பொதுப்பலன்:
உங்கள் ராசியிலிருந்து 2 ஆம் வீடாகிய மிதுனத்தில் மே 15, 2025 அன்று குரு பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சி ஜூன் 2, 2026 அன்று வரை இருக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் ராசிக்கு 6வது வீடு, 8வது வீடு மற்றும் 10வது வீட்டில் குருபகவானின் பார்வை இருக்கும்.
இந்த காலக்கட்டத்தில் நீங்கள் உங்கள் பணியில் முன்னேற்றம் காணலாம். உத்தியோகத்தில் உறுதியான நிலை இருக்கும். சக பணியாளர்களுடனான உங்கள் உறவு சுமுகமாக இருக்கும். எனவே பணியிடச் சூழல் அனுகூலமாக இருக்கும். உங்கள் பேச்சாற்றல் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் இருந்து வந்த சச்சரவுகள் விலகும். நீங்கள் திருப்திகரமாக உணர்வீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்வில் சில பதட்டங்கள் இருக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரலாம். உறவில் தவறான புரிந்துணர்வு எழலாம். எனவே அனுசரித்து விட்டுக் கொடுத்து செல்ல வேண்டியது அவசியம். அதிகப்படியான வேலைகள், குடும்பப் பொறுப்புகள் அல்லது பணப் பற்றாக்குறை ஆகியவை மிகவும் மன அழுத்த சூழ்நிலைகளை உருவாக்கலாம்.
குழந்தைகள் மற்றும் வயதான குடும்ப உறுப்பினர்களைக் கையாள்வதில் சவால்களை சந்திப்பீர்கள். உரையாடல் தவறான புரிதலில் முடியும். அதனால் அடிக்கடி மோதல் ஏற்படலாம். குழந்தைகள் வேடிக்கை விளையாட்டாக நடந்து கொள்ளலாம். அவர்களை சமாளிப்பது கடினமாக இருக்கலாம். உங்கள் அறிவுரைகளை அவர்கள் ஏற்காமல் போகலாம். அவர்களின் கவனம் திசை திரும்பலாம். உங்கள் நிதி நிலை ஸ்திரமாக இருக்கும். சேமிக்கவும் முதலீடு செய்யவும் உங்கள் நிதி ஆதாரங்களை சரியான முறையில் பயன்படுத்துவீர்கள்.
உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நீங்கள் சுறுசுறுப்பாக செய்லபடுவீர்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சகமாணவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட ஒரு வாய்ப்பு கிடைக்கும். அர்ப்பணிப்புடன் செய்லபட்டு கல்வியில் சிறந்து விளங்குவதற்கு இது ஒரு நல்ல நேரம். ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் ஆய்வறிக்கை ஒப்புதலுக்காக பொறுமையாக காத்திருக்க வேண்டும்.
உத்தியோகம்
நீங்கள் தேர்ந்தெடுத்த உத்தியோகத்தில் மாற்றங்களுக்காக காத்திருக்க வேண்டியிருக்கும். இந்தக் காலக்கட்டம் உங்கள் முன்னேற்றத்திற்கு போதுமான அவகாசம் அளிக்கலாம். உங்கள் திறன்கள் மேம்படும். சக ஊழியர்களுடன் இணக்கமான உறவுகளை வளர்த்துக் கொள்வீர்கள். குழுவுடன் பணிபுரிவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் அனுகூலமான சூழல் இருக்கும். உங்கள் கடின உழைபிற்கான அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். உங்களுக்கு பதவி உயர்வு கிட்டலாம். சம்பள உயர்வு பெறலாம். பணியிடத்தில் மதிப்பு மரியாதையும் பெறுவீர்கள். இது உங்கள் உத்தியோக வளர்ச்சியில் ஒரு முக்கியமான தருணமாக இருக்கும்.
காதல் / குடும்ப உறவு
குழந்தைகள் மற்றும் வயதான உறவினர்கள் உங்களிடம் மிகவும் சாதுரியமாக நடந்து கொள்ளலாம். குழந்தைகள் உங்கள் ஆலோசனைகளைப் பின்பற்றாமல் இருக்கலாம் அல்லது மிக வேகமாக கவனத்தை இழக்கலாம். இவர்களைக் கையாள்வதில் சில சிக்கல்கள் எழலாம்.சிலருக்கு நினைவாற்றல் பிரச்சினைகள் இருக்கலாம். ஒரு சிலருக்கு காது கேளாமை இருக்கலாம். உங்கள் துணையுடனான உங்கள் உறவு மகிழ்ச்சியாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். நீங்கள் ஒன்றாக நேரத்தை செலவிடுவீர்கள். நீங்கள் ஒன்றாக அற்புதமான நினைவுகளை உருவாக்கலாம். நீங்கள் பொதுவான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் மகிழ்ச்சி காண்பீர்கள்.
திருமண வாழ்க்கை
இந்த காலக்கட்டத்தில் உங்கள் உறவில் நீங்கள் சில சவால்களை சந்திக்க நேரும். கணவன் மனைவிக்கு இடையே தவறான புரிந்துணர்வு காணப்படும். கருத்து வேறுபாடுகளைக் களைந்து அனுசரித்து செல்வதன் மூலம் மோதல்களைத் தவிர்க்கலாம். பொறுமையுடன் செயல்பட வேண்டும். அதிக பொறுப்புகள் உங்களுக்கு மன அழுத்தத்தை அளிக்கலாம். நிதி நெருக்கடி காரணமாக சில வாக்குவாதங்கள் எழலாம். இது செலவு மற்றும் சேமிப்பு பற்றிய வாதங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுக்கும். இவை அனைத்தும் நீங்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்பதைப் பாதிக்கும்.
நிதிநிலை
இந்த காலக்கட்டத்தில் உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். உங்கள் செல்வத்தை மேலும் பெருக்கிக் கொள்ள இந்த தருணம் பொருத்தமான வாய்ப்பை அளிக்கலாம். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களுக்கு நிதி ரீதியாக உதவி செய்வார்கள். அவர்களின் ஆதரவு மூலம் நீங்கள் லாபம் பெறலாம்.
மாணவர்கள்
மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். வெளிநாடு சென்று கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு விசாவிற்கு விண்ணப்பிக்க இது சரியான தருணம். ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் ஆய்வறிக்கையில் கணிசமான முயற்சி எடுக்க வேண்டும். அவர்கள் கடினமாக உழைக்க வேண்டும்.
ஆரோக்கியம்
உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வெளி உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். தியானம் மேற்கொள்வதன் மூலம் மனது ஆரோக்கியமாக இருக்கும்.

Leave a Reply