராஹி. பிறர் நமது தன்மானத்தை குலைத்து அவமானப்படுத்தும் போது அவர்களின் ஆணவத்தை அழிக்கும் தெய்வமாக அன்னை வாராஹி விளங்குகிறாள். நினைத்த மாத்திரத்தில் வந்து அருளும் வாராஹி அன்னை நமது அவமானத்தை அழித்து நம்மை காப்பவள்.
நமக்கு கஷ்டம் வந்தால் அதனை பிறர் அறியா வண்ணம் காத்துக் கொள்ளலாம். ஆனால் நமது தன்மானத்தை பிறர் நசுக்கி அவமானப்படுத்தும் போது அந்த அவமானம் தாங்க இயலாததாக இருக்கும். அத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் இந்த வாராஹி அன்னையை வழிபடுவதன் மூலம் நமது அக மற்றும் புற எதிரிகளை அழிக்க இயலும். அதற்கான மந்திரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வாராஹி மந்திரம்
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லௌம் ஐம் ||
நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வாராஹி வாராஹி வாராஹமுகி வாராஹமுகி ||
அந்தே அந்தினி நமஹ|
ருந்தே ருந்தினி நமஹ|
ஜம்பே ஜம்பினி நமஹ|
மோஹே மோஹினி நமஹ|
ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹ|
சர்வ துஷ்டபிரதுஷ்ட்டானாம் சர்வேஷாம்
சர்வ வாக்சித்த சக்ஷூர் முககதி ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு சீக்ரம் வச்யம்,ஐம் க்லௌம்
ட்டஹ ட்டஹ ட்டஹ ட்டஹ ஹூம் அஸ்த்ராய ப்பட் ||
வாராஹி அம்மனை நினத்து இந்த மந்திரத்தை நாம் தினமும் கூறி வர இக்கட்டான சூழலில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள இயலும். அக மற்றும் புற எதிரிகளை நம்மால் வெல்ல இயலும். தெளிவான மனதுடன் செயல்பட்டு வாழ்வில் வெற்றி காண இயலும்.
