மிதுனம் செப்டம்பர் மாத ராசி பலன் 2022 | September Matha Mithunam Rasi Palan 2022

மிதுனம் செப்டம்பர் மாத பொதுப்பலன்கள் 2022:
மிதுன ராசி அன்பர்களே! குடும்ப வாழ்க்கை சீராக இருக்கும் என்றாலும் குடும்ப பெரியவர்களுடன் சிறு சிறு பிரச்சினைகள் வந்து போகும். அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. தந்தைக்கு இருதயம் சம்மந்தப்பட்ட உடல் நலக் குறைவு ஏற்படலாம். தந்தையின் உடல் நலனில் கவனம் தேவை. கணவன் மனைவி உறவில் ஒற்றுமை காணப்படும். உங்கள் பொருளாதார நிலை ஏற்றமுடன் காணப்படும். உத்தியோகத்தைப் பொறுத்தவரை அனுகூலமான சூழ்நிலை காணப்படும். தொழிலில் பொறுப்புகள் அதிகம் காணப்படும். ஆயத்த ஆடைகள் சம்மந்தப்பட்ட கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் லாபம் அதிகரித்து காணப்படும். உங்கள் மனம் மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள், ஆசிரியர் மற்றும் பெற்றோரின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
காதல் / குடும்பம்:
இந்த மாதம் இளம் வயது மிதுன ராசி அன்பர்கள் மனதில் காதல் அரும்பு மலரும். மனதில் ஏற்படும் காதலை வெளிபடுத்த ஏற்ற மாதமாக இந்த மாதம் இருக்கும். காதல் உறவில் இனிமை நிறைந்து காணப்படும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை காரணமாக நல்ல புரிந்துணர்வு அதிகரிக்கும். தாம்பத்திய உறவில் நல்லிணக்கம் கூடும். இளைய சகோதர சகோதரிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன. வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நன்மை பயக்கும்.
நிதி நிலை:
இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலை வரவேற்கத்தக்க வகையில் இருக்கும். ஏற்றம் நிறைந்து காணப்படும். அதிக முயற்சி இன்றி எளிதில் பணம் சம்பாதிப்பீர்கள். லாட்டரி மற்றும் குதிரை பந்தயம் மூலம் நீங்கள் வருமானம் பெறுவீர்கள் வீட்டிற்கு வண்ணம் அடித்தல் போன்ற வகைகளுக்காக செலவுகளை மேற்கொள்வீர்கள். இந்த மாதம் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். பயணம் சார்ந்த செலவுகளும் காணப்படும்.
வேலை:
உத்தியோகத்தைப் பொறுத்தவரை அனுகூலமான சூழ்நிலை காணப்படும். நீங்கள் அரசு உத்தியோகத்தில் பணியில் உள்ளவர் என்றால் இந்த மாதம் நீஙகள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். உங்கள் மேலதிகாரிகளுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள். தனியார் உத்தியோகத்தில் உள்ளவர்கள் அலுவலக நிமித்த பயணத்தை மேற்கொள்வீர்கள். பயணம் அனுகூலமானதாக இருக்கும். அதன் மூலம் ஆதாயங்கள் கிட்டும். . உத்தியோகத்தில் உயர்ந்த பதவிகள் கிடைக்கும்.
தொழில்:
இந்த மாதம் தொழிலில் பொறுப்புகள் அதிகம் காணப்படும். நீங்கள் தலைமைப் பொறுப்பை ஏற்று அதனை திறம்பட நடத்துவீர்கள். இந்த மாதம் உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்துக் காணப்படும். தொழில் மூலம் அதிக லாபம் கிடைக்கும். கூட்டுத்தொழிலில் உள்ளவர்கள் புதிய தொழிலுக்காக அதிக முதலீடுகளை செய்து அதிக லாபத்தை பெறுவீர்கள். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். குறித்த நேரத்தில் பணிகளை முடித்து அளிக்க ஆட்களை நியமிப்பீர்கள். இந்த மாதம் நீங்கள் தொழிலில் வெற்றிவாகை சூடுவீர்கள்.
தொழில் வல்லுனர்கள்:
நீங்கள் தனியார் துறையில் பணி புரிபவர் என்றால் நீங்கள் தொழில் செய்யும் இடத்தின் சூழ்நிலையை அனுசரித்து செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கும். அலுவலகத்தில் உயர்அதிகாரிகளுடன் சில பிரச்சினைகள் எழ வாய்ப்பு உள்ளது. வாக்கு மற்றும் தகவல் பரிமாற்றத்தில் கவனம் தேவை. தேவையற்ற பேச்சுகள் மற்றும் வாக்குவாதத்தை தவிர்ப்பதன் மூலம் சுமுகமான சூழ்நிலை ஏற்படுத்திக் கொள்ள இயலும். தகவல் தொடர்புத் துறையில் வேலை தேடுபவர்களுக்கு இந்த மாதம் வேலை கிடைக்கும்.
ஆரோக்கியம்:
மனம் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். பதட்டம் இல்லாமல் இருங்கள். மனதில் காணப்படும் பதட்டம் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். நல்ல தூக்கம், ஒய்வு மற்றும் சரியான உணவு உங்கள் ஆரோக்கியத்தைக் காக்கும். தாயார் உடல் நலனில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. உடல் சம்மந்தப்பட்ட பிரச்சனை என்றாலும் மருத்துவ ஆலோசனை பெறுவது நன்மை பயக்கும்.
மாணவர்கள்:
மிதுன ராசி மாணவர்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியரின் வழிகாட்டுதலை பின்பற்றுவதன் மூலம் கல்வியில் மேன்மை பெற இயலும். அவர்களின் ஆலோசனை மூலம் நீங்கள் ஊக்கம் பெறுவீர்கள். தகவல் தொழில் நுட்பம் மற்றும் மின்னணு தொழில் நுட்பத் துறையில் பட்டம் முடித்த மாணவர்கள் வெளிநாட்டு வேலையை பெறுவார்கள். ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்கள் சிறந்த முறையில் வெற்றி காண்பார்கள்.
சுப நாட்கள்:
10, 12, 13, 15, 16, 17, 20, 30.
அசுப நாட்கள்:
7, 8, 9, 11, 14, 18, 19, 29.
