சராசரி உயரத்தைவிட சற்று குறைவான தோற்றம் கொண்டவர்கள். கம்பீரம் கலந்த வேகமான கைகளை அசைக்காத நடை உடையவர்கள். உறுதியான பார்வை கொண்டவர்கள். அகலமான நெற்றியும், அடர்ந்த புருவமும், கூர்மையான பார்வையும், தடித்த முகமும், விரிந்த உதடும், நேரான பற்களும் பலமான முழங்கால்களும் உடையவர்கள். பெண்கள் உருண்டையான முகமும், சுருண்ட கேசமும் அழகான உதடும் பருத்த கன்னமும் கூறிய கண்களும் குறுகிய கழுத்தும் உடையவர்கள்.
இவர்கள் பொறுமைசாலிகள். எதற்காகவும் யாருக்காகவும் தன்னை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். தன்னை அண்டி வருபவர்களை ஆதரிப்பவர்கள். சுயநலத்துடன் கூடிய பொது நலம் உடையவர்கள். எந்த சூழ்நிலையிலும் தன்னை மாற்றிக் கொள்ளாத இயல்பு உடையவர்கள். வேகமாக செயல்பட்டாலும் விவேகத்துடன் செயல்படுவார்கள். எந்தவொரு முடிவையும் பலமுறை யோசித்த பின் தான் எடுப்பார்கள்.
தெய்வீக வழிபாடுகளை மேற்கொள்வார்கள். நீதி நேர்மை என்னும் பண்புகளுடன் இருப்பார்கள். எந்த காரியங்களிலும் எவ்வித தொழிலிலும் அவர்கள் ஞானத்தைப் பெற்றிருப்பார்கள். சமூக சேவை செய்வதில் பிரியம் உள்ளவர்கள். தங்களது பிற்காலத்தில் செல்வத்துடனும் செல்வாக்குடனும் சிறப்புடன் விளங்குவார்கள். தான தருமம் செய்வதிலும் தனது நிலையையும் மறந்து பிறருக்கு உபகாரங்கள் செய்வதையும் லட்சியமாக கொண்டிருப்பார்கள்.https://www.astroved.com/tamil/

Leave a Reply