விருச்சிகம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 – 2020 ( Tamil Puthandu Rasi Palangal Viruchigam 2019 – 2020 )

Get Rid of Snake Curses and Doshas - Avail Naga Chaturthi and Garuda Panchami Packages Join Now
x
x
x
cart-added The item has been added to your cart.

விருச்சிகம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 – 2020 ( Tamil Puthandu Rasi Palangal Viruchigam 2019 – 2020 )

February 16, 2019 | Total Views : 2,724
Zoom In Zoom Out Print

(விசாகம் 4 ம் பாதம், அனுஷம், கேட்டை)

வரட்டு பிடிவாதமும், வைராக்கியமும், செயல்பாடுகளில் வேகமும் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் செவ்வாய், ராசிக்கு 7 இல் இருந்து ராசியை பார்ப்பதால், உங்கள் தனித்திறன் வெளிப்படும். எதிலும் நீங்கள் தனி முத்திரை பதிப்பீர்கள். பெண்களால் அனுகூலம் உண்டாகும். அந்நியர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வாழ்வில் உங்களை மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். 
குருபகவான் 5/11/2019 வரைஜென்மகுருவாக சஞ்சரிப்பது சாதகமில்லை என்றாலும், 5/11/2019 க்கு பிறகு 2 இல் சஞ்சரிப்பது சாதகமான நிலை ஆகும். சனிபகவான் 24/1/2020 வரை 2 இல் ஏழரை சனியாக சஞ்சரிப்பது நன்மை இல்லை என்றாலும், 24/1/2020 க்கு பிறகு 3 இல் சஞ்சரிப்பது யோகமான அமைப்பு ஆகும். ராகு, கேது 8,2 இல் சஞ்சரிப்பது சாதகமில்லை என்றாலும், சனி மற்றும் குருவால் நன்மைகள் ஏற்படும். இந்த வருடம் நீங்கள் 70 சதவீத நற்பலன்களை பெறுவீர்கள்.

குருபகவான் 5/11/2019 வரை உங்கள் ராசியில் சஞ்சரிப்பதால் தேவையற்ற பிரச்சினைகள், மனக்குழப்பத்தால் மன அழுத்தம் அதிகரிக்குமென்பதால் எப்போதும் மனதை அமைதியாக வைத்து கொள்ளுங்கள். முன்கோபத்தை தவிர்க்கவும். உங்களுக்கு தொடர்பில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். முடிவெடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும். அவசரபட்டு எந்த செயல்களிலும் ஈடுபட வேண்டாம். மற்றவர்கள் உங்களை குறை கூறுவதை பொருட்படுத்த வேண்டாம். 

குருபகவான் 5/11/2019 க்கு பிறகு உங்கள் ராசிக்கு 2 இல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் சொல்லுக்கு மதிப்பு ஏற்படும். பல வகையில் பண வரவு உண்டாகும். செல்வாக்கு அதிகரிக்கும். பிரிந்து சென்ற உறவுகள் தேடி வரும். புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். முயற்சிதிருவினையாகும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரால் ஆதாயம் உண்டாகும்.

ராகு, கேது முறையே வருடம் முழுவதும் உங்கள் ராசிக்கு 8,2 இல் சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். சிறு, சிறு பிரச்சினைகளையும், தடைகளையும் சந்திக்க வேண்டுமென்பதால் எதிலும் பொறுமையாகவும், கவனமாகவும் செயல்படுங்கள். உங்கள் பேச்சில் கவனம் தேவை. வீண் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். குடும்ப உறவுகளில் சிறு கருத்து வேறுபாடுகள் வந்து மறையும். சிறிய விஷயங்களை ஊதி பெரிது படுத்த வேண்டாம். பொருளாதார பற்றாக்குறை ஏற்படுமென்பதால் வீண் செலவுகளை தவிர்த்து சிக்கனமுடன் இருப்பது நல்லது. சிறு உடல் ஆரோக்கிய குறைபாடு வந்து நீங்கும். சிறு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் நீண்ட தூர பயணம் மற்றும் இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது.

சனிபகவான்  24/1/2020 வரை உங்கள் ராசிக்கு 2 இல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகளும் கருத்து வேறுபாடுகளும் உருவாகும். பொருளாதார நிலையில் தட்டுப்பாடு வந்து நீங்கும். உடல் நிலை பாதிப்பு வந்து நீங்கும். முயற்சிகளில் தடைகளும், பிரச்சினைகளும் உருவாகும்.வாழ்வின் முன்னேற்றத்தில் மந்த நிலை உருவாகும்.சாதாரண விஷயங்கள் கூட ஊதி பெரிதாக்கப்படுமென்பதால் பேச்சில் கவனம் தேவை.
சனிபகவான் 24/1/2020 க்கு பிறகு உங்கள் ராசிக்கு 3 இல் சஞ்சரிப்பதால் மனதில் தைரியம், உற்சாகம் அதிகரிக்கும். உங்கள் ஒவ்வொரு செயல்களிலும் தன்னம்பிக்கை வெளிப்படும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தடைகள் நீங்கும். மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் வாழ்வின் முன்னேற்றமும், செயல்பாடுகளும் மற்றவர்களால் பாராட்டப்படும். எதிலும் வெற்றி நடை போடுவீர்கள். உடல் நிலை ஆரோக்கியம் பெறும். புகழ், பெருமை, மரியாதை அதிகரிக்கும்.

வியாபாரிகளே:

5/11/2019 வரை வியாபாரத்தில் சிறு சிறு பிரச்சினைகளையும், தடைகளையும் சந்திக்க நேரிடும். உங்கள் எதிர் நிறுவனத்தின் கை ஓங்கும். உங்கள் வியாபார நிறுவனத்தின் சில சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். பணியாளர்கள் மற்றும் கூட்டாளிகளை கண்காணிப்பில் வைத்து கொள்வது நல்லது. 5/11/2019 க்கு பிறகு வியாபாரம் பெருகும்.

உத்தியோகஸ்தர்களே:

5/11/2019 வரை உத்தியோகத்தில் கவனம் தேவை. உயரதிகாரிகள், சக ஊழியர்களுடன் கருத்து மோதலை தவிர்க்கவும். பொறுமை தேவை. உங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அலுவலக பணிகளில் தவறு ஏற்படாமல் பார்த்து கொள்ளுங்கள். 5/11/2019 க்கு பிறகு அனைத்து சூழ்நிலைகளிலும் நல்ல மாற்றம் ஏற்படும்.

மாணவ மாணவியர்களே:

5/11/2019 வரை படிப்பில் அதிக கவனம் செலுத்துங்கள். வீணான விஷயங்களில் கவனத்தை செலுத்த வேண்டாம். நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் நல்ல உறவை மேம்படுத்தி கொள்ளுங்கள். கோபத்தை தவிர்க்கவும். மனஒருநிலைப்பாடும், விடாமுயற்சியும் வெற்றி தரும். 5/11/2019 க்கு பிறகு படிப்பில் சாதனை படைப்பீர்கள்.

அரசியல்வாதிகளே:

5/11/2019 வரை தலைமையிடம் கருத்து வேறுபாடுகளும், மனக்கசப்புகளும் ஏற்படும். மறைமுக எதிரிகளால் பிரச்சினைகள் உருவாகும். சகாக்களை முழுமையாக நம்ப வேண்டாம். பொறுமையும், விழிப்புணர்வும் அவசியம். 5/11/2019 க்கு பிறகு தலைமையிடம் நெருக்கம் அதிகரிக்கும். அனைத்திலும் நல்ல மாற்றங்கள் உருவாகும்.

கலைத்துறையினரே:

5/11/2019 வரை புதிய வாய்ப்புக்கள் தாமதமாகலாம். தற்போதுள்ள வாய்ப்புக்களில் பிரச்சினைகளும், தடைகளும் உண்டாகும். பிரபலங்களை பகைத்து கொள்ள வேண்டாம். 5/11/2019 க்கு பிறகு எதிலும் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். உங்கள் தனித்திறன் வெளிப்படும்.

பரிகாரம்:

  • ஸ்ரீ முருகப்பெருமான் பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுவது நன்மை தரும்.
  • ஸ்ரீ குருபகவான், சனி பகவான், ராகு, கேது பகவானுக்கு ஹோமம், பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
  • ஏழை, முதியோர் மற்றும் ஊனமுற்றோர்க்கு அன்னதானம் மற்றும் மருத்துவ உதவி  செய்தல். நாய்க்கு உணவு அளித்தல். வெள்ளிக்கிழமைகளில் பாம்புக்கு பால் வார்த்தல்.

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos