Rahu Ketu Transit 2023 – 2025 : 18-Month Period to Remedy Snake Planet Afflictions & Boost Success, Self-Growth & Balance Join Now
India's No. 1
Online Astrology &
Remedy Solution

புத்தாண்டு ராசி பலன்கள் 2019 – ரிஷபம் : Rishabam Rasi 2019 (Taurus )

May 31, 2018 | Total Views : 18,846
Zoom In Zoom Out Print

ரிஷப ராசி - பொதுப்பலன்கள் 2019 ஆம் ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு ஒரு மறக்கமுடியாத ஆண்டாக இருக்கும். உங்கள் முயற்சிகளில் நீங்கள் தனித்துவமான பாணியைக் கையாள்வீர்கள். முக்கிய விஷயங்களில் நீங்கள் எதிர்பார்க்கும் பலன்களைப் பெறுவதில் சில தாமதங்கள் ஏற்பட்டாலும் குருவின் செல்வாக்கு உங்களைக் காப்பாற்றும். இது உங்கள் வாழ்வில் ஒரு விசித்திர ஆண்டு ஆகும். உங்கள் ராசியிலிருந்து 8 வது வீட்டில் இருக்கும் சனி நற்பலன்களை அளிப்பார். உங்கள் ராசியிலிருந்து 7 வது வீட்டில் இருக்கும் குரு கெடு பலன்களை அளிப்பார். இந்த நிலையால் உங்கள் எல்லாச் செயல்களிலும் ஒரு மிதவை நிலை காணப்படும். முடிவடையாத அனைத்து பணிகளும் ஒன்றன் பின் ஒன்றாக முடிக்கப்படும். ஒரு கட்டத்தில் நீண்ட நெடும் நாட்களாக நிலுவையில் இருந்த பணி திடீரென்று எந்த தாமதமுமின்றி முடிவடைந்து உங்களை ஆச்சரியப்பட வைக்கும். அவ்வப்போது பின்னடைவுகளை நீங்கள் அனுபவித்தாலும், கடுமையான போராட்டத்தோடு அதனை எதிர்கொள்ளும் திறமை உங்களிடம் காணப்படும். தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். இந்த ஆண்டு முழுவதும் நல்ல நண்பர்கள் உங்களைச் சூழ்ந்து இருப்பார்கள்.

Rishabam Rasi Palan 2019

ரிஷப ராசி - வேலை உங்கள் தொழிலை பொறுத்தவரை உங்களுக்குப் பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படும். வியாபாரத்திலும் தேக்க நிலை இருக்கும். தினசரி லாபங்களினால் நீங்கள் திருப்தி அடைந்தாலும் நீங்கள் எதிர்பார்க்கும் வளர்ச்சி கணிசமாகக் குறையும். மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், கணிசமான அளவு இலாபங்கள் இருக்கும். மற்றவர்களுக்குப் பொறுப்புகளை வழங்குவதை விட உங்கள் கடின உழைப்பை நம்புங்கள். வியாபார பரிவர்த்தனைகளை எப்பொழுதும் கவனமாகக் கண்காணிக்கவும். வேலை இடத்தில் நேரம் தவறாமையை கடைபிடியுங்கள். உங்களுடைய சரியான வருகை கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக இருக்கும். அலுவலகத்தில் சர்ச்சைக்குரிய உரையாடல்களில் ஈடுபடாதீர்கள். 2019 ஆம் ஆண்டின் முதல் பாதியில் நீங்கள் வேலை நெறிமுறைகளைப் பராமரிக்கவும். நீங்கள் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகளை வேறு யாரிடமும் ஒப்படைக்காதீர்கள்.

ஒரு குறைந்த அளவு சம்பள உயர்வு கிடைக்கும் புதிய வேலையில் சேருவதற்கு உங்கள் தற்போதைய வேலையை விட்டுவிடாதீர்கள். புதியதாக வேலையில் உங்களை அமர வைப்பதில் தாமதத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. தாமதத்திற்கான காரணம் வெளிப்படுத்தப்படாமல் போகலாம். ஆண்டின் இறுதியில் வெகுமதிக்கான வாய்ப்புகள் இருக்கும்.

தொழில் மற்றும் வர்த்தகத்தில் வெற்றி பெற ஷரப ஹோமம்

ரிஷப ராசி - காதல் மற்றும் உறவுநிலை உறவு தொடர்பான விஷயங்களில் சகிப்புத்தன்மையும் விசுவாசமும் காண்பியுங்கள். காரியங்கள் விரைவாக நடக்க வேண்டும் என்பதற்காக அவசரப்படாதீர்கள். காதல் விவகாரங்களில் நீங்கள் எதிர்பாராத திருப்பங்களும் ஏற்படலாம். பிரச்சினைகளைப் பொறுமையுடன் சமாளிப்பதால் மனதளவில் நொறுங்கிப் போகாமல் இருப்பதற்கு எளிதாக இருக்கும். உங்கள் துணை உங்கள் குடும்பத்துடன் நல்லுறவு கொண்டிருப்பார். உங்கள் குடும்பமும் பச்சை கொடி காண்பிக்கும் நிலையில் இருக்கும். இரண்டு கைகளாலும் இந்த வாய்ப்பை வரவேற்று அள்ளிக்கொள்ளுங்கள். திருமணமான தம்பதிகளின் விஷயத்தில் இருவருக்கும் நல்ல புரிதல் இருக்கும். ஆனால் தவறாக புரிந்து கொள்வதால் திடீரென்று உறவு நிலையில் ஒரு திருப்பம் கூட ஏற்படலாம். நம்பிக்கை மற்றும் ஏற்றுக் கொள்ளுதல் ஆகியவையே உங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய அம்சங்களாகும்.
 
 
ரிஷப ராசி - நிதி நிலைமை பணம் கிடைப்பதில் தாமதங்கள் ஏற்படலாம். குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் சக ஊழியர்களுக்கு நீங்கள் கடனாக வழங்கிய பணத்தை திரும்பப் பெற நீங்கள் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். உங்களுக்குக் கடன்கள் இருந்தால் அவற்றைத் தீர்ப்பதற்கு அறியப்படாத ஆதாரங்களில் இருந்து பணம் கிடைக்கும். தெரியாத நபர்களுக்கு பணத்தை வழங்கவோ அல்லது கடனளிக்கவோ கூடாது. சூதாட்டத்தில் ஈடுபடாதீர்கள். நிலம் அல்லது சொத்து ஆகியவற்றில் முதலீடு செய்வது ஒரு நல்ல யோசனை ஆகும். ஒவ்வொரு மாதத்தின் ஆரம்பத்திலும் செய்யப்படும் செலவினங்களைத் தவிர்க்கவும். இது அதிக பணம் விரயம் ஆவதைத் தடுக்கும். வருடத்தின் ஆரம்பத்தில் இருந்தே பணத்தை சேமிக்கத் தொடங்குங்கள். இது ஜூன் மாதத்திற்குப் பிறகு ஏற்படும் தேவைகளை சமாளிக்க உதவும். பண விஷயங்களில் மூத்தவர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பது நல்லது. தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். அவசியமற்ற செலவுகளை தவிர்க்க வருவாய் திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்யலாம்.
 
 
ரிஷப ராசி - மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு நீங்கள் கல்வியில் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டும். சோம்பல் மற்றும் கவனச்சிதறல்கள் ஏற்பட்டு அதன் காரணமாக உங்கள் தெளிவான கவனிப்புத் திறன் குறையும். பெற்றோரும் மூத்தவர்களும் இவற்றைக் கருத்தில் கொண்டு, தங்கள் குழந்தைகளுக்கு நல்ல சூழலை உருவாக்கித் தர அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வியில் சிறந்து விளங்க இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு நீங்கள் அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
 
 
ரிஷப ராசி - ஆரோக்கியம் மன அழுத்தத்தை போக்குவதற்கு உங்கள் குடும்பத்தோடு அல்லது நண்பர்களுடன் வெளியில் சென்று நேரத்தைச் செலவழியுங்கள். பரபரப்பான நடவடிக்கைகளிலிருந்து ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டு உங்கள் உடலுக்குச் சிறு ஒய்வு அளிக்க இதுவே நல்ல நேரம். தீவிர உழைப்பைத் தவிர்க்கவும். அந்தி நேரத்தில் சுவாச பயிற்சி மற்றும் தியானம் மேற்கொள்ளுங்கள். இயற்கையைப் பின்பற்றுங்கள். இயற்கை அழகை ரசியுங்கள். கோபம், மன அழுத்தம் மற்றும் உங்களைச் சுற்றிவரும் வலி தரக்கூடிய கடந்த கால எண்ணங்கள் ஆகியவற்றிலிருந்து விலகுங்கள். மிகவும் காரமான உணவுகளைத் தவிர்க்கவும். வயிற்றின் கீழ் பகுதியில் சிறுநீரக தொற்று அல்லது அசௌகரியம் ஏற்படலாம். நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்க நிறையத் திரவ உணவுகளை உட்கொள்ளுங்கள். நெரிசலான பகுதிகளில் இருந்து விலகி இருங்கள். உங்கள் மனதைத் திசை திருப்ப நல்ல இசையைக் கேளுங்கள். வாகனத்தைப் பாதுகாப்பாக ஓட்டவும்.
 
 
சாதகமான மாதங்கள்: ஜனவரி, பிப்ரவரி, மார்ச், மே, ஜூலை, நவம்பர் பாதகமான மாதங்கள்: ஏப்ரல், ஜூன், ஆகஸ்ட், அக்டோபர்

உங்களுக்கான தினசரி / வாராந்திர / மாதாந்திர / வருடாந்திர ராசி பலன்களை எங்கள் ஆஸ்ட்ரோவேட் செயலி (app) மூலமும் நீங்கள் பெற்று பயனடையலாம். ஆஸ்ட்ரோவேட் செயலியை ஆன்ட்ராய்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

google play

Leave a Reply

Submit Comment