துலாம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 – 2020 ( Tamil Puthandu Rasi Palangal Thulam 2019 – 2020 )

Rahu-Saturn Affliction Removal Program- Manifest Dreams & Fulfill Material Goals Join Now!
India's No. 1
Online Astrology &
Remedy Solution

துலாம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 – 2020 ( Tamil Puthandu Rasi Palangal Thulam 2019 – 2020 )

February 16, 2019 | Total Views : 3,568
Zoom In Zoom Out Print

(சித்திரை 3,4ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதம்)

இவ்வுலக சுகங்களை அனுபவித்து,வாழ்க்கையை எப்போதும் மகிழ்ச்சியாக வாழும் துலா ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சுக்கிரன் 5 இல் சஞ்சரிப்பதால் நீங்கள் பூர்வ ஜென்ம புண்ணியத்தை அனுபவிக்கும் காலம் ஆகும். உங்கள் செயல்களில் உங்கள் அறிவுத்திறன் வெளிப்படும். உங்கள் சூழ்நிலைகள் அனைத்தையும் உங்களுக்கு சாதகமாக்கி வெற்றி பெறுவீர்கள்.

குருபகவான் 5/11/2019 வரை 2 இல் சஞ்சரிப்பது சாதகமான நிலை என்றாலும், 5/11/2019 க்கு பிறகு 3 இல் சஞ்சரிப்பது சாதகமில்லை. சனிபகவான் 24/1/2020 வரை 3 இல் சஞ்சரிப்பது யோகமான நிலை என்றாலும், 24/1/2020 க்கு பிறகு 4 இல் சஞ்சரிப்பது சாதகமில்லை. ராகு, கேது 9,3 இல் சஞ்சரிப்பதால் ராகுவால் மிதமான பலனையும், கேதுவால் யோக பலனும் உண்டாகும். இந்த வருடம் நீங்கள் 70 சதவீத நற்பலன்களை பெறுவீர்கள்.

குருபகவான் 5/11/2019 க்கு வரை உங்கள் ராசிக்கு 2 இல் சஞ்சரிப்பதால் தனவரவு அதிகரிக்கும்,குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். உங்கள் வாக்கு சாதுரியத்தல் அனைத்தும் சாதகமாக அமையும். வீட்டு வசதிகளை அதிகரிக்க செலவு செய்வீர்கள். உடல் நிலை ஆரோக்கியம் பெறும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.

குருபகவான் 5/11/2019 க்கு பிறகு ராசிக்கு 3 இல் இருப்பதால் எதிர்காலம் பற்றிய பயம், கவலை,மன அமைதியின்மை உருவாகும். தங்கள் முயற்சிகளில் சிறு சிறு தடைகளையும், பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டி இருக்கும். சாதாரண விஷயங்களை கூட ஒன்றுக்கு பல முறை முயன்று முடிக்க வேண்டி இருக்கும். சகோதர, சகோதரிகளைடையே சிறு, சிறு கருத்து வேறுபாடுகள் உருவாகும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும்.

ராகு, கேது முறையே வருடம் முழுவதும் 9,3 இல் சஞ்சரிப்பதால் தந்தையுடன் மனக்கசப்புகளும், பிரச்சினைகளும் உருவாகும். தந்தை உடல் நிலை பாதிப்பு ஏற்படும். பிதுர் வழி சொத்து பிரச்சினை ஏற்படும். வெளியூர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். வேலை மாற்றம் மற்றும் இடமாற்றம் உண்டாகும். மனதில் தைரியம், உற்சாகம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறும். அண்டை அயலார் மற்றும் சகோதர, சகோதரிகளிடையே  சிறு கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளியூர், வெளிநாடு பயணங்களால் ஆதாயம் உண்டாகும். தேவையான உதவி கிடைக்கும். வாழ்வில் பல வெற்றிகளையும் அடைவீர்கள்.

சனிபகவான் 24/1/2020 வரை உங்கள் ராசிக்கு 3 இல் சஞ்சரிப்பதால்மனதில் உற்சாகம், தைரியம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையால் சவால்களையும் சாதகமாக்கி கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் பெறும். நீண்ட வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும்.உங்கள் இலக்கை நோக்கி தொடர்ந்து முன்னேறுவீர்கள். மற்றவர்கள் வியக்கும் வண்ணம் உங்கள் திறன் வெளிப்படும். பெயர், புகழ், மாரியாதை அதிகரிக்கும். விடாமுயற்சியால் வெற்றி பெறலாம் என்பதை உணரும் காலம்.

சனிபகவான் 24/1/2020 க்கு பிறகு உங்கள் ராசிக்கு 4 இல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும். தாய் மற்றும் உறவினர்களிடையே மனக்கசப்புகளும், கருத்து வேறுபாடுகளும் உருவாகும். தாய்க்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படும். சிறு, சிறு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் இரவு நேர, நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. தேவைற்ற வீண் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். வீடு, வாகனம் வாங்கும் போது ஆவண விஷயங்களில் கவனம் தேவை.

வியாபாரிகளே:

5/11/2019 வரை வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும். உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உங்கள் போட்டி நிறுவனத்தை விட நீங்கள் அதிக லாபம் பெறுவீர்கள். உங்கள் நிறுவனம் பிரபலமாகும். கூட்டாளிகள்,பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். 5/11/2019 க்கு பிறகு எதிலும் கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்களே:

5/11/2019 வரை உத்தியோகத்தில் உங்கள் பணியை சிறப்பாக செய்து பலரின் பாராட்டினை பெறுவீர்கள். சக ஊழியர்கள் மற்றும் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். உயரதிகாரிகள் உங்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். 5/11/2019 க்கு பிறகு எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.

மாணவ மாணவியர்களே:

5/11/2019 வரை படிப்பில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். நல்ல மதிப்பெண் எடுத்து சாதனை படைப்பீர்கள்.பள்ளியில் மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். விளையாட்டு போட்டியில் வெற்றி பெறுவீர்கள். நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்கள். 5/11/2019 க்கு பிறகு படிப்பில் கவனம் தேவை.

அரசியல்வாதிகளே:

5/11/2019 வரை தலைமையிடத்தில் உங்கள் நெருக்கம் அதிகரிக்கும். தலைமையில் இருப்பவர்கள்  உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சகாக்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். மக்களின் ஆதரவு அதிகரிக்கும். பெயர், புகழ் அதிகரிக்கும். 5/11/2019 க்குபிறகு ஆழம் தெரியாமல் எதிலும்காலை விடாதீர்கள். 

கலைத்துறையினரே:

5/11/2019 வரை உங்கள் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி சாதனை படைப்பீர்கள். புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். உங்கள் பெயர் விருதுக்கு பரிந்துரைப்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும். மக்களிடம் பிரபலமாவீர்கள். முக்கிய பிரமுகர்களின் நட்பு ஏற்படும். 5/11/2019 க்கு பிறகு கவனமாக செயல்படுங்கள். 

பரிகாரம்:

  • ஸ்ரீ மஹாலக்ஷ்மிக்கு  பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழி படுவதும் நன்மை தரும்.
  • ஸ்ரீ குருபகவான், சனி பகவான், ராகு, கேது பகவானுக்கு ஹோமம், பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
  • ஏழை, முதியோர் மற்றும் ஊனமுற்றோர்க்கு அன்னதானம் மற்றும் தேவையான உதவி செய்தல். காளை மற்றும் பசுவிற்கு அகத்தி கீரை, வெல்லம், பழம் போன்ற உணவு அளித்தல்.
     

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos