மீன ராசி - பொதுப்பலன்கள் 2019 ஆம் ஆண்டு, நீங்கள் கூர்மையானவராகவும் அறிவார்ந்தவராகவும் செயல்பட வேண்டும். உங்கள் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். எவருக்கும் ஆதரவு தருவதாக வாக்குறுதி அளிக்க வேண்டாம். உங்கள் குடும்ப நபர், அல்லது நண்பர் அல்லது அலுவலகத்தில் உள்ள சக பணியாளர் என யாராக இருந்தாலும் அவர்களிடம் உங்களுடைய குடும்ப ரகசியங்களையோ அல்லது தொழில் சம்மந்தமான ரகசியங்களையோ பகிர்ந்து கொள்ளாதீர்கள். மக்களை பகுப்பாய்ந்து புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இது ஏதோ ஒரு வகையில் இந்த ஆண்டு உங்களுக்கு உதவியாக இருக்கும். வாழ்க்கையில் எத்தகைய கடினமான சோதனைகளை எதிர்கொண்டாலும் அவற்றை மிக எளிதாகக் கடந்து செல்வதற்கு குரு பகவான் உங்களுக்கு உதவியாக இருப்பார். எனினும் சில விஷயங்களைச் செய்வதில் அதீத நம்பிக்கையோடு இருக்காதீர்கள். நஷ்டங்களோ அல்லது தேவையற்ற செலவினங்களோ இருக்காது. ஆனால் மறுபுறம் சாயா கிரகங்களின் நிலை காரணமாக நீங்கள் சில விஷயங்களில் கவனமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மீன ராசி - வேலை இந்த ஆண்டு நீங்கள் உயர்ந்த நிலையில் இருப்பீர்கள். ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு பணியிடத்தில் அறிமுகமில்லாத சம்பவங்கள் அல்லது பிரிவினை போன்ற நிகழ்வுகள் நடைபெறலாம். அலுவலகத்தில் எளிதாகத் தொந்தரவு செய்யப்படுவீர்கள். வியாபாரத்தில் இருப்பவர்கள் பிரச்சனைக்கு உள்ளாவார்கள். ஏனென்றால் பல்வேறு ஆதாரங்களில் இருந்து வர வேண்டிய தொகை நிலுவையில் இருக்கும். அதைப் பெறுவதற்கு சிறிது காலம் நீங்கள் காத்திருக்க வேண்டும். இருப்பினும் மனம் தளர வேண்டாம். தொடர்ந்து பின் தொடர்வதாலும் உறுதியான முயற்சிகளாலும் உங்கள் நிலையை நிலைநிறுத்திக் கொள்வீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். நீங்கள் எதிர்பார்த்தவை நடக்காமல் போனால் உங்களை நீங்களே குற்றம் சாட்டிக் கொள்ளாமல் விதியைக் குற்றம் சாட்டுங்கள்.
மீன ராசி - நிதி நிலைமை நிதிநிலையைப் பொறுத்தவரை இந்த ஆண்டு உங்கள் எதிர்பார்ப்பின்படி காணப்படும். நீங்கள் அதிக லாபத்தைப் பெறாவிட்டாலும், பெரிய இழப்புகளுக்கு ஆளாக மாட்டீர்கள். நிதி நிலைமையைப் பொறுத்தமட்டில் ரோலர் கோஸ்டர் சவாரி போன்று நிலையற்றதாக இந்த ஆண்டு இருக்கும். நீங்கள் இலாபகரமான கூட்டாளிகளுடன் இணைந்திருப்பீர்கள்.
ஆண்டின் தொடக்கத்தில் பண வரவு காணப்படும். அந்தப் பணத்தை உங்கள் பழைய கடன்களைத் திரும்பச் செலுத்துவதற்குச் செலவழிப்பீர்கள். ஒரு புறம் நீங்கள் திருப்தியாக உணருவீர்கள். ஆனால் மறுபுறம் உங்கள் அத்தனை கடமைகளையும் முடிக்க இந்த ஆண்டு முழுவதும் நீங்கள் உழைக்க வேண்டி வரும். அதற்கு தகுந்தாற் போல் திட்டமிடுங்கள். அல்லது அனுபவம் உள்ள நிதி ஆலோசகரின் ஆலோசனையைக் கேட்டு அதன் படி மேற்கொண்டு நடவடிக்கை எடுங்கள்.
மீன ராசி - காதல் மற்றும் உறவு நீங்கள் உங்கள் நிலையை உணர்ந்து எதிர்காலத்திற்கான திட்டத்தை தொடங்க இதுவே சரியான நேரம். காலத்தோடு இணைந்து செல்லுங்கள். எந்த விஷயத்திலும் தாமதம் செய்யாதீர்கள். உங்களில் சிலருக்கு உங்களுடைய உறவுநிலை மகிழ்ச்சியான முடிவைத் தரும். மற்றவர்களுக்குத் திருமணம் முடியக் காலதாமதம் ஆகலாம். சாதகமான நிகழ்ச்சிகள் நடைபெறலாம். அதற்கு உங்களுடைய ஈடுபாடு மிகவும் தேவைப்படும். அவசர முடிவுகள் எடுக்காதீர்கள். சிறிய அளவில் கருத்து வேறுபாடுகள் எழலாம். புரிந்து நடந்து கொள்ளுங்கள்.
மீன ராசி - ஆரோக்கியம் உங்கள் உடல்நிலை இந்த ஆண்டு மிக நன்றாக இருக்கும். உங்களில் சிலர் உடற்பயிற்சிக்கான திட்டத்தை புத்துணர்ச்சியோடு செயல்படுத்த நினைக்கலாம். உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு இது சிறந்த நேரம். குறிப்பாக இந்த ஆண்டு உங்கள் கூடுதல் கலோரிகளை எரிப்பதற்கு உடற்பயிற்சி மையத்திற்குச் செல்வது சிறந்த யோசனையாக இருக்கும்.
மீன ராசி - மாணவர்கள் மாணவர்கள் தேர்வுகளுக்கு தங்களைத் தயார் செய்து கொள்ளும் போது கூடுதல் கவனத்தோடு இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். தொடர்ந்து தயார் நிலையில் இருங்கள். நீங்கள் படிப்புத் திட்டத்தை பின்பற்றுங்கள். முக்கியமான அம்சங்களை ஞாபகம் வைத்துக்கொள்ள இது உதவியாக இருக்கும். மூத்தவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள். தேர்வுகளுக்குத் தயார் செய்யும் போது ஒரு முறைக்கு மேல் மீண்டும் மீண்டும் படியுங்கள். மந்தமாக இருக்காதீர்கள்.
சாதகமான மாதங்கள்: ஜனவரி, பிப்ரவரி, மார்ச், செப்டம்பர், அக்டோபர் பாதமான மாதங்கள்: ஏப்ரல், மே, ஜூலை, ஆகஸ்ட், டிசம்பர்
உங்களுக்கான தினசரி / வாராந்திர / மாதாந்திர / வருடாந்திர ராசி பலன்களை எங்கள் ஆஸ்ட்ரோவேட் செயலி (app) மூலமும் நீங்கள் பெற்று பயனடையலாம். ஆஸ்ட்ரோவேட் செயலியை ஆன்ட்ராய்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.