கன்னி அக்டோபர் மாத ராசி பலன் 2022 | October Matha Kanni Rasi Palan 2022

கன்னி அக்டோபர் மாத பொதுப்பலன்கள் 2022
கன்னி ராசி அன்பர்களே! கணவன் மனைவி இடையே ஒற்றுமை என்றாலே குடும்பத்தில் குதூகலம் தான். இந்த மாதம் உங்கள் குடும்பத்தில் அந்த குதூகலம் இருக்கக் காண்பீர்கள். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமுக நல்லிணக்கம் கூடும். உங்கள் வருமானம் அதிகரிக்கும் என்றாலும் செலவுகளும் உங்கள் கையை கடிக்கும். தேவையற்ற செலவுகளை செய்யாதீர்கள். சிக்கனமாக இருக்க முயலுங்கள். உத்தியோகத்தைப் பொறுத்தவரை அனுகூலமான நிலை இருக்கும். என்றாலும் அதிகப் பணிச்சுமை காரணமாக மனதில் பதட்டமான நிலை இருக்கும். தொழில் மூலம் லாபம் கிட்டும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு இந்த மாதம் திருமணம் கைகூடும். உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது இருக்கும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
காதல் / குடும்பம்:
இளம் வயது கன்னி ராசி அன்பர்கள் மனதில் இந்த மாதம் காதல் அரும்பு மலரும். காதலர்கள் இந்த மாதம் இனிமையான மாதமாக இருக்கக் காண்பார்கள். கணவன் மனைவிக்கு இடையே சண்டை சச்சரவுகள் நீங்கி நல்லிணக்கம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இடையே இணக்கமான சூழ்நிலை காணப்படும். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இடையே சுமூகமான உறவுநிலை நீடிக்கும்.
காதலில் வெற்றி உண்டாக லக்ஷ்மி பூஜை
நிதி நிலை:
நிதிநிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். தொழில் மூலம் உங்கள் வருமானம் பெருகும் வாய்ப்பு உள்ளது. வருமானம் அதிகரிக்கும். உபரி பணத்தை உபயோகமான வழியில் செலவழிக்க முயற்சி செய்வீர்கள். காய்கறிகள் வியாபாரம் செய்பவர்கள் தங்கள் தொழில் மூலம் லாபம் காண்பார்கள். அதன் மூலம் பணம் பெருகும். இந்த மாதம் வீட்டிற்கு வெள்ளை அடித்தல் மற்றும் உடைந்த பைப்புகளை சரி செய்தல் போன்ற வகையில் செலவுகள் ஏற்படும். குழந்தைகளின் படிப்பிற்கான செலவுகள் அதிகரிக்கும்.
பொருளாதாரத்தில் ஏற்றம் காண குரு பூஜை
வேலை:
உத்தியோகத்தைப் பொறுத்தவரை நீங்கள் இந்த மாதம் நற்பலன்களைக் காண்பீர்கள். உங்கள் பணிகளை குறித்த நேரத்திற்கு முன்பே முடித்து மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஒரு சிலருக்கு வேலை நிமித்தமாக வெளியில் செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கும்.என்றாலும் உங்கள் வெளியிடப் பயணம் மூலமாக நீங்கள் லாபமும் ஆதாயமும் காண்பீர்கள்.
தொழில்:
தொழிலைப் பொறுத்தவரை அனுகூலமான நிலை இருக்கலாம். கூட்டுத் தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலில் சிறந்த லாபம் காண்பார்கள். ஒரு சிலர் இந்த மாதம் புதிதாக தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது. மேலும் சிலர் ஏற்றுமதி சார்ந்த தொழில் மூலமாக லாபமும் ஆதாயமும் பெறுவார்கள்.
தொழில் வல்லுனர்கள்:
தொழில் வல்லுனர்களுக்கு இது சிறந்த மாதமாக இருக்கும். ஒரு சிலர் புதிய யுக்திகளைக் கையாண்டு அதன் மூலம் எளிதில் பணிகளை முடித்து வாடிக்கையாளர்கள் மற்றும் மேலதிகாரிகளை திருப்திபடுத்துவார்கள். தங்கள் பணிக்கான பாராட்டுதலைப் பெறுவார்கள். இது உங்களை ஊக்குவிக்கும். தொழிலில் முன்னேற்றம் காணவும் தொழிலை விரிவாக்கம் செய்யவும் உதவிகரமாக இருக்கும்.
உத்தியோகம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு கணபதி பூஜை
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும் என்றாலும் அதிக பணிகள் காரணமாக நீங்கள் சோர்வாக உணரலாம். சிறு பாதிப்புகளால் அவதியுற நேரலாம். இந்த மாதம் உங்களுக்கு இடுப்பு வலி மற்றும் மூட்டு வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க உடற்பயிற்சி மற்றும் ஆழ்நிலை தியானம் மேற்கொள்வது நன்மை பயக்கும்.
ஆரோக்கியமான உடல் நலனுக்கு செவ்வாய் பூஜை
மாணவர்கள்:
முயற்சி திருவினை ஆக்கும் என்பதனை கருத்தில் கொண்டு மாணவர்கள் இந்த மாதம் விடா முயற்சியுடன் செயல்படுவார்கள். தங்கள் முயற்சிக்கான வெற்றியையும் அடைவார்கள். சிறந்த முறையில் தேர்வுகளை எழுதி நல்ல மதிப்பெண்களையும் பெறுவார்கள். போட்டித் தேர்வு எழுத நினைக்கும் மாணவர்கள் சிறிது கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். கவனம் சிதறாமல் மனதை ஒருமுகப்படுத்தி படிக்க வேண்டியது அவசியம். என்றாலும் கடின முயற்சிக்குப் பின் வெற்றி கிட்டும். அறிவியல் துறையில் படிக்கும் மாணவர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள்.
கல்வியில் வெற்றி கிடைக்க கணபதி பூஜை
சுப நாட்கள்:
1, 2, 5, 6, 7, 9, 14.
அசுப நாட்கள்:
3, 4, 8, 11, 12, 13.
