சிம்ம ராசி அன்பர்கள் நேரான நிமிர்ந்த கம்பீரமான தோற்றம் உடையவர்கள். அகன்ற மார்பும் உயரமும் அதற்கு தகுந்தாற்ப் போன்று சதை பிடிப்பும் உடையவர்கள். சிறு வயதில் மெலிந்தும் வயது ஆக ஆக தோற்றப் பொலிவும் கவர்ச்சியும் பெறுவார்கள். சுருண்ட முடி, அழகிய முன் நெற்றி, அடர்ந்த புருவம், உறுதியான பற்கள், அகண்ட மூக்கு, விரிந்த உதடும் விரிந்த மார்பும், நீண்ட கழுத்தும் நீண்ட கைகள் மற்றும் நீண்ட வயிறும் உடையவர்கள். பெண்களுக்கு அழகான நெற்றியும், சுருண்ட முடியும், சுருக்கம் விழுந்த நெற்றியும், வானவில் போன்ற புருவமும், அழகான வாயும், குட்டையான கழுத்தும், உருண்டு திரண்ட கால்களும் உடையவர்கள்.
இவர்கள் போற்றுதலுக்கு உரிய சிந்தனை உடையவர்கள். விசுவாசம் மிக்கவர்கள். விரைந்து செயல்படுவார்கள். இவர்கள் புகழை விரும்புபவர்கள். அதிகாரத்துடன் வாழ்பவர்கள். தனது மதிப்பு மரியாதையை விட்டுக் கொடுக்கமாட்டார்கள். எளிதில் கோபம் அடைபவர்கள். பெருந்தன்மையும், நியாயமான கோபமும் வேகமும் உடையவர்கள்.
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சிவ பெருமானின் அருளைப் பெற்றிருப்பார்கள். அதிகமாக உணவு புசிப்பார்கள். வியாதிகள் ஏற்பட்டாலும் இவர்களுக்கு உடனே குணமாகும். தொழிலில் ஊக்கத்துடன் செயல்படுவார்கள். தன்னுடைய அந்தஸ்துக்கு குறைவாக இருப்பவர்களிடம் அலட்சியமாக, அதிகாரமாக, கர்வம் கொண்டவர் போல நடந்து கொள்வார்கள்.

Leave a Reply