சிம்ம ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022 (Simmam Rasi Guru Peyarchi Palangal Tamil 2021 to 2022)

சிம்ம ராசி குரு பெயர்ச்சி 2021 பொதுப்பலன்கள்:
வருட கிரகம் என்று கூறப்படும் கிரகங்களில் குரு தனிச்சிறப்பு வாய்ந்த கிரகம் ஆகும். ஒவ்வொரு கோளுக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அந்த வகையில் குரு கிரகம் பூரண சுப கிரகம் என்றும் சாத்வீக கிரகம் என்றும் கூறப்படும். குரு கிரகம் நவக்கிரக அந்தஸ்து பெற்று குரு பகவான் என்று அழைக்கபடும் பெருமை பெற்றது. குரு பகவான் நவம்பர் 21, 2021, ஞாயிற்றுக் கிழமை அன்று மதியம் 02:06 இந்திய நேரப்படி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். கும்ப ராசியானது சிம்ம ராசிக்கு களத்திர ஸ்தானமான ஏழாம் வீடாக அமைவதால் திருமணத்தை எதிர் நோக்கிக் காத்திருந்தவர்களுக்கு திருமணத்தையும், புதிய தொழிலில் அமைப்பையும் ஏற்படுத்தக்கூடியதாக இந்த குரு பெயர்ச்சி 2021 அமையப்போகிறது. ஏழாம் பாவத்தில் நின்று ஐந்தாம் பார்வையாக லாபஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக சிம்ம ராசியையும், ஒன்பதாம் பார்வையாக இளைய சகோதர ஸ்தானத்தையும், குரு பார்வையிடப்போகிறார். இந்த குருப் பெயர்ச்சியானது சிம்ம ராசியைச் சார்ந்தவர்களுக்கு தாம்பத்திய வாழ்வில் நல்ல அன்யோன்யத்தையும், தொழில் முயற்சிகளில் வெற்றியையும், பொருளாதார நிலையில் ஏற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கப்போகிறது.
குரு பகவானின் ஆசிகளை பெறுவதற்கு இப்போது முன்பதிவு செய்து கொள்ளுங்கள்
குடும்பம்:
குடும்ப உறப்பினர்களுடனான உறவு நிலை சிறப்பாக இருக்கும். குறிப்பாக இளைய சகோதர சகோதரிகளிடம் நல்லுறவு காணப்படும். திருமணம் மற்றும் வளைகாப்பு போன்ற சுப விசேஷங்கள் மற்றும் விருந்து விசேஷங்கள் காரணமாக வீட்டில் கலகலப்பான சூழ்நிலை இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்கள் நட்பு வட்டம் விரிவடையும். புதிய நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் தாயாரின் உடல் நிலையில் சற்று கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
குடும்ப உறவுகள் மேம்பட குரு பூஜை
ஆரோக்கியம்:
ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால் தான் சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்க இயலும். எனவே உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் சிறந்த முறையில் காத்துக் கொள்ளுங்கள். சிறுநீரகம் சம்பந்தப்பட்ட உடல்நல பாதிப்பு ஏற்படலாம். போதுமான நீர் உட்கொண்டு இந்த பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். சிறிய பாதிப்பு என்றாலும் உடனடி கவனம் செலுத்தி ஆரோக்கியத்தை காத்துக் கொள்ளுங்கள்.
ஆரோக்கியமான உடல் நலனுக்கு செவ்வாய் பூஜை
காதல் / திருமணம்:
காதல், திருமணம் இரண்டிலும் உங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் காத்திருக்கின்றன. காதலர்கள் தங்கள் காதலில் வெற்றி காண்பார்கள். திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் தங்கள் முயற்சி கை கூடி வருவதால் மகிழ்ச்சி கொள்வார்கள். தடைகள் யாவும் நீங்கப் பெற்று இனிய இல்லறம் தொடங்க ஏற்ற காலம். கணவன் மனைவி ஒற்றுமை கூடும்.
காதல் மற்றும் திருமண முயற்ச்சிகள் கைகூட லக்ஷ்மி பூஜை
நிதி நிலை:
உங்கள் பொருளாதார நிலை திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும். பண வரவு அதிகரிக்கும். கையில் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். சேமிப்பு மற்றும் முதலீடுகளின் மூலம் உங்களின் பெரும் செலவுகளை சமாளிக்க இயலும். அசையாச் சொத்துக்களை வாங்குவது அல்லது இருக்கும் சொத்தை பராமரிப்பது என்ற வகையில் செலவினங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
நிதி நிலையில் ஏற்றம் ஏற்பட லக்ஷ்மி பூஜை
வேலை / தொழில்:
அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் கருத்து வேறுபாடு ஏற்படாத வகையில் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் சுமுகமான நிலையை ஏற்படுத்திக் கொள்ள இயலும். எதிர் வாதம் மற்றும் வாக்கு வாதங்கள் எடுபடாது என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது. நிதித்துறை, கல்வித்துறை, மருத்துவத் துறை மற்றும் நீதித்துறையில் வேலை செய்பவர்கள் தங்கள் தொழிலில் பிரகாசிப்பார்கள். வெளிநாட்டில் வேலை வேண்டும் என்ற உங்கள் எண்ணம் கை கூடும். பேராசிரியர் தொழிலில் இருப்பவர்களுக்கு கணிசமான வருமானம் கூடும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதித் தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள். அது உங்களுக்கு எதிர்காலத்தில் நன்மை அளிக்கும்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் ஏற்றம் பெற சனி பூஜை
கல்வி:
பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலை பின்பற்றுவதன் மூலம் வெற்றி காண இயலும். பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் உடனடியாக வேலை கிடைக்கப் பெறுவார்கள். ஆராய்ச்சித் துறை மாணவர்கள் தங்கள் கடின முயற்சி மூலம் வெற்றி இலக்கை எட்ட இயலும்.
கல்வியில் ஏற்றம் உண்டாக துர்கா பூஜை
வீட்டில் செய்யக்கூடிய பரிகாரங்கள்:
- வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட அனைத்திலும் வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கும்.
- வியாழக்கிழமைகளில் விரதமிருந்து சிவாலயம் சென்று வருவது நன்மை பயக்கும்.
- ஏழை மாணவர்களுக்கு புத்தகம் வாங்கிக் கொடுப்பது உங்கள் வாழ்வில் ஏற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
