கடகம் அக்டோபர் மாத ராசி பலன் 2022 | October Matha Kadagam Rasi Palan 2022

கடகம் அக்டோபர் மாத பொதுப்பலன்கள் 2022:
அன்புள்ள கடக ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. குடும்ப உறுப்பினர்களுடன் பழகும் விதம் சுமுகமாக இருக்கும். குடும்பத்தாருடன் நல்லிணக்கம் காணப்படும். கடன் பட்டார் நெஞ்சம் கலங்கினார் போல என்று இதுவரை நீங்கள் கடன் விஷயத்தில் கலங்கிய நாட்கள் கழிந்து விட்டது. இந்த மாதம் அந்தப் பிரச்சினைகள் கிடையாது. இந்த மாதம் நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள முதலில் உங்கள் உணவு முறையில் கவனம் தேவை. உங்களுக்கு அஜீரண கோளாறுகள் வர வாய்ப்புள்ளது. துரித மற்றும் வெளியிட உணவுகளை தவிர்ப்பது நன்மை பயக்கும். மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். ஓரு சில கடக ராசி மாணவர்களுக்கு அயல்நாட்டில் உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
காதல் / குடும்பம்:
இளம் வயது கடக ராசி காதலர்களுக்கு இந்த மாதம் வரவேற்கத்தக்க மாதமாக இருக்கும். திருமணமான தம்பதிகளுக்குள்ளும் ஒற்றுமையும் நல்லிணக்க உறவும் இருக்கும். அன்னியோன்யம் கூடும். உறவினர்களுடன் சில சமயங்களில் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். எனவே உங்கள் பேச்சில் கவனம் தேவை. தேவையற்ற பேச்சுகளை தவிர்க்க வேண்டும். உங்கள் தாயாருக்கு உடல் சுகவீனம் ஏற்படலாம். அவரது ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
குடும்ப உறவில் மகிழ்ச்சி அதிகரிக்க செவ்வாய் பூஜை
நிதி நிலை:
இந்த மாதம் உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். கடந்த கால முதலீடுகள் மூலம் லாபம் மற்றும் ஆதாயம் கிட்டும். இந்த மாதம் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். அசையாச் சொத்துக்களை வாங்க வேண்டும் என்ற உங்கள் விருப்பம் இந்த மாதம் நிறைவேறும். ஒரு சிலர் மனை வாங்கி வீடு கட்ட துவங்கலாம்.
தன நிலையில் ஏற்றம் உண்டாக சுக்கிரன் பூஜை
வேலை:
உத்தியோகத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு அனுகூலமான பலன்களே கிட்டும். நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த உத்தியோக உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நீங்கள் மதிப்பும் மரியாதையும் கிடைக்கப் பெறுவீர்கள். வெளி நாட்டில் வேலை தேடும் ஒரு சிலருக்கு வெளி நாட்டில் வேலை கிட்டும்.
தொழில்:
உங்கள் தொழிலைப் பொறுத்த வரை இது மகிழ்ச்சி அளிக்கும் மாதம் என்று கூறலாம். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு இது ஆனந்தம் அளிக்கும் மாதமாக இருக்கும். கூட்டுத்தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகி அதிக தன லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். இந்த மாதம் தரகு சம்மந்தப்பட்ட கூட்டுத் தொழில் சிறப்பாக இருக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட ஜவுளி ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு சிறந்த பலன்களையும் நல்ல லாபங்களையும் அளிக்கும் மாதம் ஆகும்.
தொழில் வல்லுனர்கள்:
கடக ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் சிறப்பாக செயலாற்றி தங்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பைப் பெறுவார்கள். மேலும் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை பராமரிப்பார்கள். இதன் மூலம் தொழில் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சி காண இயலும்.
உத்தியோகம் மற்றும் தொழில் உயர்விற்கு கணபதி பூஜை
ஆரோக்கியம்:
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். பெரிய அளவிலான உடல் நல பாதிப்புகள் ஏதும் இருக்காது. என்றாலும் சிறு சிறு உபாதைகள் வந்து போகும். ஆஸ்துமா போன்ற உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய இயலும். உங்கள் ஆரோக்கியம் சீராக இருந்தால் தான் நீங்கள் சிறப்பாக செயல்பட இயலும். எனவே உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
நல்ல உடல் ஆரோக்கியம் பெற சனி பூஜை
மாணவர்கள்:
முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார் என்பதற்கிணங்க கடக ராசி மாணவர்கள் இந்த மாதம் தங்கள் முயற்சி மூலம் சிறப்பாகக் கல்வி பயில்வது மட்டுமின்றி கல்வியில் சாதனையும் புரிவார்கள். வெளி நாட்டில் கல்வி பயில வேண்டும் என்று முயற்சி செய்யும் மாணவர்களில் ஒரு சிலர் வெளி நாட்டில் படிப்பதற்கான வாய்ப்பினைப் பெறுவார்கள். ஆராய்ச்சிக் கல்வி மாணவர்கள் ஆராய்ச்சியில் வெற்றி பெற்று ஆராய்ச்சி படிப்பிற்கான பட்டத்தை பெறுவார்கள்.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க புதன் பூஜை
சுப நாட்கள்:
15, 16, 17, 20, 21, 22, 23, 27, 28.
அசுப நாட்கள்:
9, 10, 11, 18, 19, 24, 25, 26.
