AstroVed Menu
AstroVed
search
search
x

கும்பம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023

dateFebruary 3, 2022

கும்ப ராசி - ராகு கேது பெயர்ச்சி பலன் 2022

ராகு கேது பெயர்ச்சி 2022 இன்னும் சில மாதங்களில் நிகழப்போகிறது. மார்ச் 21ஆம் தேதி திங்கட்கிழமை வாக்கியப்பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி 2022 நிகழ உள்ளது. திருக்கணிதப் பஞ்சாங்கப்படி ஏப்ரல் 12ஆம் தேதி நிகழ உள்ளது.

உங்கள் ராசிக்கு  3ஆம் வீட்டில் ராகு பெயர்ச்சி 

கும்ப ராசி அன்பர்களே! ராகு, உங்கள் ராசிக்கு  3வது வீடாகிய  மேஷ ராசியில் 12 ஏப்ரல் 2022 முதல் 30 அக்டோபர் 2023 வரை சஞ்சரிக்கிறார். இந்த ராகு பெயர்ச்சி பல கும்ப ராசிக்காரர்களுக்குப் பெருமையையும், வெற்றியையும், புகழையும் கொண்டு வரும். நீங்கள் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும், திறமை மிக்கவராகவும்  இருப்பீர்கள். மேலும் உங்களின் பல விருப்பங்களும் லட்சியங்களும் நிறைவேறும். நீங்கள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். உங்கள் சகாக்கள் மற்றும் உயர் அதிகாரிகள்  உங்களைப் பாராட்டுவார்கள். உங்கள் பணியிடத்தில் உங்கள் மரியாதை உயரும். ஊடகம் மற்றும் தகவல் தொடர்புத் துறையில் இருப்பவர்கள் குறிப்பிடத்தக்க ஆதாயங்கள், மற்றும் பதவி உயர்வுகளைப் பெறலாம். உங்களின் தொழிலில் வளர்ச்சியும், நற்பெயரும் மேம்படும். கலை மற்றும் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் உங்களுக்கு செல்வத்தையும் புகழையும் தரும். சிலர் விளையாட்டு வீரர்களாகவும் ஆகலாம். பல கும்ப ராசிக்காரர்களுக்கு உங்கள் வருமானம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும், மேலும் சிலர் 2022-2023 இல் தங்களின் சிறந்த வாழ்க்கைத் துணையை சந்திக்கலாம். சுயதொழில் செய்பவர்களுக்கும், தொழிலதிபர்கள் அல்லது அரசியல்வாதிகளுக்கும் இந்த ஆண்டு ஏற்றதாக இருக்கும்.

உங்கள் ராகு கேது பெயர்ச்சி 2022 அறிக்கையைப் பெற இங்கே கிளிக் செய்க

உங்கள் ராசிக்கு 9ஆம் வீட்டில் ராகு பெயர்ச்சி 

உங்கள் ராசிக்கு 9வது வீடாகிய துலாம் ராசியில் கேது சஞ்சரிப்பது உயர்கல்வி அல்லது வெளிநாட்டில் தடைகளைத் தரக்கூடும். சிலர் வெளி நாட்டிற்குச் செல்ல சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால் ஒட்டுமொத்தமாக, கேதுவின் இந்த சஞ்சாரம் வெளிநாட்டில் கல்வி மற்றும் தொழிலில் தாக்கத்தை ஏற்படுத்தும். சிலருக்கு வெளிநாட்டில் உயர் பதவியில் வேலை கிடைக்கும். கும்ப ராசிக்காரர்கள் பலருக்கு மதம், தொண்டு, ஆன்மிகம், யோகா மற்றும் ஜோதிடம் ஆகியவற்றில் அதிக நாட்டம் அதிகரிக்கும். 

ராகு கேது பெயர்ச்சி  பரிகாரம்:- 

  • புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நாய்கள் மற்றும் பறவைகளுக்கு உணவளிக்கவும்.
  • கோவிலிலும், ஏழை எளியவர்களுக்கும் எண்ணெய், நெய் தானம் செய்யுங்கள்.
  • சனிக்கிழமையன்று அசைவ உணவு மற்றும் மதுவை தவிர்க்கவும்.

ராகு கேது பெயர்ச்சி எளிய வீட்டுப் பரிகாரங்கள்

  • ராகுவிற்கான கீழ்க்கண்ட வேத மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
  • ‘ஓம் க்யான்ஷ்சித்ர ஆபுவ்த்வதி சதா வ்ருத் சகா
  • க்யா ஸ்சின்ஷ்த்யா வ்ரித ஓம் ராகவே நமஹ’
  • கேதுவிற்கான கீழ்க்கண்ட வேத மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
  • ‘ஓம் கேதும் க்ரின்வன் கேதவே பேஷோ மர்யா அபேஷ்ஸே
  • சமுஷ்ட்பிர்ஜா யதா ஓம் கேதவே நமஹ’
  • சிவாலயங்களுக்குப் பழம் மற்றும் பால் வழங்கி, வழிபடவும்  
  • அமாவாசை நாட்களில் ஆலயங்களுக்கு 4 தேங்காய்களை அளிக்கவும் 
  • வீதியில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உணவு அளித்துப் பராமரிக்கவும் 
  • சூரிய அஸ்தமனம் ஆகி ஒரு மணி நேரத்திற்குள் இரவு உணவை முடித்துக் கொள்வது நல்லது

banner

Leave a Reply