AstroVed Menu
AstroVed
search
search
x
cart-added The item has been added to your cart.

மீனம் செப்டம்பர் மாத ராசி பலன் 2022 | September Matha Meenam Rasi Palan 2022

dateAugust 3, 2022

மீனம் செப்டம்பர் மாத பொதுப்பலன்கள் 2022:

குடும்பத்தில் அமைதி நிலவ அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். தேவையற்ற பேச்சுகள் மற்றும் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். இந்த மாதம் திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் தங்களுக்கு தகுந்த  துணையை தேட உகந்த மாதம் ஆகும். உங்களது தன நிலை உயர்ந்து காணப்படும். இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் நீங்கள் சாதகமான விளைவுகளைப் பெற காத்திருக்க வேண்டி இருக்கும். தினமும்  ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி மற்றும் தியானம் செய்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள இயலும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள். 

காதல் / குடும்பம்:

குடும்பத்திற்கென நேரம் ஒதுக்கி அவர்களுடன் நீங்கள் கலந்து உறவாடுவதன் மூலம் குடும்பத்தாருடன் உங்கள் உறவு பலப்படும். குடும்பத்தை அனுசரித்து செல்வதன் மூலம்  கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையை ஏற்படுத்திக் கொள்ளலாம். உங்கள் வாழ்க்கைத் துணையிடத்தில் வாக்கு வாதங்களை மேற்கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும். 

கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவ துர்கா பூஜை

நிதி நிலை:

இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் வருமானம் உயரும். அதற்கேற்றார் போல உங்கள் வசதிகளை நீங்கள் மேம்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் வீட்டில் சொகுசு, வசதிகள் மற்றும் ஆடம்பர வாழ்வு பெருகும். குடும்பத்தில் ஐஸ்வர்யங்கள் பெருகும் உங்களுக்கு பகுதி நேர தொழில் வாய்ப்புகள் கிட்டும். அதன் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கப் பெற்று உங்கள் வருமானம் உயரக் காண்பீர்கள். உங்கள் கடந்த கால சேமிப்பைக் கொண்டு இந்த மாதம் உங்கள் செலவுகளை சமாளித்துக் கொள்வீர்கள். 

நிதி நிலையில் ஏற்றம் உண்டாக ஸ்ரீம் ப்ரிசி லக்ஷ்மி பூஜை

வேலை:

உத்தியோகத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் நீங்கள் சாதகமான விளைவுகளைப் பெற காத்திருக்க வேண்டி இருக்கும். பொறுமை காக்க வேண்டியிருக்கும். நீங்கள் நீண்ட நாட்களாக எதிர் பார்த்து காத்துக் கொண்டிருந்த ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிட்ட இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். நீங்கள் அரசு உத்தியோகத்தில் வேலையில் இருப்பவர் என்றால் இந்த மாதம் நீங்கள் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

தொழில்:

மீன ராசி அன்பர்களின் தொழில் இந்த மாதம் சிறப்பாக நடக்கும். சுயமாக தொழில் புரியும் மீன ராசி அன்பர்கள் தங்கள் தொழில் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.  அதன் மூலம் உங்கள் தொழில் ரகசியங்களை பிறர் பயன்படுத்தாமல் காத்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.  நீங்கள் கூட்டுத் தொழில் செய்பவர் என்றால்  இந்த மாதம் நீங்கள் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வீர்கள்.  அதன் மூலம் நீங்கள் அதிக லாபங்களை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. 

தொழில் வல்லுனர்கள்:

இந்த மாதம் உங்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் கிட்டும். நீங்கள் தனியார் துறை சார்ந்தவர் என்றால் உங்களுக்கு  மிகப்பெரிய தொழில் வாய்ப்பு காத்துக் கொண்டு இருக்கிறது. தொழில் சம்பந்தமான பயிற்சிகளை மேற்கொள்ள உங்களில் சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உள்ளது.  அதற்கேற்ற வகையில் நீங்கள் உங்கள் திறமைகளையும் வளர்த்துக் கொள்வீர்கள்.வெளி  நாட்டில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
 
உத்தியோகம் மற்றும் தொழில் சிறக்க சிவன் பூஜை

ஆரோக்கியம்:

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும். பெரிய அளவிலான ஆரோக்கிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. இந்த மாதம் உங்கள் நோய் எதிர்ப்புத் திறன் அதிகமாக இருக்கும்.  தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் உங்கள் உடல் வலிமை கூடும். ஆரோக்கிய உணவை உண்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் மேம்படுத்திக் கொள்ள இயலும். 

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு வைத்தியநாத பூஜை

மாணவர்கள்:

மீன ராசி மாணவர்கள் இந்த மாதம் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். கடின உழைப்பை மேற்கொள்வார்கள். போட்டித் தேர்விற்காக படிக்கும் மாணவர்கள் படிப்பில் வெற்றி காண்பார்கள். வெளி நாட்டிற்குச் சென்று கல்வி பயில நினைக்கும் மாணவர்களின் எண்ணங்கள் இந்த மாதம் ஈடேறும். பொறியியல் கல்வி படிக்கும் மாணவர்கள் படிப்பிற்கென அதிக நேரம் ஒதுக்கிப் படித்தால் தான் படிப்பில் சிறந்த வெற்றிகளைக் காண முடியும். ஆராய்ச்சி கல்வி  படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இந்த மாதம் வெளிநாடு சென்று.படிக்கும் வாய்ப்பு ஏற்படும். 

கல்வியில் மேன்மை உண்டாக சரஸ்வதி பூஜை

சுப நாட்கள்: 

12, 13, 15, 16, 17, 20, 21, 22, 23, 27, 28, 30. 

அசுப நாட்கள்:

4, 5, 9, 11, 14, 18, 19, 24, 25, 26, 28, 29. 


banner

Leave a Reply