சனி பெயர்ச்சி பலன்கள் மகர ராசி 2020-2023 | Sani Peyarchi Palangal Makara Rasi 2020-2023

பொதுப்பலன்கள்:
மகர ராசி அன்பர்களே! தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனி பெயர்கிறார். இந்த பெயர்ச்சியில், சனி உங்கள் ராசியிலேயே சஞ்சாரம் செய்கிறார். இந்த சஞ்சாரம் ஜென்ம சனி என்று கூறப்படும். இங்கிருந்து சனி பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் ஸ்தானத்தையும், ஏழாம் மற்றும் பத்தாம் ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார்.
மகர ராசி அன்பர்களுக்கு எடுத்த காரியம் கை கூடும். தொட்டது துலங்கும். திருமணத்திற்கு காத்திருக்கும் மகர ராசி அன்பர்களுக்கு சிறந்த வாழ்க்கைத் துணை அமையும். புதிய தொழில் முயற்சிகள் சாதகமான முடிவைத் தரும். வெளிநாடு சென்று கல்வி படிக்க மாணவர்கள் எடுக்கும் முயற்சிகள் பலிதமாகும்.
மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்
குடும்பம்:
இந்த சனிப் பெயர்ச்சியின் ஒரு சில காலக் கட்டங்கள் தவிர பிற சமயங்களில் குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும். சுமூகமான உறவு நீடிக்கும். செப்டம்பர் மாதம் கணவன் மனைவி ஒற்றுமையில் சிறு சிறு சுணக்கங்கள் ஏற்படும். சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். காதலில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் உறவை திருமண பந்தமாக மாற்றிக் கொள்வார்கள். குழந்தைகளின் மந்த நிலை மாறி சுறுசுறுப்பு தோன்றும். பாடங்களை கிரகித்துக் கொள்ளும் திறன் அதிகரிக்கும். வயதில் மூத்தவர்கள் ஆன்மீக சுற்றுலா செல்லும் வாய்ப்பினைப் பெறுவார்கள்.
பரிகாரங்கள்:
- வெள்ளியிலான மோதிரத்தை வலது கை மோதிர விரலில் அணிய குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை நிலவும்.
உடல்நலம்:
மகர ராசி அன்பர்களுக்கு ஒரு சில சிறு உடல் உபாதைகள் தவிர பொதுவாக ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். மாணவர்களுக்கு ஒற்றைத் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. வயதானவர்களுக்கு கால் மூட்டுகளில் வலி ஏறப்ட்டு மறையும். மகர ராசியைச் சேர்ந்த ஆண்களுக்கு கண் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பெண்களுக்கு இறுக்கமான மனநிலை காணப்படும். தியானம் மற்றும் யோகா பயில்வதன் மூலம் சந்தோஷமான மனநிலை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
பரிகாரங்கள்:
- சிகப்பு நிற ரோஜா செடியை நட்டுவைத்து தினமும் நீர் ஊற்றி வர ஆரோக்கிய சூழ்நிலை உறுவாகும்.
பொருளாதாரம்:
இந்த சனிப் பெயர்ச்சியில் மகர ராசி அன்பர்களின் பொருளாதார நிலை சற்று சீராகும். இதுவரை எதிர் கொண்ட கடன் பிரச்சினைகளில் இருந்து விடுதலை கிட்டும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். தரகுத் தொழில் செய்பவர்கள். தகவல் தொழில் நுட்பம் துறையினர் தங்கள் தொழில் மூலம் சிறந்த லாபம் கண்டு பொருளாதார முன்னேற்றம் காண்பார்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் ஓரளவு லாபம் தான் காண இயலும். மனைவி மூலம் குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றம் கிட்டும்.
பரிகாரங்கள்:
- வரவேற்பறையில் சிறிய நீரூற்றை வைப்பதன் மூலம் நல்ல பொருளாதார முன்னேற்றத்தை ஏர்படுத்திக்கொள்ள முடியும்.
தொழில்:
எந்த வகை தொழில் செய்பவராக இருந்தாலும் இந்த பெயர்ச்சி மூலம் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிட்டும். உத்தியோகம் செய்யும் மகர ராசி அன்பர்களுக்கு சனிப் பெயர்ச்சியின் ஆரம்ப காலம் சிறிது கடினமாக இருக்கும். பணிச் சுமை அதிகரிக்கும். இந்த நிலை ஜூன் 2020 வரை நீடிக்கும். பிறகு சீரடையத் தொடங்கும். சொந்தமாக புதிய தொழில் தொடங்க விரும்புபவர்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றிகளைக் குவிப்பார்கள். டிராவல்ஸ் துறையினர் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். தகவல் தொடர்பு, கமிஷன் மற்றும் விளம்பரத்துறையில் பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமும் உத்தியோக உயர்வும் ஏற்படும்.
பரிகாரங்கள்:
- உடல் ஊனமுற்றவர்களுக்கு அன்ன தானம் செய்வதன் மூலம் தொழிலில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும்.
படிப்பு:
இதுவரை மிதமாக படித்துவந்த குழந்தைகள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி நன்றாக படிப்பார்கள். கடல் வழி, செவிலியர், மனித வள மேம்பாடு மற்றும் உளவியல் சார்ந்த படிப்பு படிப்பவர்கள் வெற்றிகரமாக படிப்பை முடித்து படிப்பில் சாதனை புரிவார்கள். மிண்ணனு மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி படிப்பை படிப்பவர்கள் புதிய தொழில் நுட்பங்களை கண்டுபிடித்து உலக அளவில் சாதனை புரிவார்கள்.
பரிகாரங்கள்:
- புதன் கிழமைகளில் விஷ்ணு கோவிலில் பச்சை பயிறு தானம் செய்துவர படிப்பில் உயர்ந்த நிலையை அடையலாம்.
- வெள்ளிக்கிழமைகளில் வெள்ளிக்காசு அல்லது சிறிய வெள்ளித்துண்டு (small piece of silver) ஒன்றை பையில் வைத்துக்கொள்ள, படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பொது பரிகாரம்
- சுக்ர ஹோமம் செய்து வர சிறப்பான முன்னேற்றம் காணலாம்.
மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்