AstroVed Menu
AstroVed
search
search

Spadiga Maalai | ஸ்படிக மாலை பயன்கள்

dateMarch 27, 2020

ஸ்படிகம் என்பது என்ன?

பல நூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைந்து தேங்கி நிற்கும் நீர் பாறைகளாக உருமாறும். இந்த பாறைகளிலிருந்து அழுக்குகள், தூசிகள் கம்பிகள் மற்றும் உடைசல்கள் இல்லாது தூய்மையானதாக வெட்டி எடுக்கப்படும் கற்களே ஸ்படிகம் என்று அழைக்கப்படுகின்றது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட ஸ்படிகங்களை மாலை போல கோர்த்து ஸ்படிக மாலையாக ஆக்குகிறார்கள். நீரிலிருந்து எடுக்கப்படுவதால் இது மிகுந்த குளிர்ச்சியை அளிக்கக் கூடியது.

ஸ்படிகத்தின் தன்மைகள்:

பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் கற்கள் ரத்தினக் கற்கள் என்று கூறுவார்கள். எனினும் ஸ்படிகம் என்பது ரத்தின வகையை சார்ந்தது இல்லை. சாதாரணமாக பூமியிலிருந்து வெட்டியெடுக்கப்படும் எந்த வகை கற்களுக்கும் ஒரு வித சக்தி இருக்கும். அது போல இந்த ஸ்படிக கற்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும் ஆற்றல் உள்ளது. சூட்டை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது. வெப்பத்தை சீரான அளவில் பராமரிக்கும் தன்மை இதற்கு உண்டு.

ஸ்படிகத்தின் அதிர்வலைகள்:

பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கற்கள் தங்களுக்கென்று சில அதிர்வலைகளை கொண்டிருக்கும். ஒரு நாளில் நமது மூச்சு எண்ணிக்கை சராசரியாக 21,600. அதாவது 24 மணி நேரத்திற்கு இந்த அளவு ஆகும். ஸ்படிக மணி, ஒரு மணி நேரத்திற்கு நமது ஒரு நாளின் மூச்சின் அளவிற்கான சுவாசத்தை வெளிப்படுத்துகின்றது. இது நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியது.

ஸ்படிகத்தினை பயன்படுத்தும் முறை:

ஸ்படிகத்தினை தனியாகவும் பயன்படுத்தலாம். மாலையாக கோர்த்தும் பயன்படுத்தலாம். இதனை கழுத்தில் மாலையாக அணிந்து கொள்ளலாம். ஜெப மாலையாகவும் பயன்படுத்தலாம். ஆனால் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் ஒரே மாலையை பயன்படுத்துவது கூடாது. அதாவது கழுத்தில் அணியும் மாலையை ஜெபம் செய்யவும் ஜெபம் செய்யும் மாலையை கழுத்திலும் அணிதல் கூடாது. ஸ்படிக மாலை அணியும் போது உடலிலும் உள்ளத்திலும் தூய்மை இருக்க வேண்டும். குளிர்ச்சியான உடல் தன்மை உடையவர்கள் இதனை அணிவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் குளிர்ச்சி இன்னும் அதிகமாகும்.

ஸ்படிகத்தின் தரத்தை கண்டறிதல்:

அசலான ஸ்படிக மாலையை நாம் எளிதாக கண்டு உணரலாம். ஸ்படிகம் நீர் பாறையில் இருந்து வெட்டி எடுக்கப்படுவதால் இதை தொடும் போது ஒரு குளிர்ச்சித் தன்மை இருக்கும். அது அசலானது என்றும் உயர் தரமானது என்றும் நாம் கண்டு கொள்ளலாம். தூய ஸ்படிகம் என்றால் ஊடுருவும் தன்மை இருக்கும். மற்றவை தரமற்றவை ஆகும். அதில் கோடுகள், கறைகள் இருந்தால் நல்ல பலன்களை அளிக்காது. அது போல வெடிப்பு மற்றும் உடைப்புகள் இருக்கக் கூடாது. ஸ்படிகத்தை தண்ணீரில் போட்டால் தண்ணீர் தன்மை போலவே இது காணப்படும். தண்ணீரும் ஸ்படிகமும் வேறு போல தெரியாது.

ஸ்படிகத்தின் நிறங்கள் :

ஸ்படிகங்கள் வெள்ளை, நீலம், சிகப்பு, மஞ்சள் மற்றும் பல்வேறு நிறங்களில் கிடைக்கின்றது.

ஸ்படிகமும் ஆன்மீகமும்:

இராமாயணத்தில், ராமர் வனவாசத்தின் போது ஸ்படிகப் பாறையின் மீது அமர்ந்திருந்தார் என்ற குறிப்பு காணப்படுகின்றது. ராமனும் சீதையும் ஸ்படிக லிங்கத்தை பூஜித்தார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து நாம் ஸ்படிகத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம். பல ஆலயங்களில் விநாயகர் மற்றும் லிங்கங்கள் ஸ்படிகத்தால் ஆனவையாக இருப்பதை இன்றும் நாம் கண்கூடாகக் காணலாம்.

ஸ்படிக விக்கிரகங்கள் பயன்கள் :

நமது பூஜை அறையில் ஸ்படிக விக்கிரகங்களை தூய்மையான இடத்தில் வைத்து தூய மனதுடன் பூஜிக்கும் போது நமக்கு நேர்மறை ஆற்றல் கிடைக்கின்றது. இல்லத்தில் தெய்வீகத்தன்மை பெருகுகின்றது. உடலும் உள்ளமும் தூய்மை அடைகின்றது.

ஸ்படிகத்தின் மூலம் நாம் பெரும் அறிவியல் ரீதியான பலன்கள்:

1. நீர்ப் பாறையிலிருந்து வெட்டி எடுக்கப்படுவதால் இது உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.

2. உடலுக்கு மட்டுமின்றி உள்ளத்திற்கும் குளிர்ச்சி அளிக்கும்.

3. குளிர்ச்சியானது என்பதால் உடல் வெப்பத்தை தனிப்பது மட்டுமின்றி உடல் வெப்பத்தை சூடாகவும் வைத்திருக்கும்.

4. இதற்கு அதிர்வலைகள் உண்டு. அந்த அதிர்வலைகள் நம்முள் மாற்றத்தை ஏற்படுத்தும்.

5. அதிர்வலைகள் மூலம் நம்முள் நேர்மறை சிந்தனை எழும். எண்ணங்களில் தெளிவு இருக்கும்.

6. உள்ளம் மட்டும் இன்றி உடல் கொதிப்பையும் இது சீராக்க்கும்.

7. உயர் ரத்த அழுத்தம் மன அழுத்தம் போன்றவற்றை நீக்கும்.

8. கழுத்தில் அணிந்து குளிக்கும் போது அதன் மீது படும் நீர் நம் மீதும் படுவதால் நாம் உடல் வெப்ப நிலை சீராகும்.

9. நமது உடல் சக்கரங்களை ஊக்குவிக்கும் ஆற்றல் ஸ்படிகத்திற்கு உண்டு.

ஸ்படிக மாலை பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்


banner

Leave a Reply