மேஷம் ராசி - பொதுப்பலன்கள்
மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களுக்கு ஒரு சராசரியான காலமாக இருக்கும். பணிகளை முடிப்பதில் உரிய சமரசம் சமரசம் செய்து கொண்டால், பெரும்பாலான கடமைகளை உங்களால் சரியாக நிறைவேற்ற முடியும். இருப்பினும் முடிக்கப்படாமல் சில வேலைகள் இருக்கவே செய்யும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை பெரும்பாலும் சிக்கல்களின்றிச் செல்லும். அதில் உங்கள் பொறுப்புகளை நேர்மையாக நிறைவேற்ற இயலும். தாமதங்களுக்குப் பிறகு, பாராட்டுகளும் தேடி வரும். முடிக்கப்படாமல் ஏதேனும் வேலைகள் இருந்தால், அவையும் உங்கள் தளராத முயற்சியால் விரைவிலேயே முடிக்கப்பட்டு விடும். இவ்வாறு, அன்றாட வாழ்க்கையிலும், சமூக வாழ்விலும் பெரும்பாலான பிரச்சினைகளைத் தீர்த்து, குடும்பத்தின் பாதுகாவலராகவே நீங்கள் திகழ்வீர்கள். அமைதி, மன நிம்மதி தரும் பயணத்தையும் நீங்கள் மேற்கொள்ளுவீர்கள். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.
மேஷம் ராசி - காதல்/திருமணம்
இது காதலுக்கு உகந்த நேரம் எனலாம். இது தொடர்பாக நீங்கள் ஒரு முக்கிய முடிவையும் இப்பொழுது எடுக்க நேரலாம். இனிய உறவு ஒன்றை நீங்கள் தொடங்குவதற்கும், தற்பொழுது வாய்ப்பு உள்ளது. குடும்பத் தேவைகளை நிறைவேற்றத் தேவையான அனைத்தும் இப்பொழுது உங்களுக்கு தாராளமாகவே கிடைக்கும். ஆகவே, இது பற்றிக் கவலை கொள்ளத் தேவை இல்லை. உங்கள் அன்றாட வாழ்க்கை வழக்கம் போல் நடக்க, இவை உதவும். திருமண வரன்களுக்காக, நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சுக்கிரன் பூஜை
மேஷம் ராசி - நிதி
நிதி நிலையில் ஏற்ற இறக்கம் வரக்கூடும். நல்ல பலன் பெறுவதற்கு, சந்தை நிலவரத்தை அனுசரித்து பணத்தை முதலீடு செய்ய வேண்டும். செலவினங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம், பல சிக்கல்களிலிருந்து, உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ள முடியும். நண்பர்களுக்கு நிதி உதவி அளிப்பதைத் தவிர்த்து விடுவது நல்லது. அவ்வாறு கொடுத்தால், அது திரும்பி வராமல் போகலாம்.
உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: புதன் பூஜை
மேஷம் ராசி - வேலை
வேலை நிலவரம் திருப்தி தரும். ஆற்றலுடன் செயலாற்றி, இப்பொழுது நீங்கள், உங்கள் வேலைகளை முடிப்பீர்கள். பணியிடத்தில் கிடைக்கும் பண வரவும், பொருளாதார நன்மைகளும் மகிழ்ச்சி தரும். புதிய சவால்கள் எழுந்தாலும், அவையும், உங்கள் பணியை வலுவாக்கிப், பாதுகாக்கும்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: கணேச பூஜை
மேஷம் ராசி - தொழில்
அதிக முயற்சி செய்தே, தொழில் வளர்ச்சியை மேம்படுத்த முடியும். உரிய நேரத்தில், வியாபாரம் குறித்த சரியான தகவல்களைப் பெறுவதற்கு, இப்பொழுது நீங்கள் முன்னுரிமை அளிப்பது நல்லது. நன்கு சிந்தித்து நீங்கள் எடுக்கும் உடனடி முடிவுகள், உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். வருங்கால திட்டங்கள் குறித்தும், தொழில் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், நீங்கள் கூடுதல் நேரம் செலவு செய்ய வேண்டும். தொழில் கூட்டாளிகளுக்கும், உடன் பணியாற்றுபவர்களுக்கும், சிறப்பு ஊக்கத்தொகை அளிப்பது அவசியம். இது, வேலைகளை விரைவாக முடிப்பதற்கு உதவியாக இருக்கும்.
மேஷம் ராசி - தொழில் வல்லுநர்
தொழில்முறை வளர்ச்சி உங்களுக்கு சிறந்த பலன்களை அளிக்கும். இது உங்களுக்கு பலவகையிலும் ஆதரவாக இருக்கும். மேஷ ராசி தொழில் வல்லுனர்கள் கடினமாக உழைக்க வேண்டிய காலம் இது. உங்களுடைய எண்ணங்களுக்கு பதிலாக, உங்கள் நிர்வாகத்தின் முடிவுகளுக்கு, இப்பொழுது நீங்கள் முன்னுரிமை கொடுப்பது அவசியம். பணியிடத்தில், முக்கியமானவர்களுடன் உங்கள் தொடர்பு மேம்படும். உங்கள் கீழ் பணிபுரிபவர்களுடன், மதிப்பு, மரியாதையுடன் பழகுவீகள். சக பணியாளர்களையும் அக்கறையோடு கவனித்துக் கொள்வீர்கள்.
மேஷம் ராசி - ஆரோக்கியம்
உடல்நிலையில் கவனம் தேவைப்படும். குறைந்த ஆற்றல் காரணமாக நீங்கள் தவறி விழும் வாய்ப்பு உள்ளது. எனவே, இரும்புச்சத்து நிறைந்த உணவை நீங்கள் உட்கொள்ள வேண்டியது அவசியம். யோகப் பயிற்சிகளைத் தவறாமல் செய்வது, ஆரோக்கியம் சிறக்கவும், உடல் ஆற்றல் பெறவும் உதவும்.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை
மேஷம் ராசி - மாணவர்கள்
மாணவர்களுக்குக் கல்வி முன்னேற்றம் திருப்தி தரும். இந்த நேரத்தில், ஆர்வமும், அமைதியும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். நண்பர்களுடன் நீங்கள் மேற்கொள்ளும் உளப்பூர்வமான விவாதங்கள், பல பிரச்சினைகளைத் தீர்க்க உதவும். தொண்டு நிறுவனங்களிலிருந்து நிதி உதவி பெறும் வாய்ப்பும் ஏற்படும். உயர் கல்விக்கான ஊக்கத்தொகை பெறும் தகுதியையும் நீங்கள் பெறுவீர்கள்.
கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்
சுப தினங்கள்: 1,5,8,9,10,11,13,15,16,17,19,20,21,24,25,26
அசுப தினங்கள்: 2,3,4,6,7,12,14,18,22,23,27,28,29,30,31

Leave a Reply