AstroVed Menu
AstroVed
search
search

Mesham Rahu Ketu Peyarchi Palangal 2022 | மேஷம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023

dateFebruary 1, 2022

மேஷ ராசி – ராகு கேது பெயர்ச்சிபலன் 2022

ராகு கேது பெயர்ச்சி 2022 இன்னும் சில மாதங்களில் நிகழப்போகிறது. மார்ச் 21ஆம் தேதி திங்கட்கிழமை வாக்கியப்பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி 2022 நிகழ உள்ளது. திருக்கணிதப் பஞ்சாங்கப்படி ஏப்ரல் 12ஆம் தேதி நிகழ உள்ளது.

உங்கள் ராசியில் ராகு பெயர்ச்சி

ராகு உங்கள் சொந்த ராசியான மேஷ ராசியில் 12 ஏப்ரல் 2022 முதல் அக்டோபர் 30, 2023 வரை சஞ்சரிக்கிறார். உங்கள் 1 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சமூகத்தில் உங்கள் மரியாதை மற்றும் அந்தஸ்து திடீரென உயரும். 2022-2023 இல் நீங்கள் மிகவும் செல்வந்தராகலாம். உங்கள் சமூக தொடர்புகளை அதிகரிக்கவும், வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க ஒன்றை அடையவும் ஆழ்ந்த தாகமும் விருப்பமும் இருக்கும். மேஷ ராசிக்காரர்கள் சிலர் இந்த ராகு சஞ்சாரத்தின் போது அதிக  அளவிற்கு பணம் மற்றும் புகழை நாடுவார்கள். உங்கள் ஒட்டுமொத்த வருமானத்தில் பொருள் சார்ந்த ஆதாயங்களும் வளர்ச்சியும் இருக்கும், ஆனால் திருப்தி மற்றும் குடும்ப செழிப்பு குறையும். இந்த காலகட்டத்தில் உங்கள் நெருங்கிய நபர்களால் உங்கள் இல்லற வாழ்க்கை மற்றும் உறவுகள் பாதிக்கப்படலாம். மறுபுறம், இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் மற்றும் லாபம் அதிகரிக்கும். உங்கள் லௌகீக சுகம் நிச்சயம் உயரும்.

உங்கள் ராகு கேது பெயர்ச்சி 2022 அறிக்கையைப் பெற இங்கே கிளிக் செய்க

உங்கள் ராசிக்கு 7 ஆம் வீட்டில் கேது பெயர்ச்சி

ஏப்ரல் 12, 2022 முதல் கேது உங்கள் ராசிக்கு 7வது வீட்டில் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். இது உங்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மோதல்கள், தவறான புரிதல்கள், குழப்பங்கள் ஆகியவற்றைக் கொண்டுவரும். உங்கள் உறவில் நம்பிக்கை குறையும். 2022-2023 இல் உங்கள் மனைவி உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம். சிலர் தங்கள் காதல் வாழ்க்கையிலோ அல்லது திருமண வாழ்விலோ பிரிதல், விவாகரத்து அல்லது பிரிவினையை சந்திக்க நேரிடும். ஒரு சிலருக்கு தாம்பத்திய வாழ்வில் சலிப்பு ஏற்படும். ஒரு சிலருக்கு தனது வாழ்க்கைத் துணையிடம் இருந்து பிரிந்து இருக்க நேரும்.  இதனால், குடும்பத்தில் அமைதியும், நல்லிணக்கமும் இல்லாமல் போகும். ஒட்டுமொத்தமாக, 2022ல் இந்த ராகு-கேது சஞ்சாரம் சமூக அளவில் பொருள்சார்ந்த வெகுமதிகளையும் ஆதாயங்களையும் தரும், ஆனால் உங்கள் உறவுகளில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

ராகு கேது பெயர்ச்சி பரிகாரம்:- 

  • ஏழை மக்களுக்கு புதன்கிழமை இனிப்புகள் வழங்குங்கள் 
  • ஹனுமான் சாலிசாவை தினமும் பாராயணம் செய்யுங்கள் 
  • செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமன் கோயிலுக்குச் செல்லுங்கள்.

ராகு கேது பெயர்ச்சி எளிய வீட்டுப் பரிகாரங்கள்

  • கீழ்க்கண்ட மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
  • ‘ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் சஹ ராஹவே நமஹ’
  • ‘சிவபெருமான்’ மற்றும் ‘பைரவரை’ வழிபடவும்
  • நீலம் மற்றும் கருப்பு நிற ஆடைகளை தானம் செய்யவும்  
  • வெள்ளி சங்கிலி அணியவும்
  • வீட்டின் அருகிலுள்ள கருப்பு நாய்களுக்கு உணவளிக்கவும்
  • முடியும் என்றால், சனிக்கிழமைகளில் உபவாசம் (உண்ணா நோம்பு) இருக்கவும்

banner

Leave a Reply