மேஷ ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022 (Mesham Rasi Guru Peyarchi Palangal Tamil 2021 to 2022)

மேஷ ராசி குரு பெயர்ச்சி 2021 பொதுப்பலன்கள்:
வருட கிரகம் என்று கூறப்படும் கிரகங்களில் குரு தனிச்சிறப்பு வாய்ந்த கிரகம் ஆகும். ஒவ்வொரு கோளுக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அந்த வகையில் குரு கிரகம் பூரண சுப கிரகம் என்றும் சாத்வீக கிரகம் என்றும் கூறப்படும். குரு கிரகம் நவக்கிரக அந்தஸ்து பெற்று குரு பகவான் என்று அழைக்கபடும் பெருமை பெற்றது. குரு பகவான் நவம்பர் 21, 2021, ஞாயிற்றுக் கிழமை அன்று மதியம் 02:06 இந்திய நேரப்படி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். கும்ப ராசியானது மேஷ ராசிக்கு லாபஸ்தானமான பதினொன்றாம் வீடாக அமைவதால் மிகுந்த நன்மைகளை வாரி வழங்கக்கூடியதாக குரு பெயர்ச்சி 2021 திகழப்போகிறது. அவர், பதினொன்றாம் பாவத்தில் நின்று ஐந்தாம் பார்வையாக மூன்றாம் பாவத்தையும், ஏழாம் பார்வையாக ஐந்தாம் பாவத்தையும், ஒன்பதாம் பார்வையாக ஏழாம் பாவத்தையும் பார்வையிடப்போகிறார். குரு பலம் பெற்ற இந்த குருப்பெயர்ச்சியானது மேஷ ராசியைச் சார்ந்தவர்களுக்கு அனைத்து விதமான ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ள ஏதுவான வருடமாக இருக்கப்போகிறது.
குரு பகவானின் ஆசிகளை பெறுவதற்கு இப்போது முன்பதிவு செய்து கொள்ளுங்கள்
குடும்பம்:
தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று கூறுவார்கள். இந்த கூற்று இந்தப் பெயர்ச்சியில் உங்களுக்குப் பொருந்தும். உங்களுடன் பிறந்த இளைய உடன் பிறப்புகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்கள் மூலம் நீங்கள் ஆதாயம் பெறுவீர்கள். அவர்களுடன் நல்லுறவு பராமரிப்பீர்கள். குடும்பத்தில் மட்டுமின்றி அக்கம் பக்கத்தவர்கள் மற்றும் அயலார்களுடனும் நல்லுறவு பராமரிக்கும் காலக் கட்டமாக இந்தப் பெயர்ச்சி உங்களுக்கு அமையும். பொழுது போக்குகளில் நீங்கள் நாட்டம் ஏற்படுத்திக் கொள்வீர்கள். வெளியூர்களுக்கு சுற்றலா செல்வதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு அதனை செயல்படுத்தி மகிழ்ச்சி காண்பீர்கள். அம்மா, அண்ணன்,அக்கா, மருமகன், மருமகள் என அனைத்து உறவினர்களுடனும் நல்லுறவு பராமரிப்பீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
பரிகாரம்: செவ்வாய் பூஜை
ஆரோக்கியம்:
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால் தான் நீங்கள் எதிலும் சிறப்பாக செயல்பட முடியும். அதிக பணிச் சுமைகள் அசதிகளை ஏற்படுத்தி தூக்கமின்மை பாதிப்பு ஏற்படுத்தும். அஜீரணக் கோளாறுகள் ஏற்படும் என்பதால் உங்கள் உணவில் கவனம் தேவை.
உடல் ஆரோக்கியம் மேன்மை அடைய செவ்வாய் பூஜை
காதல் / திருமணம்:
காதல் வயப்பட்ட மேஷ ராசி அன்பர்களுக்கு இந்த குருபெயர்ச்சி சாதகமாக அமையப் போகிறது. காதலர்கள் மனதில் அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். திருமணமான தம்பதிகள் இடையே ஒற்றுமை இருக்கும். கணவன் மனைவி கருத்து ஒருமித்து வாழ்வார்கள். நல்லுறவு பராமரிப்பார்கள். தங்கள் அன்பை வெளிபடுத்தும் வகையில் பரிசுகளை வாங்கி அளிப்பார்கள்.
பரிகாரம் லக்ஷ்மி பூஜை
நிதி நிலை:
உங்கள் நிதிநிலையில் ஏற்றமான நிலை இருக்கும். வருமானம் கணிசமாக உயரும். பண வரவு அதிகரிக்கும். வரவை விட செலவு குறைவாக இருக்கும். வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்பில்லை. அவசிய செலவுகளை மட்டுமே செய்வீர்கள். வியாபாரம் மூலம் குறிப்பாக வெளிநாட்டு வியாபாரம் மூலம் வருமானம் கணிசமாக உயரும். ஊக வணிகம் மற்றும் பங்கு வர்த்தகம் லாபத்தை அளிக்கும். மொத்தத்தில் உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.
பொருளாதாரத்தில் ஏற்றம் காண குரு பூஜை
வேலை / தொழில்:
அலுவலகத்தில் பணியாற்றும் மேஷ ராசி அன்பர்கள் அதிக பணிகளை மேற்கொள்ள நேரும். கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். கூடுதல் பொறுப்புகள் சேரும். என்றாலும் நீங்கள் திறமையுடன் பணியாற்றி மேலதிகாரிகளின் பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெறுவீர்கள். படித்து முடித்து வேலை தேடுபவர்கள் இந்த பெயர்ச்சி காலக் கட்டத்தில் புதிய வேலை கிடைக்கப் பெறுவார்கள். தொழில் சிறப்பாக இருக்கும். அதிக லாபம் காண முடியும் குறிப்பாக கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். பழங்கள் மற்றும்காய்கறி வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பலசரக்கு. வியாபாரம் செய்பவராக இருந்தால் தன நிலையில் நல்ல ஏற்றத்தைக் காணலாம். தொழிலில் போட்டியாளர்கள் இருப்பது சகஜமான ஒன்று என்றாலும் இந்த பெயர்சிக் காலக் கட்டத்தில் நீங்கள் அதிக போட்டியாளர்களை சந்திப்பீர்கள். அவர்களை எல்லாம் எதிர் கொண்டு நீங்கள் வெற்றி காண்பீர்கள். ஊடகத்துறை, பொறியியல் துறை மற்றும் மருத்துவத் துறையில் இருப்பவர்கள் சிறந்த வகையில் வருமானம் ஈட்டுவார்கள். பிற துறைகளைச் சார்ந்தவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு அங்கீகாரம் கிட்டும். நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பீர்கள்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண சனி பூஜை
கல்வி:
மாணவர்கள் முன்னேற்றம் காண அவர்களின் உழைப்பு அவசியம். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதற்கேற்ப உங்கள் முயற்சி கடினமாக இருக்கும் பட்சத்தில் சிறந்த வெற்றி வாய்ப்புகளை நீங்கள் பெற இயலும். பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் தங்கள் முயற்சியின் மூலம் சிறந்த சம்பளத்துடன் கூடிய வேலையைப் பெறுவார்கள். வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்புத் தேடும் மாணவர்களுக்கு சுமாரான பலன்கள் கிட்டும்.
மாணவர்களின் கிரகிக்கும் திறன் கூட கணேஷ பூஜை
வீட்டில் செய்யக்கூடிய பரிகாரங்கள்:
- வியாழக் கிழமை அன்று மஞ்சள் ஆடை உடுத்தவும்.
- குரு ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கு வஸ்திர தானம் செய்யவும்.
- சிறு யானை சிலையை வாங்கி வீட்டு வறவேற்பு அறையில் வைக்கவும்.
