AstroVed Menu
AstroVed
search
search

துலாம் செப்டம்பர் மாத ராசி பலன் 2022 | September Matha Thulam Rasi Palan 2022

dateAugust 3, 2022

துலாம் செப்டம்பர் மாத பொதுப்பலன்கள் 2022:

துலாம் ராசி அன்பர்களே! குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான  உறவு நிலை சீராக சுமுகமாக இருக்கும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகம் இருந்தாலும் அதனை சரிவர இயற்ற இயலாத நிலை இருக்கும். பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும். அதிக பொறுப்புகள் காரணமாக உங்களால் தனிப்பட்ட முறையில் அல்லது குடும்பத்திற்கென நேரம் ஒதுக்க இயலாத நிலை இருக்கும். நீங்கள் தனியார் துறையில் பணி புரிபவர் என்றால் உத்தியோகம் காரணமாக  வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். உங்களில் சிலர் வேலை மாற்றங்களை விரும்புவீர்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்பம்:

குடும்பத்த்தில் அமைதி நிலவும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரித்து தாம்பத்யத்தில் நல்லிணக்கம் கூடும். .இந்த மாதம் குழந்தைகளுடனான உறவு வலுப்படும். உடன் பிறப்புகளுடனான உறவுநிலை பலப்படும். அவர்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள்.

நிதி நிலை:

உங்கள் நிதிநிலை இந்த மாதம் சீராக இருக்கும். பங்கு வர்த்தகம் மூலம் லாபங்களை ஈட்ட இயலும். கிரிப்டோ கரண்சியில் முதலீடு செய்வதற்கு இந்த மாதம் சிறந்த மாதமாகும். அதிக தன வருவாயை ஈட்டித்தரும் முழு நேரத்தொழில் ஆகவும் இந்த தொழில்கள் அமையும். இந்த மாதம் வீடு பராரமரிப்பு அல்லது மராமத்து பணிக்காக நீங்கள் செலவுகளை மேற்கொள்வீர்கள்.  புதிய வீடு கட்டும் பணிக்காக அதிகம் செலவுகள் செய்வீர்கள்.

வேலை:

பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும். பணியிடச் சூழலில் நீங்கள் சில சிக்கல்களை சந்திக்க நேரும். உங்களின் கீழ் பணிபுரிபவர்களின் மூலம் சில பிரச்சனைகளை நீங்கள் சந்திப்பீர்கள். எனவே நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்.  நீங்கள் தனியார் துறையில் பணி புரிபவர் என்றால் மேல் அதிகாரிகளின் மூலம் உத்தியோகத்தில் ஆதாயங்களைப் பெறுவீர்கள். 

தொழில்:

இந்த மாதம் உங்கள் தொழில் சிறப்பாக நடைபெற வாய்ப்பு உள்ளது. நீங்கள் கூட்டுத் தொழிலில் ஈடுபட்டிருந்தால் இந்த மாதம் நீங்கள் தொழிலில் ஒரு புதிய திருப்புமுனையை காண்பீர்கள். தொழிலை விரிவு படுத்துவீர்கள் அல்லது புதிய கூட்டாளியை இணைத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் அதிக லாபங்களை சம்பாதிப்பீர்கள். பழம் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி தொழில் செய்யும் நிறுவனங்கள் அதிக லாபத்தை பெற முடியும்.  

தொழில் வல்லுனர்கள்:

இந்த மாதம் தொழிலை விரிவுபடுத்தும் எண்ணத்துடன் நீங்கள் புதிய தொழிலை மேற்கொள்வீர்கள். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளிநாடு செல்ல நேரலாம். வெளிநாட்டு பயணங்கள் மூலம் தொழில் ஆதாயம் பெறுவீர்கள். அங்கு புதிய தொழிலை தொடங்கும் வாய்ப்பும் உள்ளது.

ஆரோக்கியம்:

அதிக வேலைப் பளு காரணமாக அசதியும் சோர்வும் காண்பீர்கள். இது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே முறையான ஓய்வை மேற்கொள்ளுங்கள். ஒற்றை தலை வலி மற்றும் இடுப்பு வலி போன்ற சிறு சிறு உபாதைகளால் நீங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. யோகா மற்றும் தியானம் செய்வது உங்களுக்கு மேலே கூறிய பாதிப்புகளிலிருந்து காக்கும்.

மாணவர்கள்:

மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்தி படிப்பதில் சில சிரமங்களை சந்திப்பார்கள். இதனால் படிப்பில் கவனம் திசை திரும்பும் வாய்ப்புகள் உள்ளது. மாணவர்கள் தங்கள் பொறுப்புகளை சரிவர நிறைவேற்ற வேண்டும். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் நண்பர்களிடம் நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள். இந்த நட்பானது குழுவாக படித்து படிப்பில் வெற்றி பெறுவதற்கு வழிவகை செய்யும்.

சுப நாட்கள்:

1, 2, 3, 6, 7, 8, 10, 11. 12.

அசுப நாட்கள்:

4, 5, 9, 14, 16, 17, 18, 19.

Leave a Reply