AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now

ருத்ராட்சம் | Ruthratcham Rules Benefits Tamil

May 12, 2020 | Total Views : 1,314
Zoom In Zoom Out Print

ருத்ராட்சம் என்பது என்ன ?

உருத்திராட்சம், உத்திராட்சம், என்றெல்லாம் அழைக்கப்படும் ருத்ராட்சம் ஆன்மீகச் சின்னங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. சிவனுக்கு ருத்திரன் என்றொரு திரு நாமம் உண்டு. எனவே ருத்திரன் என்ற பெயரில் இருந்து வந்ததே ருத்ராட்சம் என்ற கூற்றும் உண்டு. ருத்திரனின் கண்களில் இருந்து தெறித்த ஆனந்தக் கண்ணீர்த் துளிகளே உருத்திராட்சங்களாக ஆகியது என்று கூறுவதும் உண்டு. சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்சம் என்பதால் அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் கண்டிப்பாக ஒரு ருத்ராட்சமாவது எப்போதும் கண்டிப்பாக அணிந்திருப்பது சிறப்பானதாகக் கருதபடுகின்றது. ருத்ராட்சம் பற்றி மேலும் அறிய கிளிக் செய்யவும் 

உத்திராட்சக் கொட்டைகள் என்று அழைக்கப்படும் ருத்ராட்ச மணிகள் இரத்தின வகையச் சார்ந்தது அல்ல. இது ஒரு மரத்தில் விளையும் கொட்டைகள் ஆகும் என்பதே தற்காலத்தில் நடைமுறையில் நிலவும் கூற்று ஆகும். இந்த  உருத்திராட்ச மணிகள் இந்து மதத்தில் புனிதமானதாக கருதப்படுகின்றது.

பழந்தமிழ் நூல்களில் 27 மணிகளில் ஒன்றாக உருத்திராட்ச மணி கருதப்படுகின்றது. நேபாளத்திலும், இந்தியாவில் உள்ள அசாம் மாநிலத்திலும் ருத்திராட்ச மரங்கள் அதிகம் வளர்கின்றன. இதல் 25 வகைகள் உண்டு. இந்த மரங்களில் இலைகள் ஈட்டி போல அமைந்து இருக்கும். இவற்றில் வெள்ளை நிறப் பூக்கள் பூக்கும். இந்த பூக்களில் இருந்து கருநீல நிறத்தில் சதைபற்று நிறைந்தும் புளிப்புச் சுவையுடன் கூடிய பழங்கள் கொத்து கொத்தாக காய்க்கும் இந்தப் பழங்களின் கொட்டையே ருத்ராட்சக் கொட்டைகள் எனப்படுகின்றது.

உண்மையான ருத்ராட்சத்தை அறிவது எப்படி?

தீக்குச்சி மரம் என்றொரு மரம் உண்டு. அந்த மரங்களின் விதைகளும் பார்ப்பதற்கு ருத்ராட்சம் போன்றே இருக்கும். இந்த கொட்டைகளில் சாயம் ஏற்றி அதிக விலைக்கு விற்கும் நிலையும் இன்று நாம் காணலாம். உண்மையான ருத்ராட்சத்திற்கும் போலி ருத்ராட்சத்திற்கும் நாம் வேறுபாடுகளை அறிந்து கொள்ள முடியும். ருத்ராட்சக் கொட்டைகளை தண்ணீரில் போட்டால் உண்மையான கொட்டைகள் தண்ணீரில் மூழ்கும். போலியான கொட்டைகள் தண்ணீரில் மிதக்கும். மேலும் சாணைக்கல்லில் உரைத்தால் மஞ்சளாக தங்கம்போல் பிரகாசிப்பதும்,  நல்லவர்ணமுள்ளதுமான ருத்திராட்சம்,  தண்ணீரில் போட்டால் மூழ்குவதும்,  இரு செப்புத் தகட்டுக்கு இடையில் வைத்து சோதனை செய்தால் சுற்றக்கூடியதுமான ருத்திராட்சம் ஆகியவை மிகவும் விசேஷமானவை.

உருத்திராட்ச மணிகளின் பிரிவுகள்:

ஒரு முகம் முதல் 16 முகம் வரை கொண்ட பதினாறு வகை ருத்திராட்சங்கள் உண்டு. ருத்திராட்சத்தின் மேல் உள்ள கோட்டின் எண்ணிக்கையைக் கொண்டு ருத்திராட்சம் எத்தனை முகம் கொண்டது என்பதை அறியலாம்.

1 முகம் – சிவன்
2 முகங்கள் – சிவன்
3 முகங்கள் – அக்னி 
4 முகங்கள்  - பிரம்மன்
5 முகங்கள் – காலாக்னி
6 முகங்கள் – முருகன்
7 முகங்கள் – ஆதிசேஷன்
 8 முகங்கள் – கணபதி
9 முகங்கள் – பைரவர்
10 முகங்கள் – விஷ்ணு
11  முகங்கள் -  சிவன்

ருத்ராட்சத்தின் மகிமைகள் : 

ருத்ராட்சம் அணியும் ஆன்மீக அன்பர்கள்  தங்கள் பாவங்களில் இருந்து விடுபட்டு முக்தி பெறுகிறார்கள்.  சம்சார சாகரத்தில் பாவங்களினால் அலை கழிக்கப் படாமல் இப்பிறவி  மற்றும் மறு பிறவி பந்தங்களில் இருந்து விடுபடுகிறார்கள். சிவ லோக பதவியை அடைகிறார்கள் மேலும் அனைத்துவித ஸ்தோத்திரங்களை உச்சரிப்பதன் மூலமும்,விரதங்களை அனுசரிப்பதன் மூலமும்
அடைகின்ற பலனை,ஒருவன் ருத்ராட்சத்தைஅணிந்து கொள்வதன் மூலம்பெறுவான் என்று ஸ்ரீமத் தேவிபாகவதம் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகின்றது. ருத்ராட்சத்தை அணிந்தவாறு, வேதநியமங்களை ஒருவன் கடைபிடிப்பானாகில் அவன் பெறும் பலன்களை அளவிடமுடியாது; ஒரு முறை உச்சரிக்கும் மந்திரம் கூட ருத்ராட்சம் அணிந்து உச்சரித்தால் ஒரு கோடி முறை உச்சரித்த  பலனை அளிக்கின்றது. கழுத்தில் ருத்ராட்ச மாலையை அணிந்தவன் இந்த உலகத் தளைகளிலிருந்து விடுபடுகிறான். ருத்ராட்சத்தை பூசிப்பவன்   சிவலோக பதவியைப் பெறுகிறான். ருத்ராட்சம் தரித்தவனை நெருங்க யமனும் கூட அஞ்சுவான். ருத்ராட்சம் ஐஸ்வர்யத்தையும் ஆனந்தத்தையும் ஒரு சேர அளிக்கின்றது.. 

யாரெல்லாம் ருத்ராட்சம் அணியலாம்?:

தூய்மையான உள்ளத்துடன் இருக்கும் எவர் ஒருவரும் ருத்ராட்சம் அணியலாம் என்ற கருத்து நிலவுகின்றது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள்  என்ற எந்த வித பாகுபாடுமின்றி யார் வேண்டுமானலும் ருத்ராட்சத்தை அணியலாம். உடல் தூய்மை மற்றும் உள்ளத் தூய்மை தான் முக்கியம்.

ருத்ராட்சம் அணிவதால் கிடைக்கும் நன்மைகள்:

•    உடலும் உள்ளமும் தூய்மை பெறுகின்றது
•    பக்தி மார்கத்தில் மனம் லயிக்கின்றது.
•    மனதில் அமைதி நிலவுகின்றது
•    உடல் உஷ்ணம் குறைகின்றது
•    இரத்த அழுத்தம் சீரடைகின்றது
•    எண்ணங்களில் தெளிவு  பிறக்கின்றது
•    விபத்துக்களில் இருந்து  நம்மைக் காக்கின்றது
•    துர் மரணம் நேராமல் காக்கின்றது

banner

Leave a Reply

Submit Comment