கடகம் செப்டம்பர் மாத ராசி பலன் 2022 | September Matha Kadagam Rasi Palan 2022

கடகம் செப்டம்பர் மாத பொதுப்பலன்கள் 2022:
கடக ராசி அன்பர்களே! இந்த மாதம் குடும்ப உறவுகள் சுமுகமாக இருக்கும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும். தம்பதிகளுக்கு இடையே இணக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் நல்லிணக்கம் கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிக வேலை பளு காணப்படும். குறித்த நேரத்திற்குள் பணியை முடிக்க இயலாத நிலை இருக்கும். தொழிலில் லாபம் கிட்டும். ஒரு சிலர் புதிய தொழிலை தொடங்கும் வாய்ப்பு உள்ளது. அதிக பண வரவு காரணமாக கையில் பணப்புழக்கம் இருக்கும். சிறு சிறு ஆரோக்கிய பாதிப்புகள் வந்து போகும். மாணவர்கள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
காதல் / குடும்பம்:
கடக ராசி காதலர்களுக்கு இது வரவேற்கத்தக்க இனிமையான மாதமாக இருக்கும். காதலை வெளிப்படுத்தவும் இது உகந்த மாதமாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை நிலவும். அன்னியோன்யம் கூடும். குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், குழந்தைகள் மற்றும் நண்பர்களிடம் நல்லுறவு காணப்படும்.
நிதி நிலை:
நிதிநிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் ஏற்றம் தரும் மாதமாக இருக்கும். கையில் பணபுழக்கம் சரளமாக இருக்கும். பண வரவு அதிகமாக இருக்கும். பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக லாபத்தை பெறலாம். பிட் காயின் போன்ற வர்த்தக நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கும் லாபங்களை ஈட்டுவதற்கும் இந்த மாதம் ஏற்றதாக உள்ளது. வண்டி வாகனங்கள் பராமரிப்பு மற்றும் பழுது பார்த்தல் தொடர்பான செலவுகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
வேலை:
உத்தியோகத்தில் இருக்கும் கடக ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் அதிக பணிகள் காணப்படும். குறித்த நேரத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். இது உங்களுக்கு பதட்டத்தையும் மன அழுத்தத்தையும் அளிக்கும். உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியம் உங்கள் பணிகளை பாதிக்க விடாமல் காத்துக் கொள்ள உடற்பயிற்சி மற்றும் தியானம் மேற்கொள்ளுங்கள். அதன் மூலம் உடல் நலம் மற்றும் மனநலம் புத்துணச்சி அடையும். இந்த மாதம் மீடியா சம்மந்தப்பட்ட வேலையை வெளிநாடுகளில் தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த சாதகமான வேலை கிடைக்கும்.
தொழில்:
தொழில் செய்யும் கடக ராசி அன்பர்கள் இந்த மாதம் சிறந்த லாபம் காண முடியும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் தொழில் மூலம் ஆதாயம் காண்பார்கள். குறிப்பாக இந்த மாதத்தில் விளம்பரம் மற்றும் தரகு சம்மந்தப்பட்ட கூட்டுத் தொழிலில் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். விவசாயம் சம்மந்தபட்ட உணவுத் தொழில் செய்பவர்கள் நல்ல லாபங்களை ஈட்டுவார்கள். இந்த மாதம் கைபேசி மென்பொருள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்கள் தொழில் மூலம் கணிசமான லாபத்தை ஈட்டுவார்கள்.
தொழில் வல்லுனர்கள்:
பொதுவாக கடக ராசி தொழில் வல்லுனர்களின் தொழில் சிறப்பாக நடந்து வருமானம் கூடும். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிட்டும். கட்டிடத் துறையில் தொழில் செய்யும் கடக ராசி தொழில் வல்லுனர்கள் தங்கள் தொழில் மூலம் இந்த மாதம் நல்ல லாபம் ஈட்ட இயலும். மீடியா மற்றும் தகவல் தொடர்பு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில் வல்லுனர்கள் அதிக லாபங்களை எதிர்பார்க்க முடியாது.
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் சீராக இருக்கும் என்றாலும் சிறு சிறு பாதிப்புகள் வந்து விலகும். அஜீரணக் கோளாறு மற்றும் குடல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். ஆரோக்கிய உணவு மற்றும் நேரம் தவறாமல் உண்பதின் மூலமாக வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். உங்கள் பெற்றோரின் உடல் நலனில் அக்கறை தேவை. இருவருக்கும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நன்மை பயக்கும்.
மாணவர்கள்:
கடக ராசி மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். அவர்களின் மனதில் பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்னும் ஆர்வம் இருக்கும். வெளிநாடு சென்று கல்வி பயில வேண்டும் என்னும் எண்ணம் உடைய மாணவர்கள் இந்த மாதம் தங்கள் எண்ணங்கள் நிறைவேறக் காண்பார்கள். ஆராய்ச்சி கல்வி மாணவர்கள் படிப்பில் விடா முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் ஆராய்ச்சியில் வெற்றி காண்பார்கள்.
சுப நாட்கள்:
20, 21, 22, 23, 27, 28, 30.
அசுப நாட்கள்:
9, 10, 11, 24, 25, 26, 29.
