Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Search

ஸ்ரீ வாராஹி வழிபாடு

February 22, 2023 | Total Views : 2,814
Zoom In Zoom Out Print

வல்லமை என்ற சொல்லின் வடிவம் தான் வாராஹி, சொல் வன்மை செயல் வன்மை இரண்டுக்குமே அதிகாரி இவள். லலிதா திரிபுரசுந்தரி யின் படைத் தலைவியாக விளங்குபவள். அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாம் ஆதிபராசக்தியின் தலைமை அதிகாரியாக அருள்பவளே வாராஹி ,சப்த மாதர்களில் ஒருத்தியான ஸ்ரீ வாராஹி பராசக்தியின் படைத் தளபதியான பண்டாசுரனை அழித்தவள். சப்த கன்னியர் என்னும் பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி. இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் இந்த வராஹி மனித உடலும், பன்றி முகமும் கொண்டவள். எட்டு கரங்களையும் உடையவர். பின் இரு கரங்களில் தண்டத்தினையும், கலப்பையையும் கொண்டவராவார். இவர் கருப்பு நிற ஆடையுடுத்தி எருமை மீது அமர்ந்திருக்கிறார். இந்த தேவிக்கு பஞ்சமீ, தண்டநாதா, மகாசேனா, வார்த்தாளி, ஆக்ஞா சக்ரேஸ்வரி, அரிக்னி என்ற பெயர்களும் உண்டு.

வராஹி தோற்றத்தின் புராண விளக்கங்கள்  

மார்கண்டேயபுராணத்தின் தேவி மகாத்மியத்தின்படி வாராஹி சப்த கன்னியர்கள் போன்ற பெண் கடவுளர்களின் தோற்றத்துடன் சக்தியின் வடிவமாக, கடவுளர்களின் உடல்களிலிருந்து வந்ததாகக் கருதப்படுகிறது. வராகி வராகாவிலிருந்து உருவாக்கப்பட்டது என்று வேதங்கள் கூறுகின்றன. மகா புராணங்களின் பதினான்காம் புராணமாகிய வாமன புராணத்தின்படி தெய்வீக தாய் எனப் போற்றப்படும், சண்டிகாவின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து  சக்திகள் தோன்றுகின்றன என்று கூறப்பட்டுள்ளது; இந்த சக்திகளில் ஒருவரான வராகி, சண்டிகாவின் முதுகில் இருந்து தோன்றியதாக கருதப்படுகிறது. தேவி பாகவதம் துர்க்கை அன்னையால் உருவாக்கப்பட்ட தெய்வம் வாராஹி என்று கூறுகிறது. இவை யாவும் தீமையை அழிக்க சக்தி எடுத்த வடிவங்கள் ஆகும். விஷ்ணு புராணத்தின்படி வைஷ்ணவியின் பின்புறத்தில் இருந்து வாராஹி அன்னை தோன்றியதாக கூறப்படுகிறது. மச்ச புராணம் வாராஹி, அந்தகாசுரனை அழிக்க சிவ பெருமானால்  உருவாக்கப்பட்ட அன்னை என்று கூறுகிறது.

அஷ்ட வாராஹிகள்

மகா வராஹி, ஆதி வராஹி, ஸ்வப்னவராஹி, லகு வராஹி, உன்மத்த வராஹி, சிம்ஹாருடா வராஹி, மகிஷாருடா வராகி, அச்வாருடா வராஹி என்போர் எட்டு வராஹிகள் (அஷ்டவராஹி) என்று அழைக்கப்படுகிறார்கள்.

பேசும் தெய்வம் வாராஹி

வாராஹி பேசும் தெய்வம். நமது பிரச்சினைகளுக்கு நினைத்த மாத்திரத்தில் வந்து தீர்வு அளிக்கும் தெய்வம் வாராஹி.  பார்ப்பதற்கு உருவ அமைய்ப்பில் காட்டுப் பன்றி அமைப்பில் இருந்தாலும் குழந்தை போன்றவள். கருணை மிக்கவள். காட்டுப் பன்றி எவ்வாறு பூமியை அகண்டு தோண்டி எடுத்து கிழங்குகளை உண்ணுகிறதோ அது போல மனித உடலும் பன்றி முக அமைப்பிலும் இருக்கும் லோகமாதாவாக இருக்கும் அம்பிகை நமது பிரச்சினைகளை தோண்டி எடுத்து அவற்றை நீக்கி நமக்கு இன்பத்தை வழங்குகிறாள்.

வெற்றிக்கு உரிய தெய்வம் வாராஹி  

வெற்றிக்கு உரிய தெய்வம் வாராஹி. வெற்றியை வாழ்க்கையில் பரிசாகத் தருபவள். நிரந்தர செல்வம், புகழ், பதவி இவற்றை அளிப்பவள். இவற்றை  இழந்தாலும் மீண்டும். பெறலாம். இதனினும் மேலாக தன்மானம் குறையும் வகையில் எதிரிகளால் நாம் பிரச்சினைகளை சந்திக்கும் போது இவளை வேண்டி வணங்கினால். வாழ்வை வளமாக்கும் வரங்களை தருபவள். ராஜ ராஜ சோழன் இந்த அம்பிகையை உலகறியச் செய்ய தஞ்சை ஆலயத்தில் வாராஹி வழிபாட்டை முக்கியமாக நடத்தினார். அவர் எச்செயலைத் தொடங்கினாலும், வராஹியை வழிபட்ட பின்னரே தொடங்குவார். ராஜ ராஜசோழன் போருக்கு செல்லும் முன்பு வராஹி அம்மனை வணங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் இந்த அம்மனை ”ராஜராஜ சோழனின் வெற்றித்தெய்வம் என்றும் கூறுவார்கள். தஞ்சைப் பெரியகோயில் கட்டுவதற்கு முன்பே, வராஹி வழிபாடு இங்கிருந்ததாகக் கூறுவர். பொதுவாக எந்த வழிபாட்டை தொடங்கினாலும், முதலில் விநாயகரை வணங்குவதே மரபு.ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் சிவவழிபாட்டைத் தொடங்குபவர்கள் விநாயகருக்குப் பதிலாக வராஹியம்மனை வழிபட்டே தொடங்குகிறார்கள். இங்கு துர்க்கையின் தளபதியான வாராஹிக்கு சன்னதி உள்ளது.

ஆக்ஞா சக்ரேஸ்வரி

ஸ்ரீ வாராஹி ஸ்ரீ நகரம் என்னும் ஸ்ரீ சக்ர தேவதைகளுள் மிகவும் மென்மையானவள். அம்பிகையின் மந்திரிகளுள்   ஒருவர். வேண்டுவோருக்கு வேண்டியவற்றை விரைவில் வழங்குபவள். நமது உடலில் இருக்கும் ஆறு ஆதார சக்கரத்தில் நெற்றியில் விளங்கும் ஆக்ஞா சக்கரத்திற்கு உரிய தேவி ஸ்ரீ வாராஹி தேவி.

நவாவரண பூஜையின் நாயகி

பஞ்சமி, தண்டநாதா, சங்கேதா, சமயேச்வரி, சயமயசங்கேதா, வாராஹி, போத்ரிணி, சிவா, வார்த்தாளி, மகாசேனா ஆக்ஞா சக்ரேஸ்வரி, அரிக்னி,போன்ற இவளது  திருநாமத்தை ஜபித்து வழிபட்டால் எந்தக் காரியத்திலும் வெற்றி கிட்டும் என்று புனித நூல்கள் கூறுகின்றன. ஸ்ரீ நவாவரண பூஜையில் வாராஹி தேவியின் மேற்கண்ட பன்னிரண்டு நாமாவளிகள கொண்ட அர்ச்சனையை முடித்த பின்னர் தான் ஆவரண பூஜை பூர்த்தி ஆகும்.

எதிரிகளை துவம்சம் செய்யும் வாராஹி  

வராஹி அம்மன் என்பது மஹா காளியின் அம்சமாகும். வராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை. தன்  பக்தர்களை காக்கும் சாந்த ரூபிணியாகவும் தாயாகவும் இருக்கும் வராஹியின் மூல மந்திரத்தை ஜெபம் செய்ய ஸ்ரீ  மஹா வராஹி அருள் கிட்டும்.எதிரிகளை துவம்சம் செய்யும் வாராஹி தெரிந்த தெரியாத எதிரிகளை அழிப்பவள்.  நமக்கு வெளியில் இருக்கும் எதிரிகளையும் நம் உள்ளுக்குள்ளே இருக்கும் எதிரிகளான கோபம், ஆசை பொறாமை போன்றவற்றை நீக்கும் அரும் பெரும் தெய்வமாக விளங்கக் கூடியவர் வாராஹி. பில்லி, சூனியம், கண் திருஷ்டி போன்ற தீவினைகளை வேரோடு களைபவள் என்று ஸ்ரீ வாராஹி மாலா போன்றுகின்றது.

ஸ்ரீ வாராஹி வழிபாடு

வாராஹி அன்னையை ஆலயம் சென்று வழிபடலாம். பூக்கள் மற்றும் பழங்கள் கொண்டு அர்ச்சனை செய்யலாம். சிவப்பு நிற ஆடை அணிவிக்கலாம். ஆடி மாதம் வளர்பிறையின் முதல் 10 நாட்கள் வாராஹி நவராத்திரி கொண்டாடுவார்கள். அந்த நாட்களில் தினமும் அவளுக்கு விருப்பமான நைவேத்தியங்களுடன்  பூஜிக்கலாம்.

அவளை வணங்குவதன் மூலம் காரியத் தடைகள் நீங்கும்,  வாக்கு வன்மை கூடும். கல்வியில் மேன்மை உண்டாகும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடைபெறும்,திருமணத்தடை நீங்கும். குழந்தைப் பேறு கிட்டும்  செல்வப்பெருக்கு ஏற்படும். எதிரிகள் நீங்குவார்கள்.  எதிர்ப்புகளில் வெற்றி கிட்டும். பொருளாதாரத் தடைகள் நீங்கும். வியாபாரத்தில் வெற்றி கிட்டும். செல்வங்கள் பெருகும்.

வீட்டு வழிபாடு:

வீட்டில் வழிபட வேண்டும் என்றால் வாராஹி அன்னையை விளக்கு ரூபத்திலும் வழிபடலாம்.

வீட்டில் விளக்கு ஏற்றி வாராஹி மூல மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டு தீபத்தில் அன்னை எழுந்தருளிய பிறகு பிரார்த்தனை செய்ய வேண்டும். மந்திரம் சொல்லி பிரச்சினைகளை அன்னையின் காலடியில் சமர்பிக்க அன்னையே நல்ல நீதியை நியாயத்தை வழங்குவாள். .

பிடித்த உணவு வகைகள்: காட்டுப்பன்றி முகம் என்பதால் கிழங்குகள், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பருப்பு வடை, பயறு வகை சுண்டல்கள், வெண்ணெய் கடையாத தயிர் கலந்த சாதம் கரும்பு, 

பிடித்த பழங்கள் அன்னாசி, மாதுளை இதில் ஏதாவது ஒன்றை நைவேத்தியம் செய்யலாம்.

பிடித்த மலர்கள் நீலநிற சங்குப்பூ, சிகப்பு நிற பூக்கள் செம்பருத்தி அம்பாளுக்கு விருப்பமான மலர்கள்.

வழிபட வேண்டிய நாட்கள் : புதன்கிழமைகள்,சனிக்கிழமைகள்

வழிபடவேண்டிய திதிகள்  வளர்பிறை அல்லது தேய்பிறை திரயோதசி திதி,பஞ்சமி திதி,அஷ்டமி நவமி. செல்வம் ,அரசியல் வெற்றி,பதவி,புகழ் வேண்டுவோர் பஞ்சமியிலும்,
மனவலிமை,ஆளுமை,எதிர்ப்புகளில் வெற்றியடைய அஷ்டமியிலும் சிறப்பாக வழிபடவேண்டும். பொதுவாக கிழக்கு நோக்கி அமர்ந்து ஜெபிக்க வேண்டும். எதிர்ப்புகள் தீர தெற்கு நோக்கியும் அமர்ந்து ஜெபிக்கலாம்.

 

வராஹி மூல மந்திரம் :
ஓம் க்லீம் உன்மத்த பைரவி வாராஹி
ஸ்வ்ப்ணம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.

ஓம் ஐம் க்லெளம் ஐம்
நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி
வாராஹி வாராஹமுகி வராஹமுகி
அந்தே அந்தினி நம :
ருத்தே ருந்தினி நம :
ஜம்பே ஜம்பினி நம :
மோஹே மோஹினி நம :
ஸதம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்
என்று சொல்லி வழிபடலாம்.
ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:
வராஹியின் மூல மந்திரத்தை 1008 தடவை வீதம் 26 நாட்கள் ஜெபம் செய்ய ஸ்ரீ  மஹா வராஹி அருள் கிட்டும். 108 முறை ஜபித்து தேவியை வணங்கித் தொழுதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

 

ஓம் – ஸ்ரீம் – ஹ்ரீம் – க்லீம் – வாராஹி தேவ்யை நம:
க்லீம் வாராஹிமுகி ஹ்ரீம் – ஸித்திஸ்வரூபிணி – ஸ்ரீம்
தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.
எனும் மந்திரத்தைச் சொல்லி வந்தால், வீட்டில் தனம் தானியம் பெருகும். சகல ஐஸ்வரியங்களும் பெருகும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். 

 

ஸ்ரீ வாராஹி அம்மன் துதி


ஓம் குண்டலினி புரவாசினி , சண்டமுண்ட விநாசினி ,
பண்டிதஸ்யமனோன்மணி , வாராஹீ நமோஸ்துதே!
அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி , அஷ்டதாரித்ரய நாசினி
இஷ்டகாமப்ரதாயினி , வாராஹீ நமோஸ்துதே!
தியான சுலோகம்
முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:

செல்வம் பெருக

ஓம் - ஸ்ரீம் - ஹ்ரீம் - க்லீம் - வாராஹி தேவியை நம:
க்லீம் வாராஹிமுகி ஹ்ரீம் - ஸித்திஸ்வரூபிணி - ஸ்ரீம்
தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.
மூலம்:-
லூம் வாராஹி லூம் உன்மத்த பைரவீம் பாதுகாப்பாம். ஸ்வாஹா II

காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

 

ஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி

  1. ஓம் வாராஹி போற்றி

  2. ஓம் சக்தியே போற்றி

  3. ஓம் சத்தியமே போற்றி

  4. ஓம் ஸாகாமே போற்றி

  5. ஓம் புத்தியே போற்றி

  6. ஓம் வித்துருவமே போற்றி

  7. ஓம் சித்தாந்தி போற்றி

  8. ஓம் நாதாந்தி போற்றி

  9. ஓம் வேதாந்தி போற்றி

  10. ஓம் சின்மயா போற்றி

  11. ஓம் ஜெகஜோதி போற்றி

  12. ஓம் ஜெகஜனனி போற்றி

  13. ஓம் புஷ்பமே போற்றி

  14. ஓம் மதிவதனீ போற்றி

  15. ஓம் மனோநாசினி போற்றி

  16. ஓம் கலை ஞானமே போற்றி

  17. ஓம் சமத்துவமே போற்றி

  18. ஓம் சம்பத்கரிணி போற்றி

  19. ஓம் பனை நீக்கியே போற்றி

  20. ஓம் துயர் தீர்ப்பாயே போற்றி

  21. ஓம் தேஜஸ்வினி போற்றி

  22. ஓம் காம நாசீனி போற்றி

  23. ஓம் யகா தேவி போற்றி

  24. ஓம் மோட்ச தேவி போற்றி

  25. ஓம் நானழிப்பாய் போற்றி

  26. ஓம் ஞானவாரினி போற்றி

  27. ஓம் தேனானாய் போற்றி

  28. ஓம் திகட்டா திருப்பாய் போற்றி

  29. ஓம் தேவ கானமே போற்றி

  30. ஓம் கோலாகலமே போற்றி

  31. ஓம் குதிரை வாகனீ போற்றி

  32. ஓம் பன்றி முகத்தாய் போற்றி

  33. ஓம் ஆதி வாராஹி போற்றி

  34. ஓம் அனாத இரட்சகி போற்றி

  35. ஓம் ஆதாரமாவாய் போற்றி

  36. ஓம் அகாரழித்தாய் போற்றி

  37. ஓம் தேவிக்குதவினாய் போற்றி

  38. ஓம் தேவர்க்கும் தேவி போற்றி

  39. ஓம் ஜுவாலாமுகி போற்றி

  40. ஓம் மாணிக்கவீணோ போற்றி

  41. ஓம் மரகதமணியே போற்றி

  42. ஓம் மாதங்கி போற்றி

  43. ஓம் சியாமளி போற்றி

  44. ஓம் வாக்வாராஹி போற்றி

  45. ஓம் ஞானக்கேணீ போற்றி

  46. ஓம் புஷ்ப பாணீ போற்றி

  47. ஓம் பஞ்சமியே போற்றி

  48. ஓம் தண்டினியே போற்றி

  49. ஓம் சிவாயளி போற்றி

  50. ஓம் சிவந்தரூபி போற்றி

  51. ஓம் மதனோற்சவமே போற்றி

  52. ஓம் ஆத்ம வித்யே போற்றி

  53. ஓம் சமயேஸ்ரபி போற்றி

  54. ஓம் சங்கீதவாணி போற்றி

  55. ஓம் குவளை நிறமே போற்றி

  56. ஓம் உலக்கை தரித்தாய் போற்றி

  57. ஓம் சர்வ ஜனனீ போற்றி

  58. ஓம் மிளாட்பு போற்றி

  59. ஓம் காமாட்சி போற்றி

  60. ஓம் பிரபஞ்ச ரூபி போற்றி

  61. ஓம் முக்கால ஞானி போற்றி

  62. ஓம் சர்வ குணாதி போற்றி

  63. ஓம் ஆத்ம வயமே போற்றி

  64. ஓம் ஆனந்தானந்தமே போற்றி

  65. ஓம் நேயமே போற்றி

  66. ஓம் வேத ஞானமே போற்றி

  67. ஓம் அகந்தையழிப்பாய் போற்றி

  68. ஓம் அறிவளிப்பாய் போற்றி

  69. ஓம் அடக்கிடும் சக்தியே போற்றி

  70. ஓம் கலையுள்ளமே போற்றி

  71. ஓம் ஆன்ம ஞானமே போற்றி

  72. ஓம் சாட்சியே போற்றி

  73. ஓம் ஸ்வப்ன வாராஹி போற்றி

  74. ஓம் ஸ்வுந்திர நாயகி போற்றி

  75. ஓம் மரணமழிப்பாய் போற்றி

  76. ஓம் ஹிருதய வாகீனி போற்றி

  77. ஓம் ஹிமாசல தேவி போற்றி

  78. ஓம் நாத நாமக்கிரியே போற்றி

  79. ஓம் உருகும் கோடியே போற்றி

  80. ஓம் உலுக்கும் மோகினி போற்றி

  81. ஓம் உயிரின் உயிரே போற்றி

  82. ஓம் உறவினூற்றே போற்றி

  83. ஓம் உலகமானாய் போற்றி

  84. ஓம் வித்யாதேவி போற்றி

  85. ஓம் சித்த வாகினீ போற்றி

  86. ஓம் சிந்தை நிறைந்தாய் போற்றி

  87. ஓம் இலயமாவாய் போற்றி

  88. ஓம் கல்யாணி போற்றி

  89. ஓம் பரஞ்சோதி போற்றி

  90. ஓம் பரப்பிரஹ்மி போற்றி

  91. ஓம் பிரகாச ஜோதி போற்றி

  92. ஓம் யுவன காந்தீ போற்றி

  93. ஓம் மௌன தவமே போற்றி

  94. ஓம் மேதினி நடத்துவாய் போற்றி

  95. ஓம் நவரத்ன மாளிகா போற்றி

  96. ஓம் துக்க நாசினீ போற்றி

  97. ஓம் குண்டலினீ போற்றி

  98. ஓம் குவலய மேனி போற்றி

  99. ஓம் வீணை ஒலியே போற்றி

  100. ஓம் வெற்றி முகமே போற்றி

  101. ஓம் சூதினையழிப்பாய் போற்றி

  102. ஓம் சூழ்ச்சி மாற்றுவாய் போற்றி

  103. ஓம் அண்ட பேரண்டமே போற்றி

  104. ஓம் சகல மறிவாய் போற்றி

  105. ஓம் சம்பத் வழங்குவாய் போற்றி

  106. ஓம் நோயற்ற வாழ்வளிப்பாய் போற்றி

  107. ஓம் நோன்புருக்கு வருவாய் போற்றி

  108. ஓம் வாராஹி பதமே போற்றி

banner

Leave a Reply

Submit Comment