AstroVed Menu
AstroVed
search
search

Rishabam Rahu Ketu Peyarchi Palangal 2022 | ரிஷபம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023

dateFebruary 1, 2022

ரிஷப ராசி – ராகு கேது பெயர்ச்சி பலன் 2022

ராகு கேது பெயர்ச்சி 2022 இன்னும் சில மாதங்களில் நிகழப்போகிறது. மார்ச் 21ஆம் தேதி திங்கட்கிழமை வாக்கியப்பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி 2022 நிகழ உள்ளது. திருக்கணிதப் பஞ்சாங்கப்படி ஏப்ரல் 12ஆம் தேதி நிகழ உள்ளது.

உங்கள் ராசிக்கு  12ஆம் வீட்டில் ராகு பெயர்ச்சி

ரிஷப ராசி அன்பர்களே! ஏப்ரல் 12, 2022 முதல் அக்டோபர் 30, 2023 வரை உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் மேஷ ராசியில் ராகு சஞ்சாரம் செய்வது உங்கள் அன்றாட வாழ்க்கையில் சில நல்ல மாற்றங்களையும் நியாயமான மாற்றங்களையும் கொண்டு வரும். உங்கள் அன்றாட விவகாரங்களில் ஏதாவது சிறப்பு இருக்கும். வாழ்க்கை சலிப்பு தருவதாக ஒரே மாதிரி  இருக்காது. உங்கள் எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். இறக்குமதி-ஏற்றுமதி நடவடிக்கைகளிலும், அரசியல் பணிகளிலும் வெற்றி கிடைக்கும். நீங்கள் பொது இடங்களில் பிரகாசிக்கலாம், மேலும் சிலர் 2022-2023 ஆம் ஆண்டில் வெளி நாட்டில் கல்வி அல்லது தொழிலைப் பெறலாம். கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சிக்குப் பிறகு வெற்றியும் மகிழ்ச்சியும் வரும். உங்கள் பொறுமை வெற்றிக்கு திறவுகோலாக இருக்கும். குடும்பச் சூழல் அமைதியாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

உங்கள் ராகு கேது பெயர்ச்சி 2022 அறிக்கையைப் பெற இங்கே கிளிக் செய்க

உங்கள் ராசிக்கு 6ஆம் வீட்டில் கேது பெயர்ச்சி

கேது உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் துலாம் ராசியில் சஞ்சரிப்பதால், சட்ட விஷயங்களில் போராட்டங்களுக்குப் பிறகு வெற்றி கிடைக்கும். உங்கள் தொழில் வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கும், ஆனால் போராட்டத்திற்குப் பிறகு வளர்ச்சியும் லாபமும் இருக்கும். கேது 6ம் வீட்டில் சஞ்சரிக்கும் இந்த காலகட்டத்தில் உங்கள் ஆரோக்கியமும், குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியமும் சீராக இருக்காது. ரிஷப ராசிக்காரர்கள் வெளிநாட்டிலும் புகழ் பெறலாம், மேலும் சிலருக்கு 2022-2023ல் அரசு மற்றும் தனியார் துறையில் விரும்பிய வேலை கிடைக்கலாம். வேலையில்லாதவர்களுக்கு இந்த ஆண்டு வேலை கிடைக்கும். காதல் வாழ்க்கை வலியையும் துன்பத்தையும் தரலாம்.

ராகு கேது பெயர்ச்சி பரிகாரம்:- 

  • புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஏழை மக்களுக்கு தயிர் பிரசாதமாக வழங்கவும்.
  • ஒவ்வொரு புதன் மற்றும் சனிக்கிழமையும் நாய்களுக்கு ரொட்டி மற்றும் இனிப்பு  அளிக்கவும்

ராகு கேது பெயர்ச்சி எளிய வீட்டுப் பரிகாரங்கள்

  • கீழ்க்கண்ட மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
  • ‘ஓம் ஸ்ட்ரம் ஸ்ட்ரிம் ஸ்ட்ரௌம் சஹ கேதுவே நமஹ’
  • செவ்வாய்க்கிழமைகள் மற்றும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடவும்
  • ஏழைகளுக்கு சமையல் எண்ணெய் தானமாக அளிக்கவும் 
  • உங்கள் கழுத்து அல்லது மணிக்கட்டில் நீல நிற நூலில் சந்தனத் துண்டு ஒன்றை கட்டி அணிந்து கொள்ளவும்
  • மிச்சமாகிப் போன அல்லது கெட்டுப் போன பழைய ஆகாரங்களை உட்கொள்ளாமல் தவிர்த்து விடவும் 
  • முடியும் என்றால், செவ்வாய்க்கிழமைகளில் உபவாசம் (உண்ணா நோம்பு) இருக்கவும்

banner

Leave a Reply