AstroVed Menu
AstroVed
search
search

Mithunam Rahu Ketu Peyarchi Palangal 2022 | மிதுனம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023

dateFebruary 1, 2022

மிதுன  ராசி – ராகு கேது பெயர்ச்சி பலன் 2022:

ராகு கேது பெயர்ச்சி 2022 இன்னும் சில மாதங்களில் நிகழப்போகிறது. மார்ச் 21ஆம் தேதி திங்கட்கிழமை வாக்கியப்பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி 2022 நிகழ உள்ளது. திருக்கணிதப் பஞ்சாங்கப்படி ஏப்ரல் 12ஆம் தேதி நிகழ உள்ளது.

உங்கள் ராசிக்கு  11ஆம் வீட்டில் ராகு பெயர்ச்சி 

மிதுன ராசி அன்பர்களே! 12 ஏப்ரல் 2022 முதல் அக்டோபர் 30, 2023 வரை உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் மேஷ ராசியில் ராகுவின் சஞ்சாரம் இருக்கும். ராகுவின் இந்த பெயர்ச்சி உங்கள் காதல் வாழ்க்கையில் நிறைய உறுதியற்ற தன்மையையும் எதிர்பாராத மாற்றங்களையும் கொண்டு வரும். 2022-2023 காலகட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் உங்களுக்கு அன்பும் காதலும் மலரலாம். அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டாளர்களுடன் ரகசிய உறவு வைத்திருக்கலாம். சிலர் ரகசிய திருமணம் செய்து கொள்வார்கள். உங்களின் படைப்பாற்றல் உங்கள் தொழிலில் உச்சத்தில் இருக்கும். உங்களின் புத்திசாலித்தனம் மற்றும் உங்கள் வேலையில் திறமை காரணமாக நீங்கள் திடீரென்று பிரபலமும் அங்கீகாரமும் பெறலாம். மீடியா, திரை  உலகம், கலைத் துறை அல்லது எழுத்தில் இருப்பவர்கள் இந்த நேரத்தில் வாழ்க்கையில் விரைவான வெற்றியையும் பிரபலத்தையும் அடையலாம். சிலர் தாங்கள் விரும்பும் நபரை வெற்றிகரமாக திருமணம் செய்து கொள்ளலாம். காதல் திருமணம் சில சொந்தங்களுக்கு மகிழ்ச்சியையும் அதிர்ஷ்டத்தையும் தரக்கூடும். 

உங்கள் ராகு கேது பெயர்ச்சி 2022 அறிக்கையைப் பெற இங்கே கிளிக் செய்க

உங்கள் ராசிக்கு  5ஆம் வீட்டில் கேது பெயர்ச்சி 

உங்கள் ராசிக்கு 5வது வீட்டில், துலாம் ராசியில் கேது சஞ்சரிப்பதால் விளையாட்டு மற்றும் கலை முயற்சிகள் மூலம் செல்வம் மற்றும் வெற்றி கிடைக்கும். உங்களின் பெரும்பாலான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். 2022-2023 இல் ஆக்கப்பூர்வமான முயற்சியில் இருந்து செல்வம் சாத்தியமாகும். உத்தியோகம் அல்லது சுயதொழில் வெற்றியையும் செல்வத்தையும் தரும். உங்கள் லௌகீக  வசதியும் வாழ்க்கை முறையும் இந்த ஆண்டு மேம்படுத்தப்படும். இந்த வருடம் உங்களுக்கு பணத் தட்டுப்பாடு இருக்காது. எதிர்பாராத வருமானம் அல்லது பணத்தின் ஒரு பகுதி மகிழ்ச்சியை தரும். உங்கள் நண்பர்கள் மற்றும் உங்களுடன் தொடர்பு கொண்டவர்களிடம் உங்களுக்கு சலிப்பு ஏற்படும்.  சிலர் நீண்ட காலத்திற்கு உங்கள் எதிரிகளாக மாறலாம்.

பரிகாரம்:- 

  • புதன்கிழமை அன்று பறவைகளுக்கு ரொட்டி மற்றும் தண்ணீரை ஊட்டவும்.
  • புதன்கிழமை பச்சை நிற ஆடைகளை அணியுங்கள்.

ராகு கேது பெயர்ச்சி எளிய வீட்டுப் பரிகாரங்கள்

  • கீழ்க்கண்ட மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
  • ‘ஓம் நமசிவாய’
  • அன்னை துர்கையை வணங்கி வழிபடவும் 
  • சாம்பல் வண்ண ஆடைகளை ஏழைகளுக்கு தானம் அளிக்கவும் 
  • உங்களுக்கு விருப்பம் இருந்தால் கருப்பு நிற நாயை வளர்க்கவும் 
  • நீங்கள் குளிக்கும் பொழுது, தண்ணீரில் சில துளி சந்தன எண்ணெய் அல்லது சந்தனத் திரவியம் விட்டு குளிக்கவும்.
  • வீட்டில் வளர்க்கும் மீன்கள், அல்லது குளம் ஆறு போன்ற இடங்களில் உள்ள மீங்களுக்கு உணவளிக்கவும்

banner

Leave a Reply