Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW

பங்குனி உத்திர திருவிழா வரலாறு

March 20, 2023 | Total Views : 250
Zoom In Zoom Out Print

தமிழ் மாதங்களில் பன்னிரண்டாவது மாதம் பங்குனி. 27 நட்சத்திரங்களில் பன்னிரண்டாவது நட்சத்திரம் உத்திரம். இந்த இரண்டும் சேர்ந்து பௌர்ணமி திதியுடன் சேர்ந்து வரும் நன்னாளையே பங்குனி உத்திர திருவிழாவாகக் கொண்டாடுகிறோம்.

பங்குனி உத்திரம் வரலாறு :

சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் என்னும் மூன்று அசுரர்கள் முறையே ஆணவம், கன்மம்  மாயை இவற்றை குறிக்கிறார்கள். முக்குணங்கள் ஏற்படுத்தும் தீமைகளை அழிக்க ஞானம் என்னும் முருகப் பெருமான் அவதரித்து அவர்களோடு போரிட்டு வென்றார். தேவர் குலத்தை காத்து தெய்வானையை மணந்த நாள் பங்குனி உத்திர நாளே ஆகும்.

பங்குனி மாதத்தில் தான் அசுர குலத்தை அழிக்க தனது தாய் தந்தையரை வணங்கி முருகப் பெருமான் போருக்குச் சென்றதாக ஐதீகம். அவ்வாறு செல்லும் வழியில் முருகப் பெருமானை மலை ஒன்று தடுத்தது.  முன்னேற விடாமல் பெரிதாக வளர்ந்தது. எனவே முருகப் பெருமான் அம்மலையைப் பற்றி நாரதரிடம் வினவினார்.  கிரௌஞ்சன் என்ற ஒரு அசுரன் அகத்திய முனிவரின் சாபத்தால் மலையாக மாறி அனவரையும் துன்புறுத்தி வருவதையும், அந்த அசுரனே தராகசுரனின் மாயாபுரியை காத்து வருவதையும் அவர் மூலம் அறிந்து கொண்டார். .

உடனே முருகப்பெருமான் தனது தளபதியான வீரபாகுவை அழைத்து அவனுடன் தனது படையில் பாதியையும் அளித்து தாரகாசுரனுடன் போரிட அனுப்பி வைத்தார். இதனை அறிந்த தாரகாசுரன் தனது படைகளை திரட்டிக் கொண்டு வந்து போரிட ஆரம்பித்தான். இரண்டு படைக்கும் நடுவே கடும் போர் நடந்தது.  தாரகாசுரன் படையின் முக்கிய தலைவனான வீரகேசரியை தனது கதாயுதத்தால் வீழ்த்தினான். இதனை அறிந்த வீரபாகு தாரகாசுரனை தாக்க ஆர்மபித்தான். தாரகாசுரன் வீரபாகுவையும் தனது அம்பால் வீழ்த்தி கீழே விழச் செய்தான். கோபம் அடைந்த வீரபாகு இந்த முறை பயங்கரமாகத் தாரகாசுரனை தாக்க ஆரம்பித்தான். அவனது தாக்குதலை எதிர்கொள்ள இயலாத வீரபாகு தனது மாய சக்தியை பிரயோகிக்க ஆரம்பித்தான். தனது மாய சக்தியால் எலியாக மாறி மலை இடுக்குகளில் ஓடினான். இரு படைகளும் பயங்கரமாக மோதிக் கொள்ள பலர் மடிந்தனர். இதனை அறிந்த முருகப் பெருமான் தானே நேரடியாக வந்து போரிட ஆரம்பித்தார். தாரகாசுரன் மீண்டும் அசுரனாக மாறி முருகனை சிறுவன் என்று ஏளனம் செய்ய ஆரம்பித்தான். அதனால் கோபம் கொண்ட முருகப் பெருமான் தாரகாசுரனை தாக்க ஆரம்பித்தார். அதனைத் தாள முடியாமல் தாரகாசுரன் மீண்டும் எலியாக மாறி மலைக்குள் நுழைந்து போக்கு காட்டினான். இனியும் பொறுக்க இயலாது என்று எண்ணி முருகப் பெருமான் தனது தாய் அருளிய வஜ்ரவேலைக் கொண்டு மலையைத் தவிடு பொடியாக்கி தாரகாசுரனையும் வதைத்தார் மற்றும் பல அசுரர்களை அழித்தார்.இதனை அறிந்த சூரபத்மன்  முருகனோடு போர் புரிய ஆரம்பித்தான். முருகன் சூரபத்மனை வதம் செய்து ஆட்கொண்டார்.

அசுரர்களை அழித்து தேவர்களை காத்து தேவபுரியை இந்திரனுக்கு மீட்டு அளித்த முருகனைப் போற்றும் வகையில் தேவேந்திரன் தனது மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தார். இது ஒரு பங்குனி உத்திர நன்னாளில் நடந்தது.

எனவே, பங்குனி உத்திரம் திருவிழா, திருமணம் செய்ய மிகவும் உகந்த காலமாகும். பங்குனி உத்திரம் திருவிழா அல்லது பங்குனி உத்திரம் கொண்டாட்டம் முருகன் கோவில்களில் முருகப்பெருமான் முன்னிலையில் நடைபெறும். 

பங்குனி உத்திர நாள் சிறப்பம்சம் : 

பங்குனி உத்திரம் திருவிழா பௌர்ணமி அன்று  வருகிறது. பண்டைய குருமார்களும் ஜோதிடர்களும் திருமண முஹூர்த்தத்தை உறுதிப்படுத்த உத்திர பால்குனி நட்சத்திரம் அல்லது உத்திரத்தை தேர்வு செய்தனர்.  இது உறவு மற்றும் திருமணத்தின் நட்சத்திரம் மற்றும் திருமண மகிழ்ச்சி மற்றும் அமைதியைக் குறிக்கும் படுக்கை குறியீட்டால் குறிக்கப்படுகிறது. எனவே, பங்குனி உத்திரத் திருநாளில் பல தேவர்களும், அரசர்களும், அரசிகளும் திருமணம் செய்து கொண்டனர்.

பங்குனி உத்திரம் திருமண வாழ்வில் உள்ள தடைகளை நீக்கும் மங்களகரமான நாளாகும். உங்கள் திருமணம் ஒரு மங்களகரமான நேரத்தில் நடத்தப்படாவிட்டாலோ அல்லது உங்கள் ஜாதகத்தில் குஜ (செவ்வாய்) தோஷம் அல்லது கால சர்ப்ப தோஷம் போன்ற ஏதேனும் தோஷங்கள் இருந்தாலோ திருமணத்திற்குப் பிறகு உங்கள் வாழ்க்கையில் தொந்தரவுகள் ஏற்படலாம். பங்குனி உத்திரம்  இந்த தோஷங்களை நீக்க சிறந்த நாள். இந்த நாள் உங்கள் உறவுகளை வலுப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது. பங்குனி உத்திரம் உங்களின் அனைத்து தோஷங்களையும், குடும்ப வாழ்க்கையில் குழப்பங்களை ஏற்படுத்தும் எதிர்மறை தாக்கங்களையும் கரைக்கும் சக்தி கொண்டது. எனவே பங்குனி உத்திரம் திருவிழாவின் போது செய்யப்படும் திருமணங்கள் தெய்வீக மற்றும் புனிதமானவை.

திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் அல்லது திருமண வாழ்வில் நிம்மதி கிடைக்காமல் இருப்பவர்கள் மற்றும் திருமணம் ஆகி பிரிந்து இருப்பவர்கள் பங்குனி உத்திரம் நட்சத்திர நாளில் பூஜைகள் மற்றும் சடங்குகளை செய்தால் உறவுகளில் முன்னேற்றம் காணலாம். பங்குனி உத்திரம் என்பது உறவுகளில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்யும் நல்ல நாள்.

banner

Leave a Reply

Submit Comment