மேஷம் செப்டம்பர் மாத ராசி பலன் 2022 | September Matha Mesham Rasi Palan 2022

மேஷம் செப்டம்பர் மாத பொதுப்பலன்கள் 2022:
மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் குடும்பத்தாருடன் கவனமாகப் பழக வேண்டும். கணவன் மனைவி ஓருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ள வேண்டும். கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமை காக்க வேண்டும். உங்கள் காதல் துணையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நன்மை பயக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றினாலும் அது பெரிய அளவில் பாதிப்பை அளிக்காது. உங்கள் பொருளாதார நிலை மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். என்றாலும் பட்ஜெட் அமைத்து செலவுகளை மேற்கொள்வது நன்மை பயக்கும். உத்தயோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். தொழில் மூலம் லாபங்கள் கிட்டும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
காதல் / குடும்பம்:
கணவன் மனைவி உறவில் ஒற்றுமை அதிகரிக்க நீங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இருவருக்கும் இடையே தாம்பத்தியம் சிறக்க விட்டுக் கொடுத்தும் அனுசரித்தும் நடந்து கொள்வது நல்லது. குடும்பத்தில் இருக்கும். பெரியவர்களிடம் கருத்து மோதல்கள் வரலாம் தேவையற்ற பேச்சுகளை தவிர்த்து விடுவது நல்லது. உங்கள் பேச்சில் கவனம் தேவை. வாக்குவாதத்தை தவிர்ப்பது நம்மை பயக்கும். தாயாருக்கு உடல் நலக் குறைவு ஏற்படலாம். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை.
காதலில் வெற்றி உண்டாக லக்ஷ்மி பூஜை
நிதி நிலை:
இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலை வரவேற்கத்தக்க வகையில் இருக்கும். வருமானம் அதிகரிக்கும். குறிப்பாக தகவல் தொடர்புத் துறையில் வேலை செய்பவர்களுக்கு தன நிலையில் ஏற்றம் உண்டாகும். வீடு மராமத்து பணிக்காக செலவுகளை மேற்கொள்வீர்கள். திருமணம், குழந்தைப் பிறப்பு போன்ற சுப காரியங்களுக்காக சுப விரயங்கள் ஏற்படலாம்.
நிதி நிலையில் ஏற்றம் காண கேது பூஜை
வேலை:
உத்தியோகத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் அனுகூலமான மாதமாக இருக்கும். நீங்கள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். உங்கள் திறமை பளிச்சிடும். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். அவர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள். வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களுக்கு இந்த மாதம் தங்கள் எண்ணப்படி வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.
தொழில்:
தொழில் சிறப்பாக நடக்கும். நீங்கள் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். ஒரு சிலர் வெளி நாடு சம்பந்தமான தொழிலை எடுத்து நடத்துவீர்கள். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்பவர்கள் தங்கள் தொழில் மூலம் அதிக லாபத்தை பெறுவார்கள். புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்வீர்கள். நீங்கள் குடும்பத் தொழிலை விரிவுபடுத்தவும் விளம்பரத்திற்காகவும் பணத்தை முதலீடு செய்வீர்கள். உணவு சம்மந்தப்பட்ட கூட்டுத்தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
தொழில் வல்லுனர்கள்:
தொழில் வல்லுனர்களுக்கு இந்த மாதம் அனுகூலமாக இருக்க வாய்ப்புள்ளது. ஒரு சிலர் தொழிலில் முன்னேற்றமும் வளர்ச்சியும் காண்பார்கள். தனியார் உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்த மாதம் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். உங்களுக்கு அதிக அளவில் பொறுப்புகள் வழங்கப்படும். தொழில் மூலம் வருமானம் அதிகரிக்கும். அரசுத் துறையில் வேலை செய்யும் தொழில் வல்லுனர்கள் பணிபுரியும் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் கருத்து முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பேச்சில் கவனம் தேவை.
உத்தியோகம் மற்றும் தொழிலில் உயர்வு கிடைக்க அஷ்ட லக்ஷ்மி பூஜை
ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் நீங்கள் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும். குறிப்பாக குடல் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் வரலாம். ஆரோக்கிய உணவுகள் மற்றும் பழங்கள் உண்பதின் மூலமாக வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
உங்கள் ஆரோக்கியம் சிறந்து விளங்க சரஸ்வதி பூஜை
மாணவர்கள்:
இந்த மாதம் பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். உயர்கல்வியில் படிக்கும் மாணவர்கள் படிப்பில் பளிச்சிடுவார்கள். ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்களுக்கு தங்களது ஆராய்ச்சியில் வெற்றிவாகை சூட நம்பிக்கை தரும் மாதமாக இருக்கும்.
மாணவர்களின் கிரகிக்கும் திறன் கூட கணபதி பூஜை
சுப நாட்கள்:
1, 6, 7, 8, 10, 11, 12, 13, 14, 15.
அசுப நாட்கள்:
2, 3, 4, 5, 9, 29, 30.
