இயல்பான உயரம், தடித்த புருவம், அகன்ற நீற்றி,தீர்க்கமான பார்வை, பிரகாசமான கண்கள், சற்று தட்டையான மூக்கும்,நீளமான காதும் அகன்ற உதடுகளும், உருண்டையான கால்களும் உடையவர்கள். பெண்கள் விரிந்த முகமும் சற்று அகன்ற நெற்றியும், விரிந்த கண்களும், நல்ல புருவ மத்தியும், விரிந்த தோளும், அழகிய பாதமும் கொண்டவர்கள்.
துலாம் ராசிக்காரர்கள் யதார்த்தமான போக்கு உடையவர்கள். இயல்பான வாழ்வில் விருப்பம் கொண்டவர்கள். சம நிலையோடு இருப்பார்கள். விட்டுக் கொடுக்கும் தன்மை இவர்களிடம் காணப்படும். இவர்கள் எதையும் ஆராய்ந்து அறிந்து கொள்வார்கள். நல்ல கற்பனைத் திறன் மிக்கவர்கள். எல்லோரையும் நேசிக்கும் தன்மை கொண்டவர்கள். இவர்கள் நேர்மையாக செயல்படுவார்கள். கடின உழைப்பாளிகள். பிறருக்கு உதவும்க குணம் கொண்டவர்கள்.
துலாம் ராசிக்காரர்கள் குடும்பத்தில் நல்ல செல்வாக்குடன் இருப்பார்கள். செல்வம் மிக்கவர்களாக இருப்பார்கள். குடும்பத்தில் அதிக நபர்கள் இருப்பார்கள். பெரிய மனிதர்கள், செல்வாக்கு, அதிகாரம் பெற்ற நபர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள். ஆணித்தரமாகவும் வியாபார நோக்குடனும் பேசுவார்கள். இவர்கள் மற்றவர்களுடன் அதிகமாக நெருங்கிப் பழக மாட்டார்கள். தங்கள் குடும்பத்தை விட்டு மற்றவர்களின் விஷயங்களில் தலையிடமாட்டார்கள்.
இவர்கள் கட்டுபாட்டுக்கு அடங்காதவர்கள். தங்கள் பேச்ச்சால் பிறரை மயக்கும் திறன் பெற்றவர்கள். எதிரியையும் நேசிக்கும் தன்மை கொண்டவர்கள். தங்கள் கொள்கையில் மாறாதவர்கள். பிறருக்கு உதவுவதும், ஊருக்கு உழைப்பதும் பிறப்பு குணமாகக் கொண்டவர்கள்.

Leave a Reply