விருச்சிகம் செப்டம்பர் மாத ராசி பலன் 2022 | September Matha Viruchigam Rasi Palan 2022

விருச்சிகம் செப்டம்பர் மாத பொதுப்பலன்கள் 2022:
குடும்பத்தின் அமைதி காக்க நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். காதல் உறவில் உள்ளவர்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் உறவில் நெருக்கம் அதிகரிக்கும். திருமணத்திற்குக் காத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு இந்த மாதம் திருமண பந்தம் அமையும். இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். தொழில் சிறப்பாக நடக்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதமாக இருக்கும். படிப்பில் வெற்றி கிடைக்கும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
காதல் / குடும்பம்:
குடும்பத்தில் அனுசரித்து செல்வதன் மூலம் குடும்ப அமைதி காக்க இயலும். தேவையற்ற பேச்சுகளை தவிர்த்தல் நலம். வாக்குவாதங்களை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. திருமணத்திற்காக காத்து கொண்டு இருக்கும் காதல் ஜோடிகளுக்கு திருமணம் கைகூடி வரும். திருமணம் தடைபட்டு துணை கிடைக்காமல் காத்திருப்பவர்களுக்கு தடைகள் நீங்கி தக்க துணை கிடைக்க இந்த மாதம் ஏற்ற மாதமாக இருக்கலாம்.
காதல் உறவு மேம்பட சுக்கிரன் பூஜை
நிதி நிலை:
இந்த மாதம் உங்களின் நிதிநிலை வரவேற்கத்தக்க வகையில் சிறப்பாக இருக்கும். உங்கள் வருமானம் பெருகும். யூக வணிகமான பொருள் வர்த்தகத்தில் அதிக லாபங்களை எதிர்பார்க்கலாம். இந்த மாதம் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பாரம்பரிய சொத்துக்களை நல்ல விலைக்கு விற்று அதிக தன லாபத்தை எதிர் பார்க்கலாம்.
நிதி நிலையில் மேன்மை அடைய ராகு பூஜை
வேலை:
உத்த்யோகத்தைப் பொறுத்தவரை அனுகூலமான நிலை என்றாலும் நீங்கள் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வேலை பளு காரணமாக கூடுதல் நேரம் நீங்கள் பணியாற்ற வேண்டியிருக்கும். என்றாலும் நீங்கள் சமாளித்து பணிகளை முடித்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் உங்களை தேடி வரும் வரும். அதன் மூலம் தன நிலையில் நல்ல ஏற்றம் காணப்படும். அரசு உத்தியோகத்தில் நீதித்துறையில் வேலை செய்பவர்களுக்கு உத்தியோக உயர்வுடன் சேர்த்து சம்பள உயர்வும் கிடைக்கும்.
தொழில்:
தொழில் சிறப்பாக நடைபெற நீங்கள் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதற்கிணங்க தங்கள் லாப இலக்குகளை அடைய அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதிக உழைப்பை போடுவதன் மூலம் தொழிலை மேம்படுத்த திறமையுடன் செயல்பட்டு வெற்றி கொள்வீர்கள். கல்வி சம்மந்தப்பட்ட பொருட்களை விற்கும் சிறு வியாபாரிகள் தங்கள் தொழில் மூலம் அதிக லாபங்களை பெறுவார்கள்.
தொழில் வல்லுனர்கள்:
நீங்கள் தனியார் துறையில் பணியில் இருப்பவர் என்றால் உங்கள் திறமைகள் பளிச்சிடும் வகையில் நீங்கள் செயலாற்றுவீர்கள். மேலதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பீர்கள். இதன் மூலம் மேலதிகாரிகளின் ஆதரவையும் உயர்பதவிக்கான ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் தொழில் மேம்பட அதிக வாடிக்கயாளர்க்ளைப் பெறுவீர்கள். சுயமாக தொழில் செய்யும் தொழில் வல்லுனர்கள் அதிக முதலீடுகளை இந்த மாதம் செய்ய வேண்டாம்.
உத்தியோகம் மற்றும் தொழில் உயர்வுக்கு முருகன் பூஜை
ஆரோக்கியம்:
மன ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் மனதில் சிறிது பதட்ட நிலையும் மன அழுத்தமும் காணப்படும். காலை மற்றும் மாலை தியானம் செய்வதை வழக்கமாக்கி கொள்வது உங்கள் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உணவு முறையில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.
ஆரோக்கியமான உடல் நலனுக்கு செவ்வாய் பூஜை
மாணவர்கள்:
பள்ளி படிப்பு படிக்கும் மாணவர்கள் கல்வியை நேர்த்தியாக கற்று வெற்றி பெறுவார்கள். கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு மனதை ஒருமுகப்படுத்துவது கடினமாக இருக்கும். இதனால் படிப்பில் கவனச்சிதறல்கள் ஏற்படலாம். படிக்கும் போது கவனம் தேவை. ஆராய்ச்சி கல்வி மாணவர்கள் தங்களது ஆராய்ச்சியில் வெற்றி பெற்று அனைவரின் பாராட்டுதலையும் பெறுவார்கள்.
மாணவர்களின் கிரகிக்கும் திறன் கூட கணபதி பூஜை
சுப நாட்கள்:
1, 2, 3, 8. 21, 22, 23, 24, 28, 30.
அசுப நாட்கள்:
18, 19, 20. 24, 25, 27, 29.
