x
x
x
cart-added The item has been added to your cart.

புத்தாண்டு ராசி பலன்கள் 2019 – விருச்சிகம் : Vrishika Rasi 2019 (Scorpio)

May 31, 2018 | Total Views : 1,312
Zoom In Zoom Out Print

விருச்சிக ராசி - பொதுப்பலன்கள்

விருச்சிக ராசிக்காரர்களே உங்களுக்கு நல்ல காலம் வந்துவிட்டது. விருச்சிகத்திலிருந்து தனுசுக்கு பெயர்ச்சியாகும் சனி உங்கள் வாழ்க்கையை  மிகவும் எளிமையாக்க போகிறார். விட்டதை பிடிக்கும் நேரம் இது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நீங்கள் தவறவிட்ட விஷயங்களை இந்த ஆண்டு பெற்று மகிழ்வீர்கள். விட்டுப் போன தொடர்பு உங்களைத் தேடிவரும். ஆண்டின் தொடக்கத்தில் அதிக நம்பிக்கையோடு இருந்து அனைத்தையும் சாதிப்பீர்கள். உங்களை வீட்டைப்  பொறுத்தவரையில் நீங்கள் தான் ராஜா. உங்கள் கருத்துக்கு யாரும் எதிர்பேச்சு பேசமாட்டார்கள். உங்களை  பின்பற்றி அவர்கள் நடப்பார்கள். நீங்கள் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு இருந்தால் விரைவில் நலம் பெறுவார்கள்.

Vrishika Rasi Palan 2019

விருச்சிக ராசி - வேலை

விருச்சிக ராசிக்காரர்களுக்கு வேலையைப் பொறுத்த வரையில் முன்பு இருந்த சூழ்நிலை மாறிவிடும். கலங்க வேண்டாம். நிம்மதியாக இருங்கள். உற்சாகத்துடன் பணியாற்றுங்கள். உங்களுக்காக மகிழ்ச்சியான செய்தி ஒன்று காத்திருக்கிறது. அது இந்த ஆண்டு மத்தியில் உங்களை வந்தடையும். நீங்கள் பல்வேறு திறமைகளை ஒருங்கே பெற்றவர்களாக இருப்பீர்கள். தொழில் செய்பவர்கள் வியாபாரத்தில் அதிக லாபத்தை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைய வேண்டாம். நீங்கள் நினைத்த லாபம் மெதுவாகத்தான் கிடைக்கும். பொறுமையுடன், அமைதியாக இருந்து தொழிலில் கவனம் செலுத்துங்கள்.  ஏற்கனவே இருந்த பரபரப்பான சூழ்நிலை மற்றும் பிரச்சனைக்குரிய சூழ்நிலைகள் இப்போது போய்விட்டிருக்கும். நிம்மதியாக இருங்கள். நீங்கள் உங்கள் வேலையில் அதிக ஈடுபாடு உள்ளவராகவும், பல்வேறு பணிகளைக் கையாளும் திறன் உடையவராகவும் இருப்பீர்கள். பகைமைக்கு இடமில்லை. ஆரம்பத்தில் முதல் இரு மாதங்களுக்கு சில குழப்பங்கள் அல்லது நிச்சயமற்ற தன்மை இருக்கலாம். அதன்பின், நீங்கள் அமைதியாக உங்கள் கடமைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அதிக ஆர்வமாக மிகையான லாபத்தை எதிர்பார்க்க வேண்டாம். லாபங்கள் மிக மெதுவாகத்தான் கிடைக்கும்.

பொறுமை கடலினும் பெரிதல்லவா? ஆண்டின் நடுப்பகுதியில் மகிழ்ச்சி காத்திருக்கிறது. ஒட்டு மொத்த வியாபார அம்சங்களினால் மகிழ்ச்சி அடைவீர்கள். மேலும் புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பொது ஜனங்களை பற்றி நன்கு தெரிந்து கொள்வீர்கள்.

உங்கள் வேலை மேம்பட அஷ்டலட்சுமி பூஜை

விருச்சிக ராசி - நிதி நிலைமை

விருச்சிக ராசிக்காரர்களாகிய உங்களுக்கு, இந்த ஆண்டு நிதி நிலைமை மிகச் சிறப்பாக இருக்கும். நிதி நிலையைப் பொறுத்தவரையில் அதிக மேம்பாடு அடைவீர்கள். கடந்த இரு ஆண்டுகளின் நிதிநிலைமையின் சூழ்நிலையை ஒப்பிடும்போது, ​​இந்த ஆண்டு நிதி வாய்ப்புக்களைப் பொறுத்தவரையில் சாதகமாக இருக்கும். சேமிப்பின் அவசியத்தை உணர்ந்து புதிய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.  கடன்கள் இருந்தாலும் கவலைப்பட வேண்டாம். அதனை திருப்பி கொடுப்பதற்கு ஏதோ ஒரு வழியில் பணம் உங்களை தேடி வரும்.  இதுவே பெரிய அதிர்ஷ்டம் தானே? ஆடம்பர பொருள்கள் வாங்குவதில் உங்களுக்குக் குறைந்த விருப்பமே இருக்கும். ஏனென்றால் உங்களுடைய இப்போதுள்ள  நிதி நிலைமையைப் பராமரிப்பதில் கவனமாக இருப்பீர்கள்.

உங்கள் நிதி நிலைமை மேம்பட லட்சுமி பூஜை

விருச்சிக ராசி - காதல் மற்றும் உறவுநிலை

விருச்சிக ராசிகாரர்களுக்கு  இந்த ஆண்டு காதல் உறவைப் பொறுத்த வரையில் சிறப்பான நிலை உணருவீர்கள். எதிர்பாராத வகையில் உங்கள் காதலுக்கு வீட்டில் பச்சை கொடி காட்டுவார்கள். சில நேரங்களில் நம் குடும்பத்தில் நாம் தான் முக்கியமானவர் என்ற எண்ணம் உங்கள் மனதில் எழும். அதுவே உங்களை சில சிக்கல்களில் மாட்டி விட வாய்ப்பு உள்ளது. கவனமாக இருங்கள்.  மேலும் கடந்த சில ஆண்டுகளாக  இருந்து வந்த மந்த நிலை மாறிவிடும். சந்தோஷமாக வாழ்கையை கழியுங்கள். உங்கள் வாழ்க்கைத்துணை சொந்தகாரர்களிடம்  பேசும் போது கவனமாக இருங்கள். மனதில் ஆயிரம் இருக்கும் அதை வெளியே சொல்லக்கூடாது. நீங்கள் பேசும் வார்த்தையை விட மவுனம் சிறந்தது. அதுவே பிறர் மத்தியில் உங்கள் கண்ணியத்தை காப்பாற்றும்.

நுண்ணறிவு மற்றும் நல்ல தகவல் தொடர்பாடலுக்கு ஹனுமன் ஹோமம்

விருச்சிக ராசி - ஆரோக்கியம்

விருச்சிக ராசிகாரர்களுக்கு  இந்த ஆண்டு கொஞ்சம் ஒய்வு கிடைக்கும். கடந்த ஆண்டை பார்க்கும் போது இந்த ஆண்டு ஆரோக்கியத்தில் சிறியளவில் முன்னேற்றம் இருக்கும். அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு அலைந்தவர்ளுக்கு  விடிவு காலம் பிறக்கும். மருந்து, மாத்திரை சாப்பிட வேண்டியது இருக்காது. அந்தளவிற்கு உங்கள் ஆரோக்கியம் மேம்படும். பணம் இருப்பவன் லசாசதிபதி.  நோயில்லாதவனை கோடீஸ்வரன் என்பார்கள். இப்போது கோடீஸ்வரர்கள் பட்டியலில் நீங்கள் இணைந்து விடுவீர்கள். கால் வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  நல்ல சிகிச்சை கிடைக்கும். எப்போதும் பிரதான உறுப்புகள் கண் மற்றம் கால். இவை இரண்டையும் சரியான முறையில் பராமரிக்கவும். எந்த விஷயத்திலும் அதிக உணர்ச்சி வசப்படாதீர்கள். சாதாரணமாக இருந்தால் நீங்கள் நினைத்தது நடக்கும்.

நல்ல ஆரோக்கியத்திற்கும், மனதின் ஒட்டுமொத்த நிலைத்தன்மைக்கும் கணேச ஹோமம்

விருச்சிக ராசி - மாணவர்கள்

விருச்சிக ராசிக்கார மாணவர்களுக்கு படிப்பு பாகற்காய் போல் கசக்கும். படித்தால் தானே வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய முடியும். அதை நினைத்து படியுங்கள். வீட்டில் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு படிக்கும் சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுங்கள். குறிப்பாக டிவிக்கு குட் பை சொல்லுங்கள்.   பாடங்களை எப்படி படித்து தேர்வுக்கு தயார் ஆவது என்பதை அவர்களுக்கு திட்டமிட்டு அட்டவணைணைத் தயார் செய்து கொடுங்கள். அது அவர்களை சில குழம்பத்திலிருந்து விடுவித்து படிப்பில் கவனம் செலுத்த வைக்கும். அன்றைய பாடங்களை அன்றே படித்து முடித்துவிடுங்கள். பாடம் படிக்காமல் விட்டு மொத்தமாக சேர்த்து வைத்து படித்தால் அது உங்களுக்கு தனிச்சுமையை ஏற்படுத்தும். தேர்வு நேரங்களில் மொத்தமாக சேர்ந்து வைத்து படித்து விடலாம் என்று நினைத்தால், அந்த எண்ணத்தை மாற்றி இன்றே உங்களை படிப்பு தொடங்குகள்.

கவனச்சிதறல்கள் தவிர்க்க மற்றும் கல்வியில் கவனம் ஏற்பட ஹயக்ரீவ யந்திரம்

பொதுப் பரிகாரம்:

கால பைரவ ஹோமம்

வீட்டுப் பரிகாரங்கள்:

  • ஏழைகளுக்குக் குறிப்பாக முதியவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள்
  • முக்கியமான விஷயங்களில் குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை பெறுங்கள்.

ஜெபிக்க வேண்டிய மந்திரம் “ஓம் கேசவாய நமஹ” தினமும் 108 முறை அல்லது தினமும் ஸ்ரீ சுப்பிரமணிய புஜங்க ஸ்தோத்திரத்தை கேளுங்கள்.  
பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளவும் பங்கு கொள்ளவும்  கீழே உள்ள இனைப்பை க்ளிக் செய்யவும்

சாதகமான மாதங்கள்: ஜனவரி, பிப்ரவரி, ஏப்ரல், மே, அக்டோபர்
பாதகமான மாதங்கள்: மார்ச், ஜூன், ஜூலை, செப்டம்பர், டிசம்பர்

இந்த மாதங்களில் உங்களுக்கு பிடித்தமான கடவுளை வணங்கவும். பரிந்துரைக்கப்பட்ட பரிகாரங்களை செய்யவும்.

உங்களுக்கான தினசரி / வாராந்திர / மாதாந்திர / வருடாந்திர ராசி பலன்களை எங்கள் ஆஸ்ட்ரோவேட் செயலி (app) மூலமும் நீங்கள் பெற்று பயனடையலாம். ஆஸ்ட்ரோவேட் செயலியை ஆன்ட்ராய்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

google play

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos