AstroVed Menu
AstroVed
search
search

ரிஷபம் செப்டம்பர் மாத ராசி பலன் 2021 | September Matha Rishabam Rasi Palan 2021

dateAugust 3, 2021

ரிஷபம் செப்டம்பர் 2021 பொதுப்பலன்:

ரிஷப ராசி அன்பர்களே!  உங்களில் புதிதாக திருமணம் ஆன தம்பதிகள் இந்த மாதம் இனிமையான வாழ்வை அனுபவிக்க இயலும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தினரின்  அன்பும் அரவணைப்பும் கிட்டும். உங்கள் நிதி நிலை மேம்படக்கூடும். நீங்கள் வெளிநாட்டு வேலைக்கு முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறீர்கள் என்றால் இப்பொழுது அது உங்களுக்கு கை கூடும். இந்த மாதம் பள்ளி மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். மாணவர்கள்,  ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் ஆதரவைப் பெறலாம். இந்த மாதம்  நீங்கள்  உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கும்.மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.     

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள் 

காதல்/குடும்பம்:

குடும்ப வாழ்க்கையில் அன்பு மற்றும் பாசம் பொங்கிப்  பெருகும். மேலும் குடும்ப உறவுகள் இணக்கமாக இருக்கலாம். கணவனும் மனைவியும் அதிக நெருக்கத்தை அனுபவிக்கக்கூடும், அதே நேரத்தில் நீங்கள் உங்கள் பெற்றோருடன் நல்லுறவைக் கொண்டிருக்கலாம். நீங்கள் புதிய நட்பையும் வளர்த்துக் கொள்ள இயலும். ஆனால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு கவனம் தேவைப்படலாம்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை

நிதிநிலை:

உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சுயதொழில் செய்பவர்கள் மற்றும் சொந்த வியாபாரம் நடத்துபவர்கள் வர்த்தக விரிவாக்கத்திற்கு நிதி முதலீடு செய்யலாம். தேவைப்படும் நண்பர்களுக்கு நீங்கள் நிதி உதவியையும் வழங்கலாம். உங்களில் சிலர் உங்கள் வீட்டிற்கு புதிய உடைகள் மற்றும் பயன்பாட்டு பொருட்களை வாங்கலாம். இருப்பினும், உங்கள் செலவினங்களைத் திட்டமிட்டு பட்ஜெட் அமைத்து செய்வது நல்லது; இது உங்கள் செலவுகளை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

உங்கள் நிதிநிலை மேம்பட : கோ பூஜை

வேலை:

உங்கள் உத்தியோகத்தில் நீங்கள் சிறந்த வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். நீங்கள் சக ஊழியர்களுடன் நல்லுறவைப் பேணலாம், சிலர் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைப் பெறலாம். மேலதிகாரிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் நீங்கள் பணியாற்ற வேண்டிய சாத்தியக்கூறுகள் உள்ளன, இது உங்களை சற்று பதட்டமாக மாற்றக்கூடும். ஆனால் நீங்கள் நிலைமையை சமாளித்து இப்போது நம்பிக்கையுடன் செயல்பட முடியும். உங்கள் கடின உழைப்பு மூலம் நீங்கள்  பணியிடத்தில் நல்ல பெயரையும் புகழையும் பெறக்கூடும்.

தொழில் :

உங்கள் தொழிலில் சில முன்னேற்றம் காண இயலும். வெளிநாட்டு நிலங்கள் தொடர்பான தொழில்களில் ஈடுபடுபவர்கள் குறிப்பிடத்தக்க லாபத்தை ஈட்ட முடியும். ஆனால் கூட்டு வணிகம் மந்தமாக இருக்கலாம். இருப்பினும், புதிய முதலீட்டாளர்களுக்கு  கூட்டாண்மை வணிகங்களில் தொழிலை விரிவாக்க வாய்ப்புகள் உள்ளன.

தொழில் வல்லுனர்கள்:

ரிஷப ராசி தொழில் வல்லுநர்கள் கூட்டங்கள் மற்றும் விவாதங்களில் பங்கேற்கலாம். நீங்கள் உங்கள் பொறுப்புகளை உற்சாகத்துடன் நிறைவேற்றலாம், மேலும் உங்கள் நம்பிக்கை செயல்பாட்டில் முன்னேற்றத்தை அளிக்கும்.  புதிய, தொழில்முறை வாய்ப்புகளையும் நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம், இது உங்கள் வெற்றிக்கு பங்களிக்கும்.

வேலை மற்றும் தொழிலில் மேம்பட : ராகு பூஜை

ஆரோக்கியம்:

அதிக பணிச்சுமை உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். உடல் வலி மற்றும் கண் வலியால் நீங்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, உங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். யோகா மற்றும் தியானத்தை தவறாமல் பயிற்சி செய்யுங்கள்; இவை உங்கள் உடலையும் மனதையும் புதுப்பிக்க உதவும்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட :சந்திரன் பூஜை

மாணவர்கள்:

பள்ளி மாணவர்கள் தங்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட வேண்டும். கல்வித்துறையில் நிபுணர்களிடமிருந்து வழிகாட்டுதலையும் உதவியையும் நீங்கள்  பெறலாம். உயர்கல்வியைத் தொடங்குபவர்களும் தங்கள் முயற்சிகளில் வெற்றிபெறக்கூடும். அவர்கள் வெளிநாட்டில் படிப்பைத் தொடர வாய்ப்புகளையும் பெறலாம்.
கல்வியில் சிறந்து விளங்க : புதன் பூஜை

சுப நாட்கள் : 3, 8, 9, 10, 23, 27  
அசுப நாட்கள் : 6, 7, 14, 15, 16, 18, 24


banner

Leave a Reply