மேஷம் செப்டம்பர் மாத ராசி பலன் 2021 | September Matha Mesham Rasi Palan 2021

மேஷம் செப்டம்பர் 2021 பொதுப்பலன்:
மேஷ ராசி அன்பர்களே ! இந்த மாதம் நீங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவைப் பேணுவீர்கள். உங்கள் நிதி நிலையும் இப்போது மேம்படும் என்பது உங்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் ஆகும். நீங்கள் சொந்த வியாபாரம் செய்கிறீர்கள் என்றால் வியாபாரம் குறித்த உங்கள் புதிய முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள இந்த மாதம் ஏற்ற மாதமாக இருக்கும். இதன் மூலம் உங்கள் வருமானம் மேலும் உயரும். மாணவர்கள் தங்கள் படிப்பில் சிறப்பாக முன்னேறவும், கவனச்சிதறல்களைத் தவிர்க்கவும், தங்கள் தேர்வுகளில் சிறப்பாக செயல்படவும், அதிக மதிப்பெண்கள் பெறவும் முயற்சிகளை மேற்கொள்வார்கள். நீங்கள் இப்பொழுது பல புதிய விஷயங்களையும் கற்றுக்கொள்வதில் அதிக அளவில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் உடல்நலம் இந்த மாதம் சாதாரணமாக இருக்கும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்
காதல்/குடும்பம்:
குடும்ப உறுப்பினர்களிடம் உங்களுக்கு அதிக மதிப்பு மற்றும் மரியாதை இருக்கும். அவர்களுடன் நீங்கள் இணக்கமான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள இயலும். ஆனால் உங்கள் வாழ்க்கை துணையுடன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தவறான புரிதல்கள் இருக்கலாம்; எனவே, இப்போது வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பண விஷயங்களில் அல்லது மூதாதையரின் சொத்துக்கள் தொடர்பாக உறவினர்களுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உறவுகளுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நீங்கள் கடினமுயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். எச்சரிக்கையாக நடந்து கொள்வது நல்லது. அன்பை பரிமாறிக் கொள்வதன் மூலம் உறவுகளில் அமைதியையும் நல்லுறவையும் பராமரிக்க உதவும்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : குரு பூஜை
நிதிநிலை:
இந்த மாதம் உங்கள் கையில் தாராளமான பணப்புழக்கம் இருக்கக்கூடும், எனவே, உங்கள் நிதி நிலை மிகவும் வசதியாக இருக்கும். உங்களில் சிலர் உங்கள் வீட்டின் பழுது அல்லது பராமரிப்புக்காக செலவிடலாம். ஒரு சிலர் குழந்தைகளின் கல்விக்காக கடன்களை வாங்க நேரிடலாம். இன்னும் சிலர் வீட்டு பயன்பாட்டிற்காக பயன்பாட்டு பொருட்கள் அல்லது மர பொருட்களை வாங்கலாம். மொத்தத்தில் இந்த மாதத்தில் நீங்கள் உங்கள் நிதிநிலையை புத்திசாலித்தனமாகக் கையாள்வீர்கள்.
உங்கள் நிதிநிலை மேம்பட : மோருகர் பூஜை
வேலை:
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடமிருந்து நல்ல ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டையும் நீங்கள் பெறலாம். ஆனால் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்கள் சற்று பதட்டத்துடன் இருப்பீர்கள். சிலர் வேறு இடத்திற்கு மாறுவதற்கும், வெளியிடங்களுக்குச் சென்று வேலை செய்வதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
தொழில்;
தொழில் அல்லது வியாபாரத்தில் இருப்பவர்கள் கணிசமான லாபத்தை எதிர்பார்க்கலாம். புதிய வர்த்தக ஒப்பந்தங்களும் உங்களின் சிறந்த நிதி நிலைக்கு பங்களிக்கக்கூடும். கூட்டு வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள், துணிந்து செயல்படுவீர்கள். மேலும் உங்கள் தொழிலை சீராக நடத்துவதற்கும் அதில் வெற்றி காணவும் கவனமாகச் செயல்பட வேண்டும்.
தொழில் வல்லுனர்கள் :
மேஷ ராசி தொழில் வல்லுநர்களுக்கு இது ஒரு நல்ல பலன் தரும் மாதமாக உள்ளது. குறிப்பாக, அரசுத் துறைகள் மற்றும் உயர் கல்வித் துறைகளில் இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த பலன் அளிக்கும் மாதம் ஆகும். அதிர்ஷ்டம் உங்களை நாடி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அந்த அதிர்ஷ்டம் உங்களுக்கு திடீர் ஆதாயங்களைவழங்கக்கூடும். இருப்பினும், கவனமாக சிந்தித்து, நன்மை தீமைகளை பொறுமையாக கருத்தில் கொண்ட பின்னரே எந்த முடிவையும் எடுக்க வேண்டியது அவசியம்.
வேலை மற்றும் தொழிலில் மேம்பட : சனி பூஜை
ஆரோக்கியம்:
உங்கள் உடல்நலம் குறித்து இந்த மாதத்தில் நீங்கள் சில சவால்களை சந்திப்பீர்கள். எனவே சிறிய உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டாலும் நீங்கள் புறக்கணிக்காமல் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை மேற்கொள்வது நல்லது. தலைவலி, இடுப்பு பகுதியில் வலி, அல்லது கண் வியாதிகள் போன்றவற்றுக்கான வாய்ப்புகளும் உள்ளன. என்றாலும் சத்தான உணவு உட்கொள்வதன் மூலம் மற்றும் உடற்பயிற்சி மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் மேம்படுத்த முடியும்.
ஆரோக்கியம் மேம்பட : அங்காரகன் பூஜை
மாணவர்கள் :
மாணவர்கள் தங்கள் கல்வி முயற்சிகளில் சில தடைகளை சந்திக்க நேரிடும். ஆனால் அவர்களின் கடின உழைப்பும் உறுதியான முயற்சிகளும் அவர்களின் இலக்குகளின் வெற்றிபெற உதவும். ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டவர்கள் தங்கள் ஆராய்ச்சிப் பணிகளை வெற்றிகரமாக முடிக்க வாய்ப்புள்ளது. கலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கும் இந்த மாதம் சாதகமாக தெரிகிறது. போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்பவர்கள் அதிக கவனம் செலுத்தி முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றியைக் காண முடியும்.
கல்வியில் மேம்பட : கணபதி பூஜை
சுப நாட்கள் : 3, 8, 9, 10, 16, 23, 27
அசுப நாட்கள் : 12, 13, 14, 24
