சிம்மம் அக்டோபர் மாத ராசி பலன் 2022 | October Matha Simmam Rasi Palan 2022

சிம்மம் அக்டோபர் மாத பொதுப்பலன்கள் 2022:
சிம்ம ராசி அன்பர்களே! ஒற்றுமையே உயர்வு என்பதை கருத்தில் கொண்டு நீங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் ஒற்றுமையை பராமரிப்பீர்கள். மேலும் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரிடமும் நட்பு பாராட்டுவீர்கள். இந்த மாதம் புதிய நண்பர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அதன் மூலம் உங்கள் நட்பு வட்டம் விரியும். உத்தியோகத்தைப் பொறுத்தவரை அனுகூலமான நிலை இருக்கும். பணியிடத்தில் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமணமான தம்பதியர் மனமொத்து வாழ்வார்கள். இருவருக்கும் இடையே அன்னியோன்யம் கூடும். குடும்பத்தில் இருக்கும் வயதானவர்களின் உடல் நிலையில் சிறிது கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
காதல் / குடும்பம்:
இந்த மாதம் காதலர்களுக்கு ஏற்ற மாதம் என்று தான் கூற வேண்டும். காதலர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் காரணமாக காதல் உறவில் மனஸ்தாபங்கள் உண்டாகலாம். பேச்சில் கவனம் தேவை. தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். கணவன் மனைவி உறவில் இணக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியும் நல்லிணக்கமும் காணப்படும். இந்த மாதம் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் நல்ல சுமுகமான உறவு நிலை காணப்படும்.
காதலில் வெற்றி உண்டாக லக்ஷ்மி பூஜை
நிதி நிலை:
இந்த மாதம் உங்கள் நிதிநிலை வரவேற்கத்தக்க வகையில் இருக்கும். உத்தியோகம் மற்றும் தொழில் மூலம் வருமானம் உயரும். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தனியார் துறையில் பணியில் இருக்கும் சிம்ம ராசி அன்பர்களின் பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். யூக வணிகமான பங்கு மற்றும் பொருள் வர்த்தகத்தில் வந்த லாபம் மூலம் தங்களின் பொருளாதார நிலை ஏற்றம் காணும் வகையில் கிரக நிலைகள் உள்ளன.
கடன் பிரச்சனை தீர ருண விமோச்சன பூஜை
வேலை:
உத்தியோகத்தைப் பொறுத்தவரை இது உங்களுக்கு சாதகமான பலன்கள் கிட்டும் மாதமாக இருக்கும். பணியிடச் சூழல் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். சக பணியாளர்களின் ஆதரவு உங்களுக்கு கிட்டும். அவர்களின் ஒத்துழைப்பை நீங்கள் பெறுவீர்கள். இது உங்கள் மனதிற்கு அமைதியை அளிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டையும் நீங்கள் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. காவல் மற்றும் ராணுவம் போன்ற சீருடை அணியும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் தன நிலையில் ஏற்றம் ஏற்படும். நீங்கள் தனியார் துறையில் வேலையில் இருப்பவர் எனில் உங்கள் உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
தொழில்:
இந்த மாதம் உங்கள் தொழில் சிறப்பாக நடக்கும். ஒரு சிலர் தங்கள் தொழிலில் கூட்டாளிகளை சேர்த்துக் கொள்ளும் எண்ணம் கொண்டிருப்பார்கள். உங்கள் எண்ணம் இந்தமாதம் நிறைவேறும். உங்கள் தொழிலை நீங்கள் விரிவுபடுத்துவீர்கள். அதன் மூலம் உங்கள் வருமானம் உயரும். காய்கறி மற்றும் பழ வியாபாரத்தில் தன வரவு அதிகரிக்கும். உங்கள் பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும்.
தொழில் வல்லுனர்கள்:
நீங்கள் வாகன உற்பத்தி துறை சார்ந்தவர் எனில் தொழிலில் சிறப்புற செயலாற்றி நீங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். தொழில் நடத்தும் சூழல் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். அரசு சார்ந்த தொழில் எனில் உங்களுக்கு அதிக பணிகள் காணப்படும். என்றாலும் நீங்கள் மிகவும் சிறப்பாக பணியாற்றுவீர்கள்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் மேன்மை பெற துர்கா பூஜை
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் சீராக இருக்கும் என்றாலும் சிறு சிறு உபாதைகள் வந்து போகும். அஜீரணம் சம்பந்தமான உடல் உபாதைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதால் உண்ணும் உணவில் கவனம் தேவை. தியானம் மற்றும் நடைபயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் தங்களின் உடல் ஆரோக்கியம் மேன்மை பெறும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை.
உடல் ஆரோக்கியம் பெற சந்திரன் பூஜை
மாணவர்கள்:
சிம்ம ராசி மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாக கல்வி பயில்வார்கள். தேர்வுகளையும் சிறப்புற எழுதி முடிப்பார்கள். முதன்மையான மதிப்பெண்களைப் பெற்று பட்டம் பெறுவார்கள். ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்கள் தங்களது ஆராய்ச்சியில் வெற்றி பெற்று பட்டம் பெறுவார்கள். போட்டித் தேர்வு எழுதும் மணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவார்கள்.
மாணவர்கள் படிப்பில் வெற்றி பெற சரஸ்வதி பூஜை
சுப நாட்கள்:
1, 2, 5, 6, 7, 20, 21, 22, 23, 27, 28, 31.
அசுப நாட்கள்:
3, 4, 8, 9, 10, 16, 18, 19, 24, 25, 26, 29, 30,
