விளக்கேற்றும் பொழுது உங்கள் கை இப்படி இருந்தால் வேண்டிய கோரிக்கை உடனே நிறை வேறுமாம் தெரியுமா? வீட்டில் பெண்கள் தான் விளக்கேற்ற வேண்டுமா என்ன?

சிவ பெருமான் கோவிலில் ஒரு விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. விளக்கு அணையும் நிலையில் இருந்தது. அப்பொழுது அங்கிருந்த எலியின் வால் அந்த விளக்கின் மீது பட்டு விளக்கு தூண்டப்பட்டு நன்றாக எரிந்தது. அதன் விளைவாக சிவபெருமான் அந்த எலியை மகாபலியாக பிறக்கச் செய்தார். விளக்கு ஏற்றுவதில் இத்துனை மகத்துவம் உள்ளது. எனவே நாம் நமது வீட்டில் அன்றாடம் விளக்கு ஏற்ற வேண்டும்.
வீட்டில் விளக்கை யார் ஏற்ற வேண்டும்?
வீட்டில் ஏற்றும் விளக்கை பெண்கள் மட்டும் தான் ஏற்ற வேண்டுமா? பொதுவாக அனைத்து வீடுகளிலும் பெண்கள் குளித்து முடித்து விளக்கு ஏற்றுவது வழக்கம். என்றாலும் வீட்டில் விளக்கை ஆண்கள் பெண்கள் என இரு பாலாரும் ஏற்றலாம். ஆண்கள் விளக்கு ஏற்றினால் ஞானம், அறிவு, விவேகம், யுக்தி மற்றும் புத்தி சாதுரியம் கூடும். பெண்கள் விளக்கு ஏற்றினால் ஐஸ்வரியமும் சகல சௌபாக்கியமும் கிட்டும். எனவே தான் பெண்கள் விளக்கு ஏற்றுவது சிறந்ததாக கருதப்படுகிறது.
விளக்கேற்றும் பொழுது உங்கள் கை இப்படி இருக்க வேண்டும்.
விளக்கேற்றும் பெண்கள் சுத்தமாக குளித்து இருக்க வேண்டும். திருமணமான பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிக்கும் போது உள்ளங் கைகளிலும் மஞ்சள் நன்றாக தேய்த்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் மங்களகரமானது. மற்றும் கிருமி நாசினியாக செயல்படும். கை விரலில் நகங்கள் இருத்தல் கூடாது. நகங்கள் இருந்தால் அழுக்கு ஒட்டிக் கொள்ளும். எனவே நகங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். கைகளில் வளையல்கள் அணிந்து இருக்க வேண்டும். சுத்தத்துடன் பக்தியும் கூடினால் விளக்கேற்றும் போது இறைவனிடம் நீங்கள் வைக்கும் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும். விளக்குகளையும் சுத்தமாக தேய்த்துக் கழுவி துடைத்து எண்ணெய் மற்றும் திரி இட்டு விளக்கு ஏற்ற வேண்டும். அன்றாடம் இந்த முறையில் விளக்கு ஏற்றுவதன் மூலம் இறை அருள் கூடும். உங்களுக்கு நல்ல பலன்கள் கிட்டும். உங்கள் வேண்டுதல் நிறைவேறும்.
