AstroVed Menu
AstroVed
search
search

அத்தி வரதர் வரலாறு | Athi Varadar History In Tamil

dateMay 12, 2020

அத்தி வரதர் தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகிலுள்ள கோயில் நகரமான காஞ்சியில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலின் விஷ்ணுவின் அசல் தெய்வம் அத்தி  வரதராஜ பெருமாள். இந்தச் சிலை அத்தி மரத்தால் ஆனதால் தெய்வத்திற்கு அத்தி வரதர் என்று பெயர் ஏற்பட்டது. அத்தி வரதர்  தொடர்பான பல்வேறு வரலாற்று புராண நிகழ்வுகள் பற்றிய கதைகள் மூலம் அத்தி வரதர் பற்றிய மூலம் நம்மால் அறிய முடிகின்றது. அத்தி வரதர் வரலாறு பற்றி மேலும் அறிய கிளிக் செய்யவும்.

புராணம் கூறும் அத்தி வரதர் கதை:

சிருஷ்டிக் கடவுளான பிரம்ம தேவன் தனது காரியங்கள் செவ்வனே நடைபெற விஷ்ணுவிற்கான திவ்ய தேசங்களில் ஒரு யாகம் மேற்கொண்டார். யாகத்திற்கு சரஸ்வதி தேவியை வருமாறு பிரம்மா  அழைப்பு விடுக்கவில்லை. துணைவியில்லாமல் யாகத்தை பூர்த்தி செய்ய முடியாது என்பதால் காயத்ரி, சாவித்ரியை வைத்து யாகத்தை முடிக்க எண்ணினார் பிரம்மா . தன்னை அழைக்காமல் யாகம் செய்த பிரம்மர் தேவர் மீது கோபம் கொண்ட சரஸ்வதி தேவி, பிரம்மனின் யாகத்தை அழிக்க வேகவதி ஆறாக உருமாறி யாகத்தை நோக்கி வந்தாள். பிரம்மா தேவன் விஷ்ணுவிடம் முறையிட பிரம்ம தேவனின் யாகத்தை காப்பாற்றும் பொருட்டு பெருமாள், சயனம் கொண்டு நதியை தடுத்து பிரம்மனின் யாகத்தை காப்பாற்றினார். கருணையே வடிவான விஷ்ணுவை தேவர்கள் யாவரும் வணங்க விஷ்ணு அவர்களுக்கு வரம் அளித்த காரணத்தால் வரதர் என்று அழைக்கப்பட்டார்.  தனக்கு உதவி செய்த விஷ்ணுவை அத்தி மரத்தில் செய்து பிரம்மா வழிபடலானார்.  அவ்வாறு ஒரு முறை யாகம் செய்து  வழிபட்ட போது அத்தி மரத்தால் ஆன விஷ்ணுவின் மீது  நெருப்பு பட்டு விட்டது. செய்வதறியாது திகைத்த பிரம்மாவிடம்  தன்னை நீரினுள் வைக்குமாறு விஷ்ணு கூற விஷ்ணுவின் ஆணைப்படி அவரை குளிர்விக்க புனித புஷ்கரணியில் வைத்து பிறகு 40 நாட்கள் கழித்து எடுத்து ஒரு மண்டலம் வரை வழிபட்டு மீண்டும் புஷ்கரணியில் வைத்ததாக புராண கதைகள் கூறுகின்றன.

வரலாறு  கூறும் அத்தி வரதர் கதை:

பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியில், தென் இந்தியாவின் காஞ்சீபுரம் வரதராஜர் கோவிலில் அத்தி வரதராஜர் தான் மூல விக்கிரகமாக வழிபடப்பட்டு வந்தது.  அதாவது அத்தி மரத்தால் ஆன வரதர் சிலை தான் மூல விக்கிரகமாக வழிபடப் பட்டு வந்தது.  முஸ்லீம்களின் படையெடுப்பு காரணத்தால் சிலையை பாதுக்காக நினைத்து அப்போதைய அரசர்கள் சிலையை புனித புஷ்கரணியில் ஒளித்து வைத்து விட்டனர்.  பிறகு சிறிது காலம் சிலை இல்லாத காரனத்தால் பூஜைகள் நடைபெறவில்லை. பிறகு உடையார் பாளையம் காட்டில் இருந்து உற்சவர் சிலை நிறுவப்பட்டதாக  கூறப்படுகின்றது. பிறகு கல்லாலான மூலவர் சிலையை நிறுவினர். பதினேழாம்   நூற்றாண்டின் தொடக்கத்தில் புனித புஷ்கரணியை தூய்மை செய்யும் பணிகளை மேற்கொண்டனர். அப்பொழுது தான் இந்த அத்தி வரதர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. எனவே கோவில் நிர்வாகிகள் பூஜை செய்து மீண்டும் புனித புஷ்கரணியில் வைத்தனர். இவ்வாறாக அத்தி வரதர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வந்து  48 நாட்கள் பக்தர்களுக்கு தரிசனமும் ஆசிகளும் வழங்குகிறார். 

அத்தி வரசர் தரிசனம்:

இன்றளவும்  அனந்த சரோவரம் என்று அழைக்கப்படும் கோவில் திருக் குளத்தில் உள்ளே தொட்டியின் உள்ளே ஒரு நிலத்தடி அறையில் வைக்கப்பட்டு  40 ஆண்டுகளுக்குப் பிறகு 48 நாட்களுக்கு வழிபாட்டுக்காக வெளியே கொண்டு வரப்படுவதால் அத்தி வரதர் தரிசனம் மிகவும்  சிறப்பு வாய்ந்தது. இந்தச் சிலையானது ஒவ்வொரு 40 வருடங்களுக்கு ஒரு முறை ஆலயத்தின்  தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் 48 நாட்களுக்கு வைக்கப்படுகின்றது.  இந்த காலகட்டத்தில் இரண்டு  சேவைகள் செய்யப்படுகின்றன.

முதல் 24 நாட்கள் அத்தி வரதர்  கிடந்த திருக்கோலம் அல்லது சயன திருக்கோலத்தில்  பக்தர்களுக்கு காட்சி தந்து தனது ஆசிகளை வழங்குகிறார். அடுத்த 24 நாட்களில் நின்ற திருக் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்து தனது ஆசிகளை வழங்குகிறார்.

அத்தி  தரிசன  பலன் :

புனித புஷ்கரணியில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட அத்தி வரத பெருமாள் 24 நாட்கள் சயன வடிவிலும், 24 நாட்கள் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.இந்த அத்தி வரதரை வணங்குவதால் மோட்சம் பெறலாம் என்ற நம்பிக்கை நிலவுகின்றது.

இதற்கு முன்பு அத்தி வரதர் காட்சி அளித்த விவரங்கள்:

  • ஜூலை 1 ஆகஸ்ட் 17, 2019
  • ஜூலை 2, 1979
  • ஜூலை, 1937
  • ஜூன், 1892
  • ஆகஸ்ட், 1854

banner

Leave a Reply