ரிஷபம் ராசி - பொதுப்பலன்கள்
ரிஷப ராசி அன்பர்களே! உங்கள் தனிப்பட்ட ஆசைகள் நிறைவேறும் நேரம் இது. வேலை, சவால்கள் நிறைந்ததாக இருக்கும்; எனினும், அதில் உங்கள் தரத்தை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும், நீங்கள் அடையும் பலன்கள் சாதாரணமாகவே இருக்கும்; எனவே உங்கள் செயல்பாடுகளில் அதிக பொறுமை தேவைப்படும். அதே நேரம், வேலையில் பதவி உயர்வுகள் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. அலுவலகத்தில், சக பணியாளர்களுடனான கருத்து வேறுபாடுகளை, திருப்திகரமாகத் தெளிவுபடுத்தித் தீர்த்து விடுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களுக்கு உரிய மரியாதை அளிப்பீர்கள். சிறு கருத்து வேறுபாடுகளைப் பெரிது படுத்தி, குடும்பத்தில் சச்சரவுகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். தேவையற்ற பேச்சுகளைத் தவிர்ப்பதும் நன்மை தரும். பிள்ளைகளின் வளர்ச்சி மகிழ்ச்சி தரும். குருமார்கள், பெற்றோர்கள் போன்றவர்களிடமிருந்து ஆசீர்வாதம் பெறுவதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
ரிஷபம் ராசி - காதல் /திருமணம்
நீங்கள் காட்டும் ஆதரவு, உங்கள் துணையைத் திருப்திப்படுத்தும். வாழ்க்கைத் துணையின் தேவைகளுக்கு நீங்கள் கொடுக்கும் முன்னுரிமை, அவர்கள் அன்பையும் நம்பிக்கையையும் அதிகரிக்கும். சில நேரங்களில், அன்றாட வாழ்க்கையில் உங்கள் அணுகுமுறை பிறருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தலாம். திருமணத்திற்கான பல வரன்கள் வந்தாலும், உங்களுக்கு ஏற்ற பொருத்தம் குறித்து, நீங்கள் நன்கு சிந்தித்தே முடிவு செய்ய வேண்டும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: செவ்வாய் பூஜை
ரிஷபம் ராசி - நிதி
நிதி நிலையை மேம்படுத்திக் கொள்ள, இது சிறந்த நேரம் ஆகும். ஊக வணிகம் போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்வதில் உங்களுக்கு ஆர்வம் உண்டாகும்; இது சாதகமாகவும் அமையும். மற்ற முதலீடுகளிலிருந்தும் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். எனினும், நீண்ட காலமாக நிலுவையிலுள்ள கடன்கள் அப்படியே நீடிக்கும்.
உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: புதன் பூஜை
ரிஷபம் ராசி - வேலை
இந்த மாதம், வேலை முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். இது உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பவும் அமையும். உடனடியாகச் செய்து முடிக்கப்பட வேண்டிய பணிகளுக்கு, நீங்கள் முன்னுரிமை அளிப்பது நல்லது. இது, மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்து, உங்களுக்கு நல்ல பலன் தரும். இந்த காலகட்டத்தில், உங்களுடைய உள்ளார்ந்த திறமையும் மேம்படும். வேலையில் நீங்கள் காட்டும் அர்ப்பணிப்பு உணர்வு, முக்கிய பணிகளை நிறைவேற்றுவதில் துணை புரிந்து, உங்களுக்கு நல்ல பெயர் பெற்றுத் தரும்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சனி பூஜை
ரிஷபம் ராசி - தொழில்
வணிக வளர்ச்சி வழக்கம் போல இருக்கும். உங்கள் மென்மையான இயல்பு, ஒரு நேர்மறையான சூழலை உருவாக்கும். புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவதற்கு, நீங்கள் தீவிர முயற்சிகளில் இறங்க வேண்டியது அவசியம். மேலும் சிறப்பான வளர்ச்சி பெறுவதற்கு, சமூக ஊடகங்களில் உங்கள் வியாபாரத்தை விளம்பரப்படுத்துவதை அதிகரிப்பது நல்லது. வணிக ரீதியான பயணங்களுக்கும், இப்பொழுது நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
ரிஷபம் ராசி - தொழில் வல்லுநர்
தொழில் வல்லுனர்களுக்கு சாதகமான முன்னேற்றம் ஏற்படும். உங்கள் பணிக்காக, உங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும். சிலருக்கு, தொழில் தொடர்பாக வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உருவாகும். சக ஊழியர்கள், உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் போன்றவர்களின் ஆதரவு, திருப்தியும், மகிழ்ச்சியும் தரும்.
ரிஷபம் ராசி - ஆரோக்கியம்
உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். எண்ணெய் உணவைத் தவிர்ப்பது, மேலும் நன்மை தரும். இயற்கை உணவிற்கு முக்கியத்துவம் அளிப்பதும், உங்கள் உடல் ஆற்றலை அதிகரித்துக் கொள்ள உதவும். சொந்த காரணங்களுக்காக, பயணம் ஒன்றை நீங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். அது உங்களுக்கு சிறந்த பலனைக் கொடுக்கும்.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: சூரியன் பூஜை
ரிஷபம் ராசி - மாணவர்கள்
மாணவர்கள் இப்பொழுது அமைதியான நேரத்தை அனுபவிப்பார்கள். ஆசிரியர்களுடனான உங்கள் உறவு, மிகவும் வலுப்பெறும். நண்பர்களுடன் எந்த வித சச்சரவுகளிலும் ஈடுபடாதீர்கள். உங்களது முறையான உணவுப் பழக்க வழக்கங்கள், வானிலை மாற்றம் காரணமாக ஏற்படக்கூடிய பல பிரச்சனைகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்.
கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம்: சரஸ்வதி ஹோமம்
சுப தினங்கள்: 1,3,4,8,9,10,11,13,15,16,17,19,20,21,24,25,26,30
அசுப தினங்கள்: 2,5,6,7,12,14,18,22,23,27,28,29,31

Leave a Reply