கடக ராசி அன்பர்கள் நடுத்தரமான உயரம் அல்லது அதற்கு சற்றும் குறைவான உருவம் கொண்டவர்கள். குழந்தைப் பருவத்தில் மெலிந்தும் வளர வளர பலமான உடல் தேகம் உடையவர்களாக இருப்பார்கள். உறுதியான மனம் கொண்டவர்கள். சுருண்ட கேசமும் கவர்ச்சியான கண்களும் அடர்ந்த புருவமும் உறுதியான பற்களும் சற்று தட்டையும் அல்லாத கூர்மையும் அல்லாத மூக்கும் உடையவர்கள். உறுதியான மார்பும் நீளமான விரல்களும் கொண்டவர்கள். பெண்களுக்கு லேசான சுருண்ட அழகான தேகமும் முத்து போன்ற பற்களும் கண்களில் கவர்ச்சியும் நீளமான விரல்களும் நீண்ட கால்களும் உடையவர்கள்.
இவர்கள் வளமான கற்பனைத் திறன் உடையவர்கள். துணிச்சலாக செயல்படுவார்கள். சுயநலத்தோடு சுக போகங்களை அடைவார்கள். மாறும் தன்மையும் மாற்றிப் பேசும் இயல்பும் சந்தர்ப்ப சூழ்நிலைகேற்பவாதிடுவார்கள். எதிலும் பின்வாங்க மாட்டார்கள். இவர்கள் உழைப்பின் மூலம் படிப்படியாக முன்னேற்றம் அடைவார்கள். இவர்கள் மற்றவர் நலனில் அக்கறை செலுத்துவார்கள். விருப்பமான உணவு வகைகளை உண்பார்கள்.
இவர்கள் சாமார்த்தியமாகப் பேசுவார்கள். பண விஷயங்களில் சுயநலமாகச் செயல்படுவார்கள். தன்னைத் தானே புகழ்ந்து பேசிக் கொள்வார்கள். தனக்கு நிகர் யாருமில்லை என்ற கர்வத்துடன் இருப்பார்கள். இதனால் சில சமயம் இவர்கள் பெரியோர்களிடம் பணிவு இல்லாமல் இருப்பார்கள்.

Leave a Reply