AstroVed Menu
AstroVed
search
search

சிம்மம் செப்டம்பர் மாத ராசி பலன் 2022 | September Matha Simmam Rasi Palan 2022

dateAugust 3, 2022

சிம்மம் செப்டம்பர் மாத பொதுப்பலன்கள் 2022:

இந்த மாதம் கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை நிலவும். கருத்து வேறுபாடுகள் நீங்கி நல்ல புரிந்துணர்வு காணப்படும். இருவருக்கும் இடையே நல்ல உறவும் அந்நியோன்யமும் காணப்படும். ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் அன்பைப் பொழிவீர்கள். அக்கறை செலுத்துவீர்கள். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் கடந்த கால பங்கு வர்த்தக முதலீடுகளின் மூலம் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்க பெறுவீர்கள். கூட்டுத் தொழில் மூலம் லாபம் கிட்டும். தொழில் சிறப்பாக நடக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். மாணவர்கள் இந்த மாதம் பல புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் காட்டுவார்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்பம்:

சிம்ம ராசி காதலர்களுக்கு இது சந்தோசம் நிறைந்த மாதம். வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்வார்கள். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும்.உங்கள் மனதில் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். ஆன்மீக குருவிடம் இருந்து தீட்சை பெறும் வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் ஆன்மீக தேடுதலுக்காக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். 

நிதி நிலை:

நிதிநிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் ஏற்றமுடன் காணப்படும். வருமானம் உயரும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். வரவை விட செலவுகள் குறைவாக இருக்கும் என்பது மகிழ்ச்சிகரமான விஷயம். உபரிப் பணத்தை சேமிக்க வேண்டியது அவசியம். இது உங்களின் எதிர்கால செலவுகளுக்காக பயன் தரும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள். சமையல் அறையில் தண்/ணீர் வழியும் வாய்ப்பு உள்ளது.. அவ்வாறு வழிய விட்டால் அதனால் பணப் பிரச்சனைகள் ஏற்படலாம். சொட்டு சொட்டாக வழியும் போதே நீர் கசிவை சரி செய்து தன விரயம் ஏற்படாமல் தவிர்க்கலாம். .  

வேலை:

உத்தியோகத்தைப் பொறுத்தவரை நல்ல நிலை  இருக்கும். பணியிடத்தில் உங்களுக்கு நல்ல பெயரும் புகழும் கிட்டும். உங்களுக்கு புதிய பணிகள் வழங்கப்படும். புதிய பொறுப்புகளை நீங்கள் வகிக்க வேண்டியிருக்கும். இவை அனைத்தும் உங்களுக்கு ஆதாயம் தரும் வகையில் அமையும். நீங்கள் அரசுத் துறையில் பணிபுரிபவர் என்றால் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய அந்தஸ்தைப் பெறுவீர்கள். உணவு பதப்படுத்தும் தொழில் செய்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய சம்பள உயர்வும் கிடைக்கும்.  

தொழில்:

நீங்கள் சொந்தத் தொழில் அல்லது வியாபாரம் செய்பவர் என்றால் இந்த மாதம் நீங்கள் அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம்.  மளிகை அல்லது பலசரக்கு வியாபாரத்தின் மூலம் நீங்கள் கணிசமான லாபம் சம்பாதிக்கலாம். எண்ணெய் மற்றும் கனிமவளம் சம்மந்தப்பட்ட தொழில் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்பு அதன் நன்மை தீமைகளை ஆராய்ந்து முடிவு எடுப்பது நன்மை பயக்கும்.  ஆடை சம்மந்தப்பட்ட ஏற்றுமதி தொழில் மூலம் அதிக லாபத்தை பெறலாம். 

தொழில் வல்லுனர்கள்:

நீங்கள் தனியார் துறை சார்ந்த தொழில் வல்லுநர் எனில் இந்த மாதம் உங்களுக்கு அதிக பணிகள் காணப்படும். ஓய்விற்கு நேரமின்றி பரபரப்பாக செயல்படுவீர்கள். மருத்துவ துறையைச் சார்ந்தவர் என்றால் உங்கள் தொழிலில் நீங்கள் சிறந்து விளங்க வாய்ப்பு உள்ளது. அச்சு ஊடகம் சம்மந்தப்பட்ட கூட்டுத் தொழில் செய்பவர்கள் அதிக லாபத்தை அடைவார்கள்.

ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். சிறு சிறு பாதிப்புகள் வந்து போகும். பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை. சிறுநீரகம் சம்மந்தப்பட்ட உடல் நல பாதிப்பு ஏற்படலாம். போதுமான நீர் அதிலும் வெதுவெதுப்பான நீர் அருந்தி இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு சுவாசம் சம்மந்தப்பட்ட தொந்தரவுகள் ஏற்படலாம். சிறு பிரச்சனை என்றாலும் மருத்தவரிடம் காண்பித்து சிகிச்சை எடுத்துக்கொள்வது நன்மை பயக்கும்.

மாணவர்கள்:

மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். புதிய விஷயங்களை கற்க வேண்டும் என்ற ஆர்வம் மாணவர்கள் மனதில் இருக்கும். அதிலும் குறிபபாக பல புதிய அறிவியல் சம்மந்தப்பட்ட விஷயங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வம் காணப்படும். மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாக கல்வி பயின்று தேர்வில் வெற்றி பெறுவார்கள். கல்லூரிப் படிப்பு முடித்தவுடன் வேலை தேடும் மாணவர்கள் சிறந்த சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கப் பெறுவார்கள்.

சுப நாட்கள்:

15, 16, 17, 20, 21, 22, 23, 27, 28, 30.

அசுப நாட்கள்:

11, 12, 13, 14, 18, 19, 24, 25, 26, 29,  


banner

Leave a Reply