Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW

ரிஷப ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022 (Rishabam Rasi Guru Peyarchi Palangal Tamil 2021 to 2022)

September 28, 2021 | Total Views : 573
Zoom In Zoom Out Print

ரிஷப  ராசி குரு பெயர்ச்சி 2021 பொதுப்பலன்கள்:

வருட கிரகம் என்று கூறப்படும் கிரகங்களில் குரு தனிச்சிறப்பு வாய்ந்த கிரகம் ஆகும். ஒவ்வொரு கோளுக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அந்த வகையில் குரு கிரகம் பூரண சுப கிரகம் என்றும் சாத்வீக கிரகம் என்றும் கூறப்படும்.   குரு கிரகம் நவக்கிரக அந்தஸ்து பெற்று குரு பகவான் என்று அழைக்கபடும் பெருமை பெற்றது. குரு பகவான் நவம்பர் 21, 2021, ஞாயிற்றுக் கிழமை அன்று மதியம் 02:06 இந்திய நேரப்படி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். கும்ப ராசியானது ரிஷப ராசிக்குத் தொழில் ஸ்தானமான பத்தாம் வீடாக அமைவதால் தொழில் மற்றும் உத்தியோகத்தில் மிகுந்த நன்மையான பலன்களை வழங்கக்கூடியதாக குரு பெயர்ச்சி 2021 திகழப்போகிறது. அவர் பத்தாம் பாவத்தில் நின்று ஐந்தாம் பார்வையாக இரண்டாம் பாவத்தையும், ஏழாம் பார்வையாக  நான்காம் பாவத்தையும், ஒன்பதாம் பார்வையாக ஆறாம் பாவத்தையும் பார்வையிடப் போகிறார். இந்த குருப்பெயர்ச்சியானது ரிஷப ராசியைச் சார்ந்தவர்களுக்கு வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்துடன் உயர்பதவி கிடைப்பதற்கு ஏதுவாகவும், நிலம், வீடு, வண்டி போன்ற இவ்வுலக சுகங்களை வாரி வழங்கும் வருடமாகவும் இருக்கப்போகிறது.  

குரு பகவானின் ஆசிகளை பெறுவதற்கு இப்போது முன்பதிவு செய்து கொள்ளுங்கள்

குடும்பம்:

ரிஷப ராசி அன்பர்கள் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும். குடும்ப உறுப்பினர்கள் இடையே ஒற்றுமையும் நல்லிணக்க உறவும் மேம்படும். அண்டை அயலார் மற்றும் நண்பர்களிடமும் சமூகமான உறவு இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணம், வளைகாப்பு, குழந்தைப் பேறு  போன்ற விசேஷங்கள் காரணமாக வீடு களை கட்டும். கலகலப்பு இருக்கும். தாய் மற்றும் தந்தையின் நலனில் அக்கறை தேவை. குழந்தைகளுடனான உறவு நன்றாக இருக்கும்.

பரிகாரம்: சந்திரன் பூஜை 

ஆரோக்கியம்:

சுத்தம் சுகாதாரம் மற்றும் ஒழுக்கம் பின்பற்றுவதன் மூலம் தேக ஆரோக்கியத்தை காத்துக் கொள்ள இயலும். இவற்றை நீங்கள் உங்கள் வாழ்வில் பின்பற்றுவதன் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். மேலும் முறையான உடற்பயிற்சி மற்றும்  சத்தான உணவு உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.  துரித உணவு வகைகளைத் தவிர்ப்பது நன்மை பயக்கும்.  வயதானவர்களின் உடல் நிலையில் சிறிது கவனம் தேவை.

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு வைத்தியநாத பூஜை

காதல் / திருமணம்: 

ரிஷப ராசி காதலர்கள் இந்த மாதம் தங்கள் உறவில் மகிழ்ச்சியும் இனிமையும்  இருக்கக் காண்பார்கள். கணவன் மனைவி தங்கள் உறவில் சிறிது கவனமாகச் செயல்பட வேண்டும். கருத்து வேறுபாடு  காரணமாக சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.  குறிப்பாக பணம் சம்மந்தப்பட்ட விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நன்மை பயக்கும்.

பரிகாரம்: சுக்கிரன் பூஜை

நிதி நிலை:

உங்கள் நிதிநிலையில் ஏற்றமான நிலை இருக்கும். பண வரவு கணிசமாக உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சேமிப்பு மற்றும் முதலீடுகள் செலவுகளை சமாளிக்க கை கொடுக்கும். கடன்கள் கட்டி முடிப்பீர்கள்.     பங்கு வர்த்தகம் மூலம் கணிசமான பண வரவு மற்றும் ஆதாயம் பெறுவீர்கள். 

நிதி நிலையில் ஏற்றம் காண கேது பூஜை

வேலை / தொழில்:

பணியில் இருக்கும் ரிஷப ராசி அன்பர்கள் உற்சாகத்துடன் பணி புரிவார்கள். அதன் மூலம் உங்கள் செயல் திறன் வெளிப்படும். உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். சக பணியாளர்கள் சிறந்த ஒத்துழைப்பை நல்குவார்கள். தொழில் சிறப்பாக நடக்கும். அதன் மூலம் லாபமும் வருமானமும் உயரும். புதிய தொழிலைத் தொடங்குவது ஏற்ற காலமாக இந்தக் காலம் அமையும். என்றாலும் புதிய தொழிலை தொடங்குவதற்கு முன் நன்மை தீமைகளை அலசி பிறகு முடிவுகளை எடுப்பது நல்லது. கூட்டுத் தொழிலில் பொறுப்புகள் அதிகம் காணப்படும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த சரியான முறையில் கடமைகளை ஆற்ற வேண்டியிருக்கும். உங்கள் முயற்சி மூலம் அதிக வாடிக்கையாளர்களைப் பெறுவீர்கள். தொழில் வல்லுனர்கள் தங்கள் பணியில் ஏற்றம் காண்பார்கள். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கப் பெறுவார்கள்.   

உத்தியோக உயர்விற்கு கணேஷ பூஜை

கல்வி:

மாணவர்கள் கவனமாகப் படிக்க வேண்டும். கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்புள்ளதால் மனதை ஓருமுகப்படுத்தி படிக்க வேண்டும். பொறியியல் மற்றும் ஆராய்ச்சித் துறை மாணவர்களுக்கு இது சாதகமான பலனளிக்கும் காலக் கட்டம் ஆகும். 

கல்வியில் சிறந்து விளங்க புதன் பூஜை

வீட்டில் செய்யக்கூடிய பரிகாரங்கள்:

  • வியாழக்கிழமை அன்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொண்டக்கடலை சுண்டல் செய்து தானம் செய்யவும். 
  • பசுவிற்கு வாழைப்பழம் தானமாகக் கொடுக்கவும். 
  • சிவன் கோவிலில் நெய் தானமாகக் கொடுக்கவும். 
banner

Leave a Reply

Submit Comment