(உத்திரம் 2,3,4 ம் பாதம், ஹஸ்தம், சித்திரை 1,2 ம் பாதம்)
அனைவரிடமும் சுமூகமாக பழகும், எந்த நிலையையும் எளிதில் ஏற்றுக் கொள்ளும் கன்னி ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் புதன், உங்கள் ராசிக்கு 7 இல் சஞ்சரிப்பதால் எதிலும் நிலையற்ற தன்மை, மந்த நிலை, தனது திறனை வெளிப்படுத்த இயலாமை, தேவையற்ற கவலை, குழப்பம் ஏற்படும். உங்கள் விடாமுயற்சியாலும், மன உறுதியாலும், கடின உழைப்பாலும் வெற்றி பெறலாம்.
இந்த வருடம் முழுவதும் குருபகவானின் சஞ்சாரம் சாதகமில்லை என்றாலும், குருவின் பார்வை உங்களுக்கு நன்மை தரும். 24/1/2020 வரை சனிபகவான் 4 இல் சஞ்சரிப்பது சாதகமில்லை என்றாலும், 24/1/2020 க்கு பிறகு 5 இல் சஞ்சரிப்பது மிதமான நற்பலன்களை தரும். ராகு, கேது பகவான் 10, 4 இல் சஞ்சரிப்பது மிதமான பலன்களை தரும். இந்த வருடம் நீங்கள் 50 சதவீத நற்பலன்களை பெறுவீர்கள்.
குருபகவான் 5/11/2019 வரை உங்கள் ராசிக்கு 3 இல் சஞ்சரிப்பதால், சகோதர, சகோதரி உறவுகளில் பிரச்சினைகள் உருவாகும்.உங்கள் முயற்சிகளில் பல்வேறு தடைகளும், பிரச்சினைகளும் வரும். மனதில் பய உணர்வும், எதிர்காலம் பற்றிய கவலையும் அதிகரிக்கும். உங்கள் இலக்கு நோக்கிய பயணத்தில் சிதறல் ஏற்படலாம். மனதில் உற்சாகம் மற்றும் நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்வது நல்லது.
குருபகவான் 5/11/2019 க்கு பிறகு 4 இல் சஞ்சரிப்பதால் அசையும், அசையா சொத்துக்களில் பிரச்சினைகள் உருவாகும். தாய் உடல் நலம் பாதிப்பு ஏற்படும். தாயுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உறவினர்களிடையே மனக்கசப்பு ஏற்படும்.
ராகு, கேது முறையே வருடம் முழுவதும் உங்கள் ராசிக்கு 4.10 இல் சஞ்சரிப்பதால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பெயர், புகழ் உண்டாகும்.சுய தொழில் முயற்சிகள் வெற்றி பெறும். புதிய வேலைவாய்ப்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதிகாரப்பதவி, பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். தாய் மற்றும் உறவினர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். சிறு சிறு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், இரவு நேர, நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. வாகனத்துக்குரிய ஆவணங்களை சரியாக வைத்து கொள்வது நல்லது. வீடு, வாகனம் தொடர்பான பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. புதிய வீடு, வாகனம் வாங்கும் பொழுது அதற்கான சரியான ஆவணங்களை சரி பார்த்து வாங்குவது நல்லது.
சனிபகவான் 24/1/2020 வரை உங்கள் ராசிக்கு 4 இல் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்பாடுகளிலும்,முன்னேற்றத்திலும் பல தடைகளையும், பிரச்சினைகளையும் சந்திப்பீர்கள். உடல் நிலை பாதிப்பு உண்டாகும். தாய் மற்றும் உறவினர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். தாய் உடல் நிலை பாதிப்பு உண்டாகும். சிறு சிறு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் இரவு நேர, நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற வீண் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்.
சனிபகவான் 24/1/2020 க்கு பிறகு உங்கள் ராசிக்கு 5 இல் சஞ்சரிப்பதால் மன குழப்பம், கவலை, எதிர்காலம் பற்றிய பயம் உண்டாகும். குழந்தைகள் உடல் நலனில் அக்கறை தேவை. குழந்தைகளால் பிரச்சினைகளும், மனக்கஷ்டங்களும் உருவாகும். பூர்வீக சொத்து பிரச்சினை அதிகரிக்கும். எதிலும் பொறுமை தேவை. எந்த விஷயத்திலும் ஒன்றுக்கு பல முறை சிந்தித்து செயல்படுங்கள்.
வியாபாரிகளே:
வியாபாரத்தில் சிறு சிறு பிரச்சினைகளை சந்திப்பீர்கள். உங்கள் போட்டி நிறுவனத்தின் கை ஓங்கலாம். இருந்தாலும் கடினமான போட்டிக்கிடையில் உங்கள் நிறுவனத்தை ஸ்திர படுத்த பல முயற்சிகளை எடுப்பீர்கள். வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள பல யுக்திகளை கையாள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்களே:
உத்தியோகத்தில் சுமூகமற்ற நிலை உருவாகும்.சக ஊழியர்கள் மற்றும் உயரதிகாரிகளிடையே சிறு சிறு பிணக்குகள் உண்டாகும். ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு உங்கள் கடின முயற்சியால் கிடைக்கும். எதிலும்,பொறுமையுடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட்டால் உங்கள் ஸ்திரத் தன்மை மேம்படும்.
மாணவ மாணவியர்களே:
மாணவ மாணவிகள் கல்வியில் வெற்றி பெற கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும். தேவையற்ற வீண் விஷயங்களில் உங்கள் கவனத்தை செலுத்த வேண்டாம். தேவையற்ற நட்பில் இருந்து விலகி இருங்கள். ஆசிரியர்களுடன் நல்ல உறவை மேம்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் லட்சியத்தை நோக்கி தொடர் முயற்சி இருந்தால் எதிலும் வெற்றியே.
அரசியல்வாதிகளே:
எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுங்கள். வீணான விஷயங்களில் தலையிட வேண்டாம். தலைமையிட உறவை மேம்படுத்தி கொள்ள முயல்வீர்கள். சகாக்களை முழுமையாக நம்பி எந்த செயலிலும் இறங்க வேண்டாம். மக்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள்.
கலைத்துறையினரே:
தற்போதுள்ள வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். பிரபலங்களை அனுசரித்து செல்லுங்கள். சம்பள பாக்கி தாமதமாகலாம். புதிய வாய்ப்புக்களுக்கு அதிக முயற்சிகள் எடுக்க வேண்டி இருக்கும். மற்றவர்களை முழுமையாக நம்பி ஏமாற வாய்ப்புள்ளதால் விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.
பரிகாரம்:
- ஸ்ரீ நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர்க்கு பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுவதும் நனமை தரும்.
- ஸ்ரீ குருபகவான், சனி பகவான், ராகு, கேது பகவானுக்கு ஹோமம், பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
- குழந்தை மற்றும் மாணவர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவி செய்தல். தாய், தந்தையர் ஆசி பெற்று சேவை செய்தல். புதன் மற்றும் சனிக்கிழமையில் ஆலயங்களில் அன்னதானம் செய்தல்.
Leave a Reply