மிதுனம் ராசி - பொதுப்பலன்கள்
மிதுன ராசி அன்பர்களே! பொதுவாக இது உங்களுக்கு ஒரு நல்ல மாதமாகவே அமையும். பணிகள் சரிவர நடக்கும். நீண்டகால விருப்பமான ஒரு அசையா சொத்தை வாங்கும் வாய்ப்பு, உங்களில் சிலருக்குக் கிடைக்கும். சமூக சேவையில் உங்களுக்கு இருக்கும் ஆர்வம், பொது இடங்களில் மரியாதையைப் பெற்றுத் தரும். சர்ச்சைகள் எதுவும் இல்லாமல், வாழ்க்கை அமைதியாகவே செல்லும். இருப்பினும், எதையும் நேரடியாகப் பேசிவிடும் உங்கள் இயல்பு, சில நேரங்களில், குடும்பத்தில் பிரச்சனைகளை உருவாக்கலாம். உறவுகள் தொடர்பான முடிவுகள் எடுக்கும் பொழுது அவசரம் வேண்டாம். இந்தக் காலகட்டத்தில், நீங்கள் ஏராளமான பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது. இது சில சமயங்களில் உங்களுக்கு எரிச்சல் தரலாம். தனிப்பட்ட விவகாரங்களில் ஒரு பொழுதும் பின் வாங்காதீர்கள். ஒவ்வொரு வேலையிலும் உங்கள் முயற்சிகளை விடாமல் தொடருங்கள். சூழ்நிலையை மேம்படுத்திக்கொள்ள, தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். உங்கள் ஆரோக்கியம் மிகச் சிறப்பாகக் காணப்படுகிறது.
மிதுனம் ராசி - காதல்/திருமணம்
காதல் வாழ்க்கையில் சில தொந்தரவுகள் இருக்கக் கூடும். நெருங்கிய நண்பரின் தலையீடு காரணமாக, உங்கள் துணையைத் தவறாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. இருப்பினும், இறுதியில் துணையுடனான பிரச்சனைகள் தீர்ந்து, உறவு மகிழ்ச்சி தரும். சுற்றிலும் நிலவும் சூழ்நிலையை சரியாகப் புரிந்து கொண்டு, அதன்படி நடந்து கொள்வதன் மூலம், அன்றாட வாழ்க்கையை சுமுகமாக நடத்த முடியும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சுக்கிரன் பூஜை
மிதுனம் ராசி - நிதி
நிதி நிலையை மேம்படுத்திக் கொள்ள, இது நல்ல நேரம். பண உதவி எதையும், இப்பொழுது யாருக்கும் அளிக்க வேண்டாம். இது போன்ற சூழ்நிலைகளையே தவிர்த்து விடுவது நல்லது. செலவினங்கள் மிக அதிகமாக இருக்கக்கூடும். நிலையான சொத்து வாங்குவது தொடர்பாக, நீங்கள் பணத்தை முதலீடு செய்யலாம். உங்களில் சிலருக்கு, வங்கியிலிருந்து கடன் பெறுவதற்கு அனுமதி கிடைக்கக் கூடும்.
உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: ராகு பூஜை
மிதுனம் ராசி - வேலை
உங்கள் பணிக்கு உரிய அங்கீகாரம் பெறுவதற்கான நல்ல நேரம், இது. சக பணியாளர்களுடனான உங்கள் உறவு நன்றாக இருக்கும். இது, பணியிடத்தில் அவர்கள் ஆதரவு கிடைப்பதற்கு உதவியாக இருக்கும். எனினும், சக்திக்கு மீறிய பொறுப்புக்களை நீங்கள் ஏற்க வேண்டாம். அலுவலகத்தில், ஒழுங்கு முறையையும், நேரம் தவறாமையையும் பின்பற்றுவது நன்மை தரும்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: குரு பூஜை
மிதுனம் ராசி - தொழில்
வணிக வளர்ச்சி நன்றாக இருக்கும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். வியாபார இலக்குகளையும் நீங்கள் அடைய முடியும். வாடிக்கையாளர்களுடன் இணக்கமான உறவை மேம்படுத்திக் கொள்வதும், உங்கள் பணிகள் குறித்து அவர்கள் கருத்துக்களைக் கேட்பதும், நன்மை தரும். இருப்பினும், பெரும்பாலான விஷயங்களில் நீங்கள் பொறுமை காப்பது அவசியம்.
மிதுனம் ராசி - தொழில் வல்லுநர்
உங்கள் வளர்ச்சிக்கு உகந்த நேரம் இது. புதிய வேலைகளை ஏற்றுச் செய்யும் உங்கள் திறன் அதிகரிக்கும். இது, உங்கள் உற்பத்தியை மேம்படுத்தும். இளையவர்களுடன் நீங்கள் கொள்ளும் தொடர்பு, உங்களுக்கு ஆதரவு தரும்; தொழில் ரீதியான தேவைகளை அடைவதற்கும், மிகவும் உதவி புரியும்.
மிதுனம் ராசி - ஆரோக்கியம்
உடல்நலம் நன்றாக இருக்கும். நீங்கள், மிகவும் சுறுசுறுப்புடனும், அதிக ஆற்றலுடனும் செயலாற்றுவீர்கள். உடற்பயிற்சிகள் போன்ற எளிய நடைமுறைகளைப் பின்பற்றி, ஆரோக்கியம் தொடர்பான பல சிறு பிரச்சனைகைளைத் தீர்த்து விடுவீர்கள். தியானம் செய்வது, நீங்கள் கவனத்துடன் பணியாற்ற உதவும்.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : புதன் பூஜை
மிதுனம் ராசி - மாணவர்கள்
படிப்பிற்கு ஏற்ற நேரம், இது. கல்வியில் சிறந்து விளங்க, இந்தக் காலகட்டத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. உயர் கல்வியில் நீங்கள் சிறக்கவும், அது தொடர்பாக வெளிநாடு செல்லவும் வாய்ப்பு கிடைக்கும்.. ஆசிரியர்களுடன் நெருங்கிய தொடர்பும், சக மாணவர்களுடன் நட்பும், உங்களுக்கு உதவியாக இருக்கும்.
கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்
சுப தினங்கள்: 1,3,4,5,6,10,11,13,15,16,17,19,20,21,24,25,26,30
அசுப தினங்கள்: 2,6,7,8,9,12,14,18,22,23,27,28,29,31

Leave a Reply