ரிஷபம் செப்டம்பர் மாத ராசி பலன் 2022 | September Matha Rishabam Rasi Palan 2022
ரிஷபம் செப்டம்பர் மாத பொதுப்பலன்கள் 2022
ரிஷப ராசி அன்பர்களே! இந்த மாதம் குடும்ப சூழல் மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும். குடும்ப உறவுகளின் தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலம் குடும்ப உறவுகள் சிறக்கும். இந்த மாதம் நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொள்வீர்கள். குடும்பத்தாருடன் ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். உங்களில் ஒரு சிலருக்கு வெளியூரில் வேலை வாய்ப்பு கிட்டும். வர்த்தகத்தில் முக்கியமான முடிவுகள் எதையும் இந்த மாதம் எடுக்க வேண்டாம். பொருள் வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த மாதம் மாசு காரணமாக ஆஸ்துமா போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் உடல்நலனில் அக்கறை தேவை. மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்தி படிக்க வேண்டியது அவசியம். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்பம்:
இளம் வயது ரிஷப ராசி காதலர்களுக்கு இது வரவேற்கத்தக்க மாதமாக இருக்கும். காதல் ஜோடிகளுக்கு இடையே இணக்கம் நிறைந்து காணப்படும். திருமணமான தம்பதிகள் மன ஒற்றுமையுடன் குடும்பம் நடத்துவார்கள். இருவருக்கும் இடையே உறவுநிலை சிறப்பாக இருக்கும். குடும்ப உறவுகளுக்கு இடையேயான சூழல் மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். இளைய சகோதரர்கள் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. பேச்சிலும் தகவல் பரிமாற்றத்திலும் கவனம் தேவை.
நிதி நிலை:
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இது ஏற்றம் தரும் மாதமாக இருக்கும். உங்கள் வருமானம் பெருகும். கையில் பணபுழக்கம் கணிசமாக அதிகரிக்கும். உபரி பணத்தை முதலீடு செய்வது நல்லது. அதன் மூலம் எதிர்கால நலனை நீங்கள் பெற இயலும். இந்த மாதம் புதிய வீடு வாங்குவதற்கு சிறந்த மாதமாகும். பழைய வண்டி மற்றும் பெரிய வாகனகங்கள் வாங்கும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் முதலீடு செய்து இருந்த கடந்த கால அன்னிய முதலீடுகளின் மூலம் அதிக லாபம் பெறுவீர்கள்.
வேலை:
நீங்கள் தனியார் துறையில் உத்தியோகத்தில் இருப்பவர் என்றால் இந்த மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டகரமான மாதம் என்று கூறலாம். உங்களுக்கு வெளியூரில் வேலை செய்யும் வாய்ப்பு கிட்டும். இந்த வாய்ப்பினை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நன்மையையும் ஆதாயமும் பெறுவீர்கள். குறிப்பாக தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்பவர்கள் தங்களின் உத்தியோகம் நிமித்தமாக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும்.
தொழில்:
நீங்கள் சொந்தமாகத் தொழில் அல்லது வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்தால் அதன் மூலம் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். அதன் மூலம் வருமானம் பெருகக் காண்பீர்கள். இந்த மாதம் புதிய தொழிலில் நீங்கள் முதலீடு மேற்கொள்ள வாய்ப்புகள் கிட்டலாம்.இன்றைய முதலீடு உங்களின் நாளைய எதிர்காலத்தில் லாபத்தையும் ஆதாயத்தையும் அள்ளித் தரும் வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தமான கூட்டுத் தொழிலில் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். பலசரக்கு வியாபாரம் செய்பவர்களுக்கு இது சிறந்த மாதமாக இருக்கும். வியாபாரத்தில் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம்.
தொழில் வல்லுனர்கள்:
இந்த மாதம் நீங்கள் அதிக அளவில் லாபம் காண்பீர்கள். அதே சமயத்தில் உங்களுக்கு அதிக பணிகள் காணப்படும். இது உங்கள் மனதில் பதட்டத்தை ஏற்படுத்தும். உங்கள் தொழில் குறித்து முக்கிய விவாதங்களை இந்த மாதம் நீங்கள் மேற்கொள்வீர்கள். உங்கள் தொழிலை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல பல திட்டங்களை தீட்டுவீர்கள். அதற்கு மேலதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெற முயல்வீர்கள்.
ஆரோக்கியம்:
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும். பெரிய அளவிலான உடல் ஆரோக்கிய பாதிப்புகள் இருக்க வாய்ப்பில்லை. சளி இருமல் போன்ற சிறு உபாதைகள் வந்து போகும். தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலமும் ஆரோக்கிய உணவு உண்பதன் மூலமும் உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
மாணவர்கள்:
பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்தி படிப்பதில் சிரமம் காண்பார்கள். அதனால் படிப்பில் கவனம் சிதறும் வாய்ப்புகள் உள்ளது. மாணவர்கள் தங்கள் பொறுப்பு உணர்ந்து நடந்து கொள்வது நன்மை பயக்கும். பொறியியல் கல்வி படிக்கும் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்று கல்வியில் உயர்ந்த நிலையை அடைவார்கள். இளநிலை கல்வியை உள்நாட்டில் முடித்த மாணவர்கள் வெளிநாட்டில் உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.
சுப நாட்கள்:
1, 2, 3, 10, 20, 21, 22, 23, 28, 30.
அசுப நாட்கள்:
4, 5, 6, 7, 9, 11, 18, 19, 24, 25, 26, 29,











