கன்னி செப்டம்பர் மாத ராசி பலன் 2022 | September Matha Kanni Rasi Palan 2022

கன்னி செப்டம்பர் மாத பொதுப்பலன்கள் 2022:
கன்னி ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் கவனமாகச் செயல்பட வேண்டும். குடும்பத்தில் சலசலப்புகள் காணப்படும். வயதில் மூத்தவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். தேவையற்ற விஷயங்களைப் பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும். அனுசரித்து நடந்து கொள்வது வாக்கு வாதங்களை தவிர்ப்பது அமைதிக்கு வழி வகுக்கும். சகோதர சகோதரிகளிடம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். பணம் சம்பந்தமான பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரும். பணத்தை கடனாக கொடுப்பதோ வாங்குவதோ தவிர்க்கப்பட வேண்டும். உங்கள் சேமிப்பைக் கொண்டு செலவுகளை சரிகட்ட முயற்சி மேற்கொள்ளுங்கள். தூக்கமின்மை பிரச்சினைக்கு நீங்கள் ஆளாவீர்கள். மாணவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி உடல் ஆரோக்கியத்தை பராமரித்தால் தான் படிப்பில் கவனம் செலுத்த இயலும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
காதல் / குடும்பம்:
திருமண வயதில் இருக்கும் கன்னி ராசி அன்பர்கள் இந்த மாதம் தங்களுக்கு ஏற்ற துணை கிடைக்கப் பெறுவார்கள். குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்களுடன் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். உங்கள் பேச்சில் கவனம் தேவை. உடன் பிறப்புகளுடன் பணம் விஷயமாக கருத்து மோதல்கள் வரலாம். குழந்தைகள் உடனான உறவு நிலை மேம்படும்.
நிதி நிலை:
உங்கள் நிதிநிலை ஓரளவு சீராக இருக்கும். தொழில் மூலம் வருமானம் கூடும். இதனால் பொருளாதாரத்தில் ஏற்றமான நிலை இருக்கும். மியூச்சுவல் ஃபண்ட் சம்மந்தப்பட்ட முதலீடுகள் மூலமாக தன வருவாய் அதிகரிக்கும். வீட்டில் உள்ள மாடித் தோட்டம் பராமரித்தல் பேன்ற பணிக்காக அதிக செலவுகள் ஏற்படும்.
வேலை:
உத்தியோகத்தில் இருக்கும் கன்னி ராசி அன்பர்கள் இந்த மாதம் அதிக பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்களுக்கு அதிக பொறுப்புகள் வழங்கப்படும். குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படும். பொறுப்புகள் கூடும். இது உங்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தும். தனியார் துறையில் மின்னணு பொறியியல் துறையில் வேலை தேடுபவர்களுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.
தொழில்:
தொழில் சிறப்பாக நடக்கும். தொழில் மூலம் முன்னேற்றமும் வளரச்சியும் கிட்டும். உங்கள் வருமானம் உயரும். பட்டு வளர்ப்பு தொழிலில் ஈடுபடுபவர்கள் தங்கள் தொழில் மூலம் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். கூட்டுத்தொழில் மூலம் தங்களின் பணப்புழக்கம் அதிகரிக்கும். நடிப்புத் துறை மற்றும் கலைத் துறையில் உள்ள தொழில் முதலீட்டாளர்கள் சிறந்த வகையில் வருமானம் ஈட்டுவார்கள்.
தொழில் வல்லுனர்கள்:
தொழில் வல்லுனர்களுக்கு இது சிறந்த பலன் தரும் மாதமாக இருக்கும். நீங்கள் உத்தியோகத்தில் இருந்தாலும் சுய தொழில் புரிந்தாலும் சிறந்த நல்ல பலன்களைக் காண்பீர்கள். நீங்கள் தனியார் உத்தியோக தொழில் வல்லுனர் எனில் உங்களுக்கு பணியிடத்தில் சுமூகமான நிலை காணப்படும். அரசாங்க உத்தியோகத்தில் பணியில் உள்ளவர்களுக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படும். தொழில்நுட்பம் சார்ந்த தொழில் வல்லுனர்களுக்கு தங்கள் தொழில் தொடர்பான வெளிநாட்டுப் பயணங்கள் லாபத்தைக் கொடுக்கும்.
ஆரோக்கியம்:
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனம் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். நீங்கள் மனச் சோர்விற்கு ஆளாக நேரலாம். அதன் விளைவாக தூக்கமின்மை காணப்படும். நீங்கள் தியானமும் நடைபயிற்சியும் செய்து மனதை அமைதியாக வைத்துகொள்ள வேண்டும்.
மாணவர்கள்:
மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயின்று தேர்வில் வெற்றி காண்பார்கள். கடின உழைப்பின் மூலம் மேன்மை பெறுவார்கள். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெற்று முதல் நிலையை பிடிப்பார்கள். ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்கள் படிப்பிற்கென நேரம் ஒதுக்கிப் படித்தால் தான் தங்கள் ஆராய்ச்சியில் வெற்றிகளைக் காண முடியும். மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய இயலும். ஆரோக்கியம் சீராக இருந்தால் தான் படிப்பில் கவனம் செலுத்த இயலும். வயிற்றுப்புண் மற்றும் அஜீரணக் கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம், உண்ணும் உணவில் கவனம் தேவை.
சுப நாட்கள்:
1, 2, 3, 7, 8, 10, 12, 13, 17, 20.
அசுப நாட்கள்:
4, 5, 6, 9, 11, 14, 15, 16, 18, 19.
